Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்எழுத்தாளர் சாந்தனுக்கு பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் விருது
இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஐ.சாந்தனுக்கு பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் விருது 30.01.2019 அன்று வழங்கப்பட்டது. ஹிந்தி மொழியின் பிரபல எழுத்தாளர் பிரேம் சந்த். இவரது நினைவாக சார்க் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஐ.சாந்தனுக்கு 2017-ஆம் ஆண்டுக்கான பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் விருது அறிவிக்கப்பட்டது.
ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்த அமெரிக்க மாகாணம்
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். எனவே அதனைச் சிறப்பிக்கும் விதமாக ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவிக்க வேண்டும் என அங்குள்ள தமிழ்ச்சங்கம் மாகாண ஆளுநருக்கு கோரிக்கை விடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக மாநில ஆளுநராக உள்ள ராய் கூப்பர் தமிழ்ச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, நடப்பு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிப்ரவரி 11-இல் இந்தியா வருகை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசு முறை பயணமாக பிப்ரவரி 11-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசுகிறார். முன்னதாக, கடந்த 2017-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதையடுத்து இஸ்ரேலுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். அதையடுத்து கடந்த ஆண்டு 2018 ஜனவரி மாதம் நெதன்யாகு அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார்.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஹிந்து திருமணங்களுக்கு வெளிநாட்டு நீதிமன்றங்களில் விவாகரத்து கோர முடியாது: மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி
இந்தியாவில் ஹிந்து முறைப்படி நடைபெற்று, பதிவு செய்யப்பட்ட திருமணங்களுக்கு, வெளிநாட்டு நீதிமன்றங்களில் விவாகரத்து கோரி வழக்குத் தொடர முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் இடைக்கால நிதியமைச்சர்
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால், இந்த 2019 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: ஆறாகப் பாய்ந்தோடும் தீக்குழம்பு
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்தா என்ற இடத்தருகே மவுண்ட் மிராபி என்ற எரிமலை உள்ளது. 2,968 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த எரிமலை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அவ்வப்போது சீறி நெருப்பை கக்கி வருகிறது. இந்த எரிமலை கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் சீற்றமடைந்து பொங்கத் தொடங்கியது. இதுவரை இல்லாத அளவில் சீற்றம் அதிகமாகக் காணப்படுவதால், எரிமலை தீக்குழம்பு வெடித்துச் சிதறி ஆறு போல பாய்ந்தோடுகிறது.
ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் ரஷிய கிராண்ட் மாஸ்டர் விளாடிமிர் கிராம்னிக்
முன்னாள் செஸ் உலக சாம்பியனான ரஷிய கிராண்ட் மாஸ்டர் விளாடிமிர் கிராம்னிக், ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 43 வயதான கிராம்னிக், 2000-ம் ஆண்டு முதல் 2007 வரை உலக சாம்பியனாக விளங்கினார். 2008-ல் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கிராம்னிக்கைத் தோற்கடித்து உலக செஸ் சாம்பியன் ஆனார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.
அணு ஆயுதங்களை செலுத்தும் திறனுடன் கூடிய போர் கப்பல் தயாரிக்க ஒப்பந்தம்
அணு ஆயுதங்களை செலுத்தும் திறனுடன் கூடிய, இரண்டு போர்க் கப்பல்கள் தயாரிக்க, அரசு நிறுவனமான, 'கோவா ஷிப்யார்'ட்டுடன், ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியோடு, 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்த கப்பல்கள் தயாரிக்கப்பட உள்ளன
'ககன்யான்' திட்டம் பயிற்சி அளிக்கும் சிறப்பு மையம்: பெங்களூரு
வரும், 2021ல், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும், 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்த, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தயாராகி வருகிறது. இதற்காக தேர்வு செய்யப்படுவோருக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையம், பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒலியை விடவேகம்; சீனாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனை வெற்றி
ஒலியை விட அதிக வேகமாக அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணையை சீனா மீண்டும் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. டி எப் 26 என்ற அந்த ஏவுகணை ஏவப்பட்ட இடத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகக் தாக்கியது. 3 ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 5 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும் இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் எந்த நகரத்தையும் தாக்கும் வல்லமையை சீனா பெற்றுள்ளது. தரையிலிருந்து கனரக வாகனங்கள் மூலமும், விமானத்தில் எடுத்துச் சென்றும் டி எப் 26 ஏவுகணையை செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் நாடுகள் பட்டியல்: 78 வது இடத்தில் இந்தியா
ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பு உலகம் முழுவதும் ஊழல் அதிகம் உள்ள 180 நாடுகளின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. 2018 ம் ஆண்டிற்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இந்தியா 81 வது இடத்தில் இருந்து 78 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் சீனா 87 வது (கடந்த ஆண்டு 77 வது இடம்) இடத்திலும், பாகிஸ்தான் மாறாமல் கடந்த ஆண்டு இருந்த 117 இடத்திலும் உள்ளன. ஊழல் மிகுந்த ஆசிய நாடுகளை பொறுத்தவரை மலேசியா 47 வது இடத்திலும், மாலத்தீவு 31 வது இடத்திலும், பாகிஸ்தான் 33 வது இடத்திலும், இந்தியா 41 வது இடத்திலும் உள்ளன.

- ஊழல் மிகக்குறைந்த நாடுகளில் டென்மார்க், நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முதலிரண்டு இடத்தையும், சிரியா, சூடான் ஆகிய நாடுகள் கடைசி இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment