Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கவுன்சில் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை
தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
சாஸ்த்ராவில் வானலை அமைப்பு பொறியியல் உயராய்வு மையம் தொடக்கம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ரூ. 28 கோடி மதிப்பில் வானலை அமைப்புப் பொறியியல்(RADIO FREQUENCY ENGINEERING) உயராய்வு மையம் 04.01.2019 அன்று தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டில் 2,572 பேர் ரயில் விபத்துகளில் உயிரிழப்பு:
தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு மட்டும் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் 2,572 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கவனக்குறைவாக ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்தல், செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு செல்லுதல், தண்டவாளத்தில் நடப்பது, சுயபடம் (செல்பி) எடுப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
ஆதார் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
வங்கி கணக்கு தொடங்கவும், செல்லிடப்பேசி இணைப்பு பெறுவதற்கும் ஆதாரை விருப்பத்தின் பேரில் அளிக்க அனுமதிக்கும் ஆதார் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் 04.01.2019 அன்று நிறைவேற்றப்பட்டது.
நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
நாட்டில் நிறுவனங்கள் தொழில் செய்வதை எளிதாக்க வழிவகுக்கும், நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் 04.01.2019 அன்று நிறைவேற்றப்பட்டது.
வல்லபபாய் படேல் சிலை அமைக்க மத்திய அரசு ரூ.300 கோடி பங்களிப்பு
குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள வல்லபபாய் படேலின் சிலை(ஒற்றுமைக்கான சிலை) அமைப்பதற்கு மத்திய அரசு சார்பில் ரூ. 300 கோடி வழங்கப்பட்டதாக 04.01.2019 அன்று மக்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் 5 மாநிலங்களில் அகில இந்திய வானொலி நிலையத்தை மூடுகிறது மத்திய அரசு
குஜராத் மாநிலம் அகமதாபாத், தெலங்கானாவின் ஹைதராபாத், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ, கேரளத்தில் திருவனந்தபுரம், மேகாலயாவின் ஷில்லாங் ஆகிய நகர்ப்பகுதிகளில் இயங்கி வந்த அகில இந்திய வானொலி நிலைய அலுவலகங்களை மூடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 119 கோடி
தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2018 அக்டோபர் மாத நிலவரப்படி 119.2 கோடியாக அதிகரித்துள்ளது என டிராய் தெரிவித்துள்ளது.
சர்க்கரை உற்பத்தி 7 சதவீதம் அதிகரிப்பு
இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தின் முதல் காலாண்டில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
கனரா ரொபேகோ: நிர்வாகக் குழு தலைவரானார் ஜே. பாலசுப்ரமணியன்
கனரா ரொபேகோ பரஸ்பர நிதி நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக ஜெயராமன் பாலசுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
17–வது ஆசிய கோப்பை கால்பந்து: ஐக்கிய அரபு அமீரகம்
17–வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 05.01.2019 முதல் 01.02.2019 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. 4 நகரங்களில் உள்ள 8 ஸ்டேடியங்களில் இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, 4 முறை சாம்பியனான ஜப்பான் உள்பட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த முறை 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் அணிகளின் எண்ணிக்கை முதல்முறையாக 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
ரொனால்டோவுக்கு சிறந்த வீரர் விருது
சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு 'குளோப் சாக்கர் அவார்ட்ஸ்' விருது வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான இவ்விருதுக்கு (உலகின் சிறந்த கால்பந்து விருது) ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment