20வது மாநகராட்சியாக உருவானது தாம்பரம்
- தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் மற்றும் செம்பாக்கம் நகராட்சிகள், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை மற்றும் திருநீர்மலை பேரூராட்சிகள் மற்றும், 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாக, அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தாம்பரம் 20வது மாநகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
- தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக்கப்பட்டது குறித்த அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.
பிரிட்டனில் மகாத்மா காந்திக்கு சிறப்பு நினைவு நாணயம்
- மகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட, பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிரிட்டன் நிதி அமைச்சரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனாக், தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டார். அதற்கான மாதிரி நாணயத்தையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
- இந்த நாணயத்தில், இந்தியாவின் தேசிய மலரான தாமரையும், மகாத்மா காந்தியின் பொன்மொழி ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் போராடிய ஒருவருக்காக, பிரிட்டனில் நினைவு நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதன்முறையாகும்.
- 'தங்கம் மற்றும் வெள்ளியில் தயாரிக்கப்பட உள்ள இந்த நாணயம் நேற்று முதல் விற்பனைக்கு விடப்படப்பட்டிருக்கிறது'.
தென்னாப்ரிக்க எழுத்தாளரின் நாவலுக்கு புக்கர் பரிசு
- இலக்கியத் துறைக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில், புக்கர் பரிசுக்கு முக்கிய இடம் உண்டு. சிறந்த ஆங்கில படைப்புகளுக்கு, புக்கர் பரிசாக, ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப் பரிசு, 1969ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
- புக்கர் பரிசு 2021க்கு தென்னாப்ரிக்காவை சேர்ந்த டாமன் கல்கட்டின், 'தி பிராமிஸ்' நாவல், புக்கர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது
Post a Comment