TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 09.06.2018. TNPSC தேர்வினை மையமாக கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இங்கு வெளியிடப்படும் நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வுக்கு மட்டுமல்லாது அணைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (UPSC, TRB, RRB, SSC, IBPS) பயனுள்ளதாக இருக்கும். வர இருக்கிற போட்டித்தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER சார்பாக வாழ்த்துக்கள்...
பசிபிக் கமாண்ட் பெயர் மாற்றம் - அமெரிக்கா
'பசிபிக் கமாண்ட்' என்ற அமெரிக்க ராணுவத்திட்டத்தின் பெயரை 'இந்தோ - பசிபிக் கமாண்ட்' என்று பெயர் மாற்றம் செய்துள்ளது அமெரிக்கா.
அந்தியோதயா ரயில் சேவை தொடக்கம் மற்றும் தாம்பரம் ரயில் முனையம் அர்ப்பணிப்பு
தாம்பரம் - திருநெல்வேலி அந்தியோதயா ரயில் சேவையை ரயில்வே இணை அமைச்சர், மத்திய நிதி கப்பல் துறை இணை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
தாம்பரம் ரயில் முனையத்தை நாட்டிற்கு 08.09.2018 அன்றுஅர்ப்பணித்தனர்.
சென்னை மாநகராட்சிக்கு ஜெர்மன் விருது
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஜெர்மன் நாட்டின் ' The Transformative Urban Mobility Initiative' என்ற விருது கிடைத்துள்ளது.
சென்னை ஆவடியில் சூரிய மின் உற்பத்தி மையம்
சென்னை ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் 16 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் உற்பத்தி மையம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் 08.06.2018 அன்று தொடங்கி வைத்தார்.
அம்மா உடல் பரிசோதனை மையம் - சென்னை
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவ மனையில் அம்மா உடல் பரிசோதனை மையம் முதல்வர் அவர்களால் 08.06.2018 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் கீழ்கண்ட உடல் பரிசோதனை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
- அம்மா கோல்ட் - ரூ.1000/-
- அம்மா டைமண்ட் - ரூ.2000/-
- அம்மா பிளாட்டினம் - ரூ.3000/-
சர்வதேச கடல் தினம் - ஜூன் 8
கடல் மற்றும் கடல் சார்ந்த உயிரினங்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் நாள் சர்வதேச கடல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலக பல்கலை தரவரிசை பட்டியல் - முதல் 200 ல் 3 இந்திய பல்கலைக்கழகங்கள்.
கியூ.எஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பல்கலை தரவரிசை பட்டியலில் முதல் 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் கீழ்க்கண்ட மூன்று பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
1. இந்திய தொழில் நுட்ப நிறுவனம், மும்பை (IIT, Mumbai) - 162 வது இடம்
2. இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு (IISc, Bangalore) - 170 வது இடம்
3. இந்திய தொழில் நுட்ப நிறுவனம், தில்லி (IIT, Delhi) - 162 வது இடம்
'உதய் எக்ஸ்பிரஸ்' இரண்டடுக்கு ரயில் சேவை - தொடக்கம்
இரண்டடுக்கு வசதி கொண்ட உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கோவை - பெங்களூரு இடையே 08.06.2018 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இந்திய நிலத்தடி நீர் வளங்களில் - யுரேனியம் கலப்பு
இந்தியாவில் உள்ள 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீர் வளங்களில் அதிகமான யுரேனிய கலப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் ஒரு லிட்டர் குடிநீரில் 30 மைக்ரோ கிராம்களுக்கு மிகாமல் இருந்தால் அது பாதுகாப்பான குடிநீர் என்று உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது.
இந்திய எம்பிக்கள் குழு - நல்லெண்ண பயணம்
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழுபெலாரஸ், லாத்வியா மற்றும் பின்லாந்து நாடுகளுக்கு நல்லெண்ண பயணமாக 08.06.2018 அன்று புறப்பட்டனர்.
Post a Comment