- மேரி கோம் இயற்பெயர்: மேன்க்டே சன்ங்நேஜாங்க மேரி கோம் (Mangte Chungneijang Mary Kom)
- அனைவராலும் அழைக்கப்படும் பெயர்: மேக்னிபிஷியன்ட் மேரி
- பிறப்பு: மார்ச் 1, 1983
- வயது: 35
- மாநிலம்: இந்தியாவின் மணிப்பூர்
- விளையாட்டு: குத்துச்சண்டை வீராங்கனை
- குழந்தைகள் : மூன்று குழந்தைகள் உள்ளனர்
- மேரி கோம்மின் சுயசரிதை நூலின் பெயர்:‘அன்பிரேக்கபிள்’ (unbreakable) 2013 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
மேரி கோம் வெற்றி பதக்கங்கள்: 7 பதக்கங்கள்
- தங்கம் - 6
- வெள்ளி - 1
- 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கசக்ஸ்தான் வீராங்கனை ஷெகரேபேகோவாவை வீழ்த்தித் தங்கப் பதக்கம் பெற்றார்.
- 2018 உலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில் 8 கிலோ எடைப் பிரிவு இறுதிச் சுற்றில் உக்ரைன் வீராங்கனை ஹன்னாவை வீழ்த்தித் தங்கப் பதக்கம் பெற்றார்.
மேரி கோம் பெற்ற விருதுகள்
- அர்ஜுனா விருது - 2004
- பத்மஸ்ரீ விருது - 2006
- ராஜுவ்காந்தி கேல் ரத்னா விருது - 2009
- 2010-ம் வருடத்தின் சிறந்த விளையாட்டு வீராங்கனை - சஹாரா விளையாட்டு விருதுகள்.
கேத்தி டெய்லரின் சாதனை முறியடிப்பு
- அயர்லாந்தின் கேத்தி டெய்லரும் உலகப் போட்டிகளில் 5 தங்கம், ஒரு வெண்கலம் வென்றிருந்தார். மேரியும் 5 தங்கம், 1 வெள்ளிப்பதக்கத்துடன் 6 பதக்கங்கள் சமமாக இருந்த நிலையில் தற்போது 6-ஆவது முறையாக தங்கம் வென்று 7-ஆவது பதக்கத்துடன் அதிக பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்ற புதிய சாதனையை படைத்தார்.
- 2001 - உலக குத்துச்சண்டைப் போட்டிகள் 51 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி
- 2002 - உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி
- 2005 - உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி
- 2006 - உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி
- 2008 - உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி
- 2010 - உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி
- 2018 - உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி
- 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார்.
உலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில் மேரி கோம் உலக சாதனை
- புது தில்லியில் நடைபெற்று வரும் உலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில் 6-ஆவது முறையாக தங்கப் பதக்கம் வென்று மீண்டும் சாம்பியன் ஆனார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேக்னிபிஷியன்ட் மேரி என அனைவராலும் அழைக்கப்படும் மேரி கோம். ஏற்கெனவே 5 முறை தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள அவர் சனிக்கிழமை நடைபெற்ற (24.11.2018) 48 கிலோ இறுதிச் சுற்றில் உக்ரைன் வீராங்கனை ஹன்னாவை (5-0) என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் அவர் உலகப் போட்டியில் 7-ஆவது பதக்கம் வென்று புதிய சாதனையும் படைத்தார். 6 தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார் மேரி.