அரசு கலைக்கல்லூரிகளில் எம்.எட். முடித்து பணிபுரியும் பேராசிரியர்கள் எத்தனை பேர்? விவரங்களை சேகரிக்கிறது கல்லூரிக்கல்வி இயக்ககம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எம்.எட். கல்வித்தகுதி பெற்றுள்ள பேராசிரியர்களை கொண்டு, அரசு கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு கல்லூரிக்கல்வி இயக்ககம் முடிவு செய்து இருக்கிறது. இதற்காக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எம்.எட். கல்வித்தகுதியுடன் பணிபுரியும் பேராசிரியர்கள் எத்தனை பேர்? என்ற விவரங்களை கல்லூரிக்கல்வி இயக்ககம் கேட்டு இருக்கிறது.
இந்த விவரங்களை உடனே அனுப்ப வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும், கல்லூரிக்கல்வி இயக்குனர் சி.பூரணசந்திரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Source: தினத்தந்தி
Post a Comment