TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 18.05.2018 & 19.05.2018. TNPSC தேர்வினை மையமாக கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இங்கு வெளியிடப்படும் நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வுக்கு மட்டுமல்லாது அணைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (UPSC, TRB, RRB, SSC, IBPS) பயனுள்ளதாக இருக்கும். வர இருக்கிற போட்டித்தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER சார்பாக வாழ்த்துக்கள்...
'சாகர் புயல் - சென்னை வானிலை மையம்
அறிவிப்பு
ஏடன் வளைகுடா பகுதியில் 'சாகர்' என்ற
புயல் உருவாகியுள்ளதால் தென்மேற்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என
சென்னை வானிலை மையம் அறிவிப்பு அறிவித்துள்ளது.
புயலுக்கு பெயர் வைக்கும்
முறை
பசிபிக் கடல் பிராந்தியத்தில் உருவாகும்
புயல்களுக்கு சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம் பெயர் சூட்டி வருகிறது. ஒவ்வொரு
பிராந்தியத்திலும் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து புயலுக்கு பெயர் வைத்து அதை
சர்வதேச வானிலை நிறுவனம் அங்கீகரித்து வெளியிட்டு வருகிறது. இதன்படி வங்கக் கடல்
மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு,
மியான்மர், ஏமன், பாகிஸ்தான்,
இலங்கை ஆகிய நாடுகள் (நாடுகளின் ஆங்கில
எழுத்து அகர வரிசைப்படி) பெயர் சூட்டுகின்றன. இம்முறை 2004 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி கல்விக்கான மத்திய
அரசின் இரு திட்டங்கள் இணைப்பு
தமிழகத்தின் பள்ளி கல்விக்கான மத்திய
அரசின் இரு திட்டங்களை (SSA & RMSA) இணைத்து ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்த அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.
காவிரி ஆணையத்தின்
தலைமையகம் - தில்லி
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம்
புது தில்லியில் அமையும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த
மாற்றியமைக்கப்பட்ட செயல் திட்ட வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல்
வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை - ஜம்மு காஷ்மீர்
12 வயதுக்கும் குறைவான சிறுமிகளை பாலியல்
வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநில
அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அவசரச்சட்டத்துக்கு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர் என்.என்.வோரா தனது ஒப்புதலை
வழங்கியுள்ளார்.
யூரோப்பா லீக் கால்பந்து
போட்டி - அதெலெட்டிக்கோ மாட்ரிட் சாம்பியன்
லியானில் நடைபெற்ற யூரோப்பா லீக்
கால்பந்து போட்டியில் அதெலெட்டிக்கோ மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆசிய பாட்மிண்டன் - துணைத்
தலைவர் நியமனம்
ஆசிய பாட்மிண்டன் கூட்டமைப்பின் பொதுக்
குழு கூட்டம் பாங்காக்கில் 17.05.2018
அன்று நடைபெற்றது. அதில் இக் கூட்டமைப்பின் துணைத் தலைவராக இந்தியாவின் ஹீமந்த
பிசுவாஸ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய யூனியன் தலைவர்கள்
மாநாடு
பல்கேரிய தலைநகர் சோபியாவில் ஐரோப்பிய
யூனியன் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவர்
டொனால்டஸ்க் அமெரிக்க அதிபரை விமர்சித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்ட் காட்சிகள்
இணைப்பு - நேபாளம்
நேபாளத்தின் ஐக்கிய மார்க்சிஸ்ட் -
லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபியின் -யு எம்எல்) நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய
இரு கட்சிகளும் 17.05.2018 அன்று
ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
கொடைக்கானலில் 57 வது
மலர்கண்காட்சி
சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை
சார்பில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழா மற்றும் 57 வது மலர்க் கண்காட்சியை தமிழக முதல்வர் அவர்கள் 19.05.2018 அன்று தொடங்கி வைக்க உள்ளார்.
மணிப்பூர் மாநில உயர்
நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர்.சுதாகர் பதவியேற்பு
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின்
தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ஆர்.சுதாகரை
மணிப்பூர் தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் கடந்த 9-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். தமிழகத்தைச்
சேர்ந்த நீதிபதி ஆர்.சுதாகர் மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக
வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
குந்தா நீரேற்று புனல் மின்
திட்டம் & 122-ஆவது மலர்க் காட்சியை முதல்வர்
தொடக்கி வைத்தார்
- குந்தா நீரேற்று புனல் மின் திட்டத்தில் வரும் 2021-22ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 3 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவில் 122-ஆவது மலர்க் காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
பயிர் காப்பீட்டுத்
திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.3,265 கோடி: முதல்வர்
கடந்த 2016- 2017ஆம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பயிர் காப்பீட்டுத்
திட்டத்தின் கீழ் ரூ. 3, 265 கோடியே 30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குறைந்து வரும் நிலத்தடி
நீர்: இந்தியாவை எச்சரிக்கும் நாசா
- அமெரிக்காவில் உள்ள நாசாவின் கோடார்ட் ஸ்பேஸ் ஃபிளைட் சென்டர் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. பூமி குறித்து ஆராய்ச்சி செய்து வரும் நாசாவின் செயற்கைக் கோள் அளித்த தகவலின் அடிப்படையில், இந்தியா உட்பட உலக நாடுகள் சிலவற்றில் கிடைத்து வரும் குடிநீரின் அளவு கவலைப்படும் அளவுக்குக் குறைந்து வருகிறது.
- இந்தியாவின் வட மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள், மத்திய கிழக்கு மாநிலங்கள், கலிஃபோர்னியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டும் வெகு விரைவாகக் குறைந்து வருகிறது என்று நாசா தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபருடன் விபின்
ராவத் சந்திப்பு
இலங்கை ராணுவ தலைமைத் தளபதி மகேஷ்
சேனநாயகே விடுத்த அழைப்பின் பேரில், விபின்
ராவத் கடந்த திங்கள்கிழமை இலங்கை சென்றார். இந்நிலையில், அதிபர் சிறீசேனாவை மரியாதை நிமித்தமாக
வெள்ளிக்கிழமை சந்தித்து அவர் கலந்துரையாடினார்.
ஹெச்.ஐ.வி. கட்டுப்பாடு:
மேற்கு வங்கம் முதலிடம்
தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி.
நோய் பரவுவதைத் தடுப்பதில் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக அந்த
மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்
வெளியிட்டுள்ள பதிவில், குழந்தைகளுக்கு
ஹெச்.ஐ.வி. பரவாமல் தடுப்பதில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது என்று தேசிய
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஆணையம் சான்றிதழ் அளித்துள்ளது என்பதை பெருமையுடன் கூறிக்
கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர்களால்
ஆண்டுதோறும் 2,200 உயிரிழப்புகள்: மத்திய உள்துறை
செயலர்
கடந்த 2005-14 காலக்கட்டத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடர்களில்,
ஆண்டுதோறும் சராசரியாக 2,200 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. அதேபோல், ஆண்டுதோறும் ரூ.60,000 கோடி மதிப்பில் பொருள்சேதமும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மழை-வெள்ளத்தால் அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக மத்திய உள்துறைச் செயலர்
ராஜீவ் கௌபா தெரிவித்துள்ளார்.
கியூபா விமானம் கீழே
விழுந்து விபத்து - 100 பயணிகள் உயிரிழப்பு
கியூபா அரசுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 104 பயணிகளுடன் கியூபாவிலிருந்து ஹோல்கைன் நகருக்கு
புறப்பட்டுச் சென்றது. விமானம் உயரே எழும்பிய சில நிமிடங்களில் விமான
நிலையத்துக்கு அருகே உள்ள பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது.
ஜிம்பாப்வே பயிற்சியாளராக
முன்னாள் இந்திய வீரர் லால்சந்த் ராஜ்புத் ஒப்பந்தம்
ஜிம்பாப்வே பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஒப்பந்தம்ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத், வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த அணிக்கு ஜுன் மாதம் முதல் அடுத்த வரும் 3 மாதங்களுக்கு இடைக்காலப் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.