-->

TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 13.01.2019 and 14.01.2019 Download PDF

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.

Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.

கல்வித் தொலைக்காட்சி: ஜனவரி 21 முதல் ஒளிபரப்பு தொடக்கம்
தமிழக பள்ளி கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. கல்வி தொலைக்காட்சிக்கான படப்பிடிப்பு தளம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வகை கேமராக்கள், படப்பிடிப்பு கருவிகள், ஹெலி கேமரா ஆகியவற்றுடன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

குரு கோவிந்த் சிங் நினைவாக இன்று நாணயம் வெளியீடு
10-ஆவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கின் 350-ஆவது பிறந்ததினத்தையொட்டி, அவரது நினைவாக தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி.13 அன்று நாணயம் வெளியிடுகிறார். முன்னதாக, பிகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற குரு கோவிந்த் சிங்கின் பிறந்ததின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது குரு கோவிந்த் சிங் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டார்.

ராஜஸ்தானில் தொடங்கியது 2 நாள் சர்வதேச ஒட்டக விழா
ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் சர்வதேச ஒட்டக விழா 12.01.2019 அன்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த விழாவைக் காண்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

10% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
பொருளாதரத்தில் பின் தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். நாடாளுமன்ற இரு அவைகனிலும் மசோதா நிறைவேறிய நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் கூறினார். இந்த சட்டம், மத்திய அரசு அறிவிக்கும் நாள் முதல் அமலுக்கு வரும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22-ஆவது நாளைக் கடந்தது அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம்: அமெரிக்க வரலாற்றில் முதல் முறை
அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம் 22-ஆவது நாளாக சனிக்கிழமை நீடித்தது. அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிக அதிக நாள்களுக்கு நீடித்த அரசுத் துறைகள் முடக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 570 கோடி டாலர் (சுமார் ரூ.45,125 கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். எனினும், ஜனநாயகக் கட்சியினர் அதனை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக, முக்கியத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால், அந்தத் துறைகள் கடந்த மாதம் 22-ஆம் தேதியிலிருந்து முடக்கப்பட்டுள்ளன.

அந்நியச் செலாவணி கையிருப்பு 39,608 கோடி டாலராக அதிகரிப்பு
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 4-ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற வாரத்தில் 39,608 கோடி டாலராக (ரூ.27.72 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

ஏர் இந்தியா: பயணிகள் மூலம் வருவாய் 20 சதவீதம் அதிகரிப்பு
விமானங்களை திறமையான முறையில் கையாண்டதன் விளைவாக நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் பயணிகள் மூலம் ரூ.5,538 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.4,615 கோடியாக மட்டுமே காணப்பட்டது. சிறப்பான செயல்பாடுகள் மூலம் ஏர் இந்தியாவின் பயணிகள் வருவாய் மூன்றாவது காலாண்டில் 20 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது

ஒரு நாள் ஆட்டத்தில் தோனி 10,000 ரன்கள்
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான எம்.எஸ்.தோனி ஒரு நாள் ஆட்டத்தில் (50 ஓவர்கள்) 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, ராகுல் திராவிட், விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-ஆவது இந்திய வீரர் தோனி ஆவார்.

தேசிய கையுந்து பந்துப் போட்டி: தமிழக அணி சாம்பியன்
விழுப்புரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கையுந்து பந்து இறுதிப் போட்டியில், பஞ்சாப் அணியை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில், 19-வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கிடையே, தேசிய அளவிலான 64-ஆவது கையுந்து பந்துப் போட்டிகள், விழுப்புரத்தில் நடைபெற்றது.

சிட்னி டென்னிஸ் - குவித்தோவா சாம்பியன்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசு வீராங்கனை பெத்ரா குவித்தோவா சாம்பியன் பட்டம் வென்றார். சிட்னி தொடரில் அவர் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

புதுவையில் மார்ச் 1 முதல் நெகிழிப் பொருள்களுக்குத் தடை
புதுவையில் 2019, மார்ச் 1 முதல் நெகிழி (பிளாஸ்டிக்-குவளைகள், தட்டுகள், விரிப்புகள், பைகள்) பொருள்களுக்குத் தடை விதிக்க அரசு முடிவு எடுத்துள்ளது என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு
விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூருக்கு அருகேயுள்ள வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான தாவரங்களை அகற்ற நிபுணர் குழு: உயர்நீதிமன்றம் அமைத்தது
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அயல்நாட்டுத் தாவரங்களை முழுவதுமாக அகற்ற, சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் செருகுரி ராகவேந்திர பாபு தலைமையில் இந்திய அறிவியல் மற்றும் கல்வி மையத்தின் பேராசிரியர் வி.வி.ராமன், புதுச்சேரி பல்கலைக்கழகச் சுற்றுச்சூழல் துறை பேராசிரியை பிரியா தேவிதார் உள்ளிட்டோர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா
பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா 13.01.2019 அன்று தொடங்கியது. பொள்ளாச்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. சுற்றுலாத் துறை, தனியார் நிறுவனங்கள் இணைந்து பலூன் திருவிழாவை நடத்தி வருகின்றன. தொடர்ந்து 15.01.2019 வரை இந்த பலூன் திருவிழா நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மத்திய அரசு விருது
மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியதற்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. "பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; படிக்க வைப்போம்" என்ற மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியதற்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 24 ம் தேதியன்று டில்லியில் நடக்கும் விழாவில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி இந்த விருதினை பெற உள்ளார்.

இந்திய-சீன எல்லையில் 44 சாலைகள்: ரூ.21,000 கோடியில் அமைக்க மத்திய அரசு திட்டம்
போர்க் காலங்களில் இந்தியப் படைகள் விரைந்து முன்னேறுவதற்கு வசதியாக, இந்திய-சீன எல்லைப் பகுதி பாகிஸ்தான் எல்லையை ஒட்டி சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியா-சீனா இடையேயான எல்லை, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தொடங்கி அருணாசலப் பிரதேசம் வரை சுமார் 4,000 கி.மீ. நீளம் கொண்டது. இந்த எல்லையை ஒட்டிய பகுதிகளில் ரூ.21,000 கோடி செலவில் 44 சாலைகள் அமைக்கப்படவுள்ளன. அந்தச் சாலைகள், ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் அமைக்கப்படவுள்ளன. இந்திய-பாகிஸ்தான் இடையேயான எல்லை, ஜம்மு-காஷ்மீரில் தொடங்கி குஜராத் வரை 2,100 கி.மீ. தொலைவு கொண்டது. இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ரூ.5,400 கோடி செலவில் சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

முத்தலாக் அவசரச் சட்டம் மறுபிரகடனம்
முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு மீண்டும் பிறப்பித்துள்ளது. முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை தலாக் என்று கூறி மனைவியை உடனடியாக விவாகரத்து செய்யும் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்க வகை செய்யும் முத்தலாக் தடை மசோதா, மக்களவையில் கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அரசால் நிறைவேற்ற முடியவில்லை.

பேட்டரி வாகனச் சந்தை விரிவாக்கம்: சீனா பங்களிக்க இந்தியா அழைப்பு
2030-ஆம் ஆண்டில் இந்தியாவில் பேட்டரி வாகனப் போக்குவரத்தை சாத்தியமாக்க திட்டமிடப்பட்டு வரும் நிலையில், நாட்டில் பேட்டரி வாகனச் சந்தை விரிவாக்கத்தில் சீனா பங்களிப்பு செய்ய இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

"டிஜிட்டல் முறை விவசாயக் கடன் தள்ளுபடி பணியால் ரூ.12,000 கோடி சேமிப்பு'
டிஜிட்டல் தளம் வழியாக விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், ரூ.12,000 கோடி சேமிக்கப்பட்டது என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றங்களில் 73 பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்: நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல்
நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 670 நீதிபதிகள் உள்ளனர்; இவர்களில் 73 பேர் மட்டுமே பெண்கள் என்று நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2018 மார்ச் மாத நிலவரப்படி நாட்டில் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் 1,079 நீதிபதிகளை நியமிக்க அனுமதி உள்ளது. ஆனால், இப்போது 670 நீதிபதிகளே பணியில் உள்ளனர். இவர்களில் 73 பேர் மட்டுமே பெண் நீதிபதிகள். 409 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பெண்கள் 10.89 சதவீதம் மட்டுமே உள்ளனர். மாநில ஆளுநரும், முதல்வரும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இருந்து வரும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரையை 6 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்பது இப்போதுள்ள விதியாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி ஆந்திரம் மற்றும் தெலங்கானாவுக்கு தனித் தனியாக உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

10% இட ஒதுக்கீடு: குஜராத்தில் 14.01.2019 முதல் அமல்
பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு அளிக்கப்பட்டுள்ள 10 சதவீத இட ஒதுக்கீடு, குஜராத்தில் திங்கள்கிழமை முதல் ஜனவரி.14, 2019 அன்று அமல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம், அந்தச் சட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக அமல்படுத்தும் மாநிலம் எனும் பெருமை குஜராத்துக்கு கிடைக்கிறது

லடாக்கில் உலகின் மிகப்பெரிய சோலார் திட்டம்
எல்லை பகுதியான லடாக்கில் உலகின் மிகப் பெரிய சோலார் திட்டத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் 12,750 டன் கார்பனை கட்டுப்படுத்தவும், டீசல் சார்ந்த ஜெனரேட்டர்களின் பயன்படாட்டை குறைக்கவும் கார்கிலுக்கு கிழக்கே 200 கி.மீ., தூரம் வரை சோலார் திட்டத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் உள்ள டெங்கர் பாலைவன சோலார் பூங்காவே உலகின் மிகப் பெரிய சோலார் மின்உற்பத்தி திட்டமாக கருதப்படுகிறது. இதில் 1547 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. லடாக்கில் 5000 மெகாவாட் மின்திறன் கொண்ட சோலார் திட்டத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் ரூ.45000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த திட்டம் 2023 ம் ஆண்டில் நிறைவடைய உள்ளது.

மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும்
இந்தியா-மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் இடையிலான முதலாவது பேச்சுவார்த்தை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ், மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

நிலவின் இரவு நேர குளிர் நிலை: அளவிடுகிறது சீன ஆய்வுக் கலம்
நிலவில், இரவு நேரத்தின்போது நிலவும் குளிர் நிலையை சீன ஆய்வுக் கலம் அளவிடவிருப்பதாக அந்த நாட்டு விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவினுடைய பின் பகுதியில் தரையிறங்கி ஆய்வுகள் மேற்கொண்டு வரும் சீனாவின் சாங் இ-4 விண்கலம் இந்த அளவீட்டை மேற்கொள்ளவிருக்கிறது.
  • நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 14 நாள்களுக்கு சமமாகும். அதுபோலவே, ஓர் இரவு என்பதும் 14 நாள்களுக்கு நீடிக்கும். எனவே, அந்தத் துணைக் கோளில் பகலின்போது மிக அதிக வெப்பமும், இரவில் மிக அதிக குளிரும் நிலவும். நிலவின் வெப்பநிலை பகல் நேரத்தில் அதிகபட்சமாக 127 டிகிரி செல்ஷியஸம், இரவு நேரத்தில் அதிகபட்சமாக மைனஸ் 183 டிகிரி செல்ஷியஸýமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தோராயமாகக் கணித்துள்ளனர்.
ஐடிஎஃப்சி வங்கி "ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் ' என பெயர் மாற்றம்
தனியார் துறையைச் சேர்ந்த ஐடிஎஃப்சி வங்கியின் பெயர் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி என மாற்றம் குறித்த அறிவிப்பு ஜனவரி.12, 2019 முதல் அமலுக்கு வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்துக்கு கம்பெனி பதிவாளர் சென்னை அலுவலகம் அனுமதி சான்றிதழ் வழங்கியுள்ளது.

Related Posts

Post a Comment

Labels

General Knowledge 902 General Studies 719 Central Govt. Job 308 General Tamil 177 Mock Test 133 PAPER - I 120 Civics 101 Indian Constitutions 91 Library Science Quiz 80 Anna University Jobs 72 Library and Information Science Paper II 71 Librarian Jobs 69 Computer Science Quiz 64 History Quiz 59 General English 56 NEET 2017 Model Questions 53 Geography 45 Library and Information Science 35 Computer Science 34 Computer Science PAPER - III 32 History Paper II 32 6th Tamil 30 Computer Science PAPER - II 22 Library and Information Science Paper III 19 PAPER - II 18 10th Science 17 General Science Mock Test 17 Life Science Quiz 17 6th Standard Science 16 9th Science 14 Nobel Awards 14 CBSC NET 13 History Mock Test 13 PAPER - III 13 Medical Physicist 12 Economics Paper II 10 8th Science 9 7th Tamil 8 Commerce Paper-2 8 Economics Paper III 8 History Paper III 8 NCERT Text Book 8 General Tamil Quiz 7 Home Science Paper II 7 Labour Welfare Paper III 7 8th Tamil 6 Anthropology Paper II 6 Anthropology Paper III 6 Arab Culture and Islamic Studies Paper II 6 Arab Culture and Islamic Studies Paper III 6 Archaeology Paper II 6 Archaeology Paper III 6 Comparative Literature Paper II 6 Comparative Literature Paper III 6 Comparative Study of Religions Paper II 6 Comparative Study of Religions Paper III 6 Criminology Paper II 6 Criminology Paper III 6 Education Paper - II 6 Education Paper - III 6 English Paper - II 6 English Paper - III 6 Environmental Sciences Paper - II 6 Environmental Sciences Paper - III 6 Forensic Science Paper II 6 Forensic Science Paper III 6 Geography Paper II 6 Geography Paper III 6 Home Science Paper III 6 Human Rights and Duties Paper II 6 Human Rights and Duties Paper III 6 Indian Culture Paper - II 6 Indian Culture Paper - III 6 International and Area Studies Paper II 6 International and Area Studies Paper III 6 Labour Welfare Paper II 6 Law Paper - II 6 Law Paper - III 6 Management Paper - II 6 Management Paper - III 6 Mass Communication Paper II 6 Mass Communication Paper III 6 Museology and Conservation Paper II 6 Museology and Conservation Paper III 6 Music Paper II 6 Music Paper III 6 Performing Arts Paper II 6 Performing Arts Paper III 6 Philosophy Paper II 6 Philosophy Paper III 6 Physical Education Paper - II 6 Physical Education Paper - III 6 10th Tamil 5 Commerce Paper-3 5 Folk Literature Paper II 5 Folk Literature Paper III 5 Geography Mock Test 5 Linguistics Paper II 5 Linguistics Paper III 5 7th Science 4 9th Tamil 4 Chemistry 4 Geography Quiz 4 11th Tamil 3 6th Standard History 3 7th Tamil Mock Test 3 9th standard Tamil Quiz 3 CSIR-NET - Chemistry 3 Computer Science Video 2 Mathematics Paper II 2 CSIR-NET - Physics 1 Civil Engineer Mock Test 1 Computer Science Paper II 1 General Knowledge Mock Test 1 Geology 1 Interview Questions 1 January Current Affairs - 2016 1 LIS Questions 1 Library Science Paper II 1 Life Science 1 Life Science Paper II 1 Mathematics Quiz 1
Subscribe Our Posting