-->

TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 01.03.2019 Download PDF

தமிழகம் 
அகில இந்திய அளவில் புகழ்பெற்ற தமிழகக் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிகப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டுகளுக்கான விருதுபெறும்   அகில இந்திய  அளவில் புகழ்பெற்ற  தமிழகக்கலைஞர்கள் பட்டியல்:
பாரதி விருது:  புலவர் புலமைப்பித்தன் (கவிஞர்- பாடலாசிரியர்),  கவிஞர் சுப்பு ஆறுமுகம் (வில்லிசை),  சிவசங்கரி (எழுத்தாளர்)
பாலசரஸ்வதி விருது: சி.வி.சந்திரசேகர் (பரதநாட்டியம்),  வைஜெயந்தி மாலாபாலி (பரதநாட்டியம்),  வி.பி.தனஞ்ஜெயன் (பரதநாட்டிய ஆசிரியர்)
எம்.எஸ். சுப்புலட்சுமி விருது:  எஸ்.ஜானகி (திரைப்படபாடகி),  பாம்பே சகோதரிகள் சி.சரோஜா- சி.லலிதா (கர்நாடக இசைக் கலைஞர்கள்),  டி.வி. கோபாலகிருஷ்ணன் (கர்நாடக இசைக் கலைஞர்).

மதுரை - சென்னை இடையே அதி நவீன ரயிலான தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி அவர்கள் காணொளி காட்சி மூலம் இன்று (01.03.2019) திறந்து வைக்கிறார்.

தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் திட்ட அனுமதிகளின் நிலவரம் குறித்து கண்காணித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள தனி இணையதளம் www.tnhouse.gov.in தொடங்கப்பட்டுள்ளது.

தேசியம் -  இந்தியா 
பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான் இன்று (01.03.2019) விடுதலை செய்யப்படுகிறார்.

ஜெனிவா நகரில் முதன் முதலாக 1864 ஆம் ஆண்டில் 12 நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டன. ஜெனிவா ஒப்பந்தத்தில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட மொத்தம் 196 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன.

நாடுமுழுவதும் வனப்பகுதிகளில் பழங்குடியின சமூகத்தினர், வனவாசிகள் என மொத்தம் 11.8 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில் செயல்படும் ஜம்மு -காஸ்மீர் ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

வணிகம் மற்றும் பொருளாதாரம் 
நாட்டின் பொருளாதர வளர்ச்சி விகிதம் 3 வது நிகழாண்டில் 6.6 சதவீதமாக குறைந்துள்ளது.

விளையாட்டு 
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றியது.

டி20 கிரிக்கெட் ஐசிசி சர்வதேச பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் லோகேஷ் ராகுல் 6ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்திய வீரர் லோகேஷ் ராகுல். இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் அதிரடி வீரர் பாபர் ஆஸம் முதலிடம் வகிக்கிறார்.

ஈரானில் நடைபெற்ற மாக்ரன் கோப்பை குத்துச் சண்டை போட்டியில், 49 கிலோ (லைட் ஃபிளை) எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் சிங் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இந்த குத்துச்சண்டை போட்டியில்  இந்தியாவுக்கு ஒரு தங்கம், 5 வெள்ளி கிடைத்துள்ளது.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting