-->

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2021-இல் செயல்படுத்தப்படும்:இஸ்ரோ

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2021-இல் செயல்படுத்தப்படும்
2021-ஆம் ஆண்டில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

இஸ்ரோவின் சாதனை 
இந்திய விண்வெளி ஆய்வு மையம், கடந்த 2018-ஆம் ஆண்டில் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 18 திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். இதில் 7 ராக்கெட், 9 விண்கலங்கள், ஒரு வெள்ளோட்டத் திட்டம் அடங்கும். இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் தற்போது 47 விண்கலங்கள் செயல்பட்டு வருகின்றன. 

தேசிய அளவிலான திட்டம் 
தேசிய அளவிலான 158 திட்டங்களில் 94-ஐ நிறைவேற்றியுள்ளோம். உன்னதி என்ற புதிய திட்டத்தை ஜன.17-ஆம் தேதி தொடங்கவிருக்கிறோம். இத் திட்டத்தில் 45 நாடுகள் பங்கேற்கவிருக்கின்றன. நாடு முழுவதும் 6 விண்வெளி சிக்கல் தீர்வு மையங்களைத் திறக்கவுள்ளோம். முதல் மையம் திரிபுராவில் அகர்தலாவில் தொடங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 5 மையங்கள் அடுத்தடுத்து திறக்கப்படும். 

மத்திய அரசு நிதி 
நிகழ் நிதியாண்டில் இஸ்ரோவின் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. இதில் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, மார்க்-3 போன்ற ராக்கெட்டுகளைத் தயாரிக்க ரூ.10 ஆயிரம் கோடி, விண்கலங்களைத் தயாரிக்க ரூ.10 ஆயிரம் கோடி, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting