Ads 720 x 90

TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 05.05.2018

TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 05.05.2018. TNPSC  தேர்வினை மையமாக கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.  இங்கு வெளியிடப்படும் நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வுக்கு மட்டுமல்லாது அணைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (UPSC, TRB, RRB, SSC, IBPS) பயனுள்ளதாக இருக்கும். வர இருக்கிற போட்டித்தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER சார்பாக வாழ்த்துக்கள்...

இன்றைய நடப்பு நிகழ்வுகளின் முக்கிய தலைப்புகள் Date: 05.05.2018.

காய்கறிக் கண்காட்சி - கோத்தகிரி
  • நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோடை விழாவின் கொண்டாட்டமாக தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் 10-வது ஆண்டு காய்கறிக்கண்காட்சி இன்று மே 5 (சனிக்கிழமை) தொடங்குகிறது.
அதானி துறைமுகங்களின் தலைமை செயல் அதிகாரி - பொறுப்பேற்பு 
  • தென்னிந்தியாவில் உள்ள அதானி துறைமுகங்களின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த என்னரசு கருணேசன் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
இலக்கியத்துக்கான நோபல் விருது நிறுத்தி வைப்பு 
  • இலக்கியத்துக்கான நோபல் விருதை ஒவ்வொரு ஆண்டும் சுவீடன் அகாதெமி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அகாதெமியுடன் தொடர்புடைய ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானதை தொடர்ந்து இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் விருது வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் விருதுடன் 2018 க்கும் சேர்த்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழக்தில் (1,6,9,11 வகுப்புகளுக்கு) புதிய பாட நூல்கள் வெளியீடு 
  • வரும் கல்வியாண்டுக்கு 1,6,9,11 வகுப்புகளுக்கான புதிய பாட நூல்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வெளியிட்டார். 
'யூமாங்': புதிய செயலி அறிமுகம்
  • தொழிலாளர் மற்றும் வைப்பு நிதி நிறுவனம் (EPF) ஓய்வூதியதாரர்களுக்கு 'யூமாங்' என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் ஓய்வூதிய பாஸ் புத்தகத்தின் முழு விவரங்களையும் ஒய்வூதியதாரர்கள் பார்த்துக் கொள்ளலாம்.
எத்தனால் மீதான வரி குறைப்பு  - தமிழகம் எதிர்ப்பு 
  • சரக்கு மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 27 வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் எத்தனால் மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க  தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
இந்திய ரயில்வே : 30 சதவீதம் தாமத வருகை / விபத்துக்கள் 
  • கடந்த 2017 நிதி ஆண்டில் 30 சதவீத ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வே விபத்துக்கள் 
  • 2014 - 15 ஆம் ஆண்டில் 135 விபத்துக்கள்
  • 2015 - 16 ஆம் ஆண்டில் 107 விபத்துக்கள்
  • 2016 - 17 ஆம் ஆண்டில் 104 விபத்துக்கள்
  • 2017 - 18 ஆம் ஆண்டில் 073 விபத்துக்கள்
போதைப்பொருள் தடுப்பு ஒப்பந்தம் - இந்தியா - இலங்கை 
  • போதைப்பொருள் தடுப்பு  நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது என இந்தியா - இலங்கை இடையே கடந்த 2013 - ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன்படி மூன்றாவது இரு தரப்பு ஆலோசனைக்கூட்டம் தில்லியில் நடைபெற்றது.
மின்சார துறையில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது - உலக வங்கி 
  • மின்சார துறையில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாகவும், நாட்டில் சுமார் 85 சதவீத மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தும் வசதியை பெற்றுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. எஞ்சி உள்ள 15 சதவீத மக்கள் 2030 குள்ளாக பெற்று விடுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.
ஆசிய கோப்பை கால்பந்து - UAE
  • 2019 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியா யூ.ஏ.இ, தாய்லாந்து, பஹ்ரைன் அணிகள் கொண்ட பிரிவில் இடம்பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments