Type Here to Get Search Results !

TNPSC Current Affairs Today in Tamil Medium July 29th, 2018

TNPSC Current Affairs Today in Tamil Medium Download PDF 

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் 116 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக பாகிஸ்தானின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீத் -ஏ -இன்சாப் கட்சி உருவெடுத்துள்ளது. 

புரிந்துணர்வு ஒப்பந்தம் 
சென்னையில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்பம் வடிவமைப்பு உற்பத்தி கல்வி நிறுவனமும், ஜப்பான் நாட்டின் நாகசாகி பல்கலைக்கழகமும் இணைந்து கல்வி ஆராய்ச்சி பரிமாற்றத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

முதல் காற்று சுத்திகரிப்பான் கருவி
சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் இடம்பெற்றுள்ள ஏர்.ஓ.கே. நிறுவனம் 'விஸ்டர்' 550' என்ற காற்று சுத்திகரிப்பான் கருவியை வடிவமைத்துள்ளது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் காற்று சுத்திகரிப்பான் கருவி இதுவே ஆகும்.

உயர்கல்வி சேர்க்கை - அறிக்கை 
அகில இந்திய உயர் கல்வி சர்வே (ஆயிஷா) யின் படி நடப்பாண்டில் (2017-2018) இந்தியாவில் உயர்கல்வி சேர்க்கையிலும், பெண்கள் உயர்கல்வி சேர்க்கையிலும்  தமிழகம் இரண்டாம் இடம் வகித்துள்ளது. முதலிடத்தில் சண்டிகர் முதலிடத்தை வகிக்கிறது.

இந்தியாவில் உயர்கல்வி சேர்க்கையில் மாநிலங்கள் பெற்றுள்ள தரவரிசை.
1. சண்டிகர் (45.4)
2. தமிழ் நாடு  (45.4)
3. தில்லி  (45.4)
4. புதுச்சேரி  (45.4)
5. ஹிமாச்சல் பிரதேஷ்  (37.9)

பெண்கள் உயர்கல்வி சேர்க்கையில் மாநிலங்கள் பெற்றுள்ள தரவரிசை
1. சண்டிகர் (67.7)
2. தமிழ் நாடு (48.2)
3. புதுச்சேரி (48.1)
4. தில்லி (48)
5. ஹிமாச்சல் பிரதேஷ் (42.2)

உயிர்சக்தி டீசல் இயந்தரம் - ராணுவத்துக்கு அர்ப்பணிப்பு 
சென்னை ஆவடி இயந்திர தொழிற்சாலையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முற்றுலும் உள்நாட்டிலேயை தயாரிக்கப்பட்ட உயிர்சக்தி டீசல் இயந்தரங்களை (டி-72, டி-90) ராணுவத்துக்கு அர்ப்பணித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

திப்பு சுல்தான் காலத்திய ராக்கெட்டுகள் கண்டு பிடிப்பு 
பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சுமார் 1000 ராக்கெட்டுகள் கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் பிதானுறு கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டுகள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. 

TRAI தலைவர் 
தற்போதைய இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (TRAI) தலைவராக ஆர்.எஸ்.ஷர்மா உள்ளார்.

இந்தியா - நேபாளம் சிந்தனையாளர்கள் மாநாடு
இந்தியா - நேபாளம் சிந்தனையாளர்கள் மாநாடு நேபாளத்தலைநகர் காத்மாண்டுவில் 31.07.2018 ல் தொடங்குகிறது. இம்மாநாட்டை நேபாளத்தைச் சேர்ந்த 'Asian Institute of Diplomacy & International Affairs ' அமைப்பும், இந்திய நேரு நினைவு அருங்காட்சியகமும் இணைத்து நடத்துகிறது.

ஆதார் சட்டத்தில் திருத்தம் - ஸ்ரீ கிருஷ்ணா குழு
தகவல் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு ஸ்ரீ கிருஷ்ணா குழு. இக்குழு ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. 

மத்திய கொள்கைக்குழு (நீதி ஆயோக்) தலைவர் - அறிக்கை 
  • மத்திய கொள்கைக்குழு (நீதி ஆயோக்) தலைவராக அமிதாப் காந்த் உள்ளார். இவர் கூறியுள்ளதாவது கல்வி, சுகாதாரம் மற்றும் தனிமனித ஆயுட்காலம் உள்ளிட்டவற்றில் ஐ.நா. அறிக்கையின் படி சர்வதேச அளவில் 131-ஆவது இடத்தில உள்ளது. 
  • இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் தற்போது 200 பின்தங்கிய மாவட்டங்கள் உள்ளது.
ஒடிசா மாநில உணவுப் பாதுகாப்பு சட்டம் - அமல் 
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் மாநில உணவுப் பாதுகாப்பு சட்டம் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 

இன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகள்
  • சர்வதேச புலிகள் தினம் 
  • தாய்லாந்து, தாய்மொழி தினம் 
  • ருமேனியா தேசிய கீத தினம் 
  • அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது (1959) 
  • பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது (1957)
Important Current Affairs July 2018: www.tnspcmaster.com

Post a Comment

0 Comments

Labels