சர்வதேச பல்லுயிர் தினம் இன்று ( International Biodiversity Day Observed Today):
பூமியில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான், பூமியில் சமநிலை ஏற்படும். நமக்கு தேவையான உணவு, மருத்துவம் மற்றும் இதர தேவைகளுக்கு நாம் பல்லுயிர்களை சார்ந்து இருக்கிறோம்.
பல்லுயிரிகளுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி, மே 22ம் தேதி, சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பூமியில் உள்ள நீர் மற்றும் நிலத்தில் வாழும் எண்ணற்ற உயிரின வகைகளின் (பறவை, விலங்குகள், மரங்கள், தாவரங்கள்) தொகுப்பு, பல்லுயிர் பரவல் எனப்படுகிறது.
அனைத்துலக பல்லுயிர்ப் பெருக்க நாள் (உலக பல்லுயிர் தினம்) என்பது பல்லுயிர் பிரச்சினைகளை உற்றுநோக்க ஐ.நா வால் அறிவிக்கப்பட்ட சர்வதேச விடுமுறை தினமாகும். இது தற்போது மே 22 ல் கடைபிடிக்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டு சுற்றுச்சூழல் கணக்கீட்டின் படி பல்லுயிர்பரவல் குறைவிற்கு காலநிலை மாறுதலே நேரடி முக்கிய கூறாக விளங்குகிறது. தற்போதைய காலநிலை மாற்றத்தின் படி 2100 ல் வெப்பநிலையானது 1.4°C லிருந்து 5.8°C வரை உயர வாய்ப்பிருகிறது. இது பல்லுயிர்பரவல், இனப்பெருக்கம் நேரம் மற்றும் தாவரம் வளரும் பருவத்தில் மாற்றங்களை ஏற்ப்படுத்தி உயிரினங்கள் அழியும் விகிதத்தை உயர்த்துகிறது.
டிசம்பர் 29, அனைத்துலக பல்லுயிர்ப் பெருக்க நாளாக 1993 லிருந்து 2000 வரை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையி ன் இரண்டாம் குழு வால் கொண்டாடப்பட்டது. டிசம்பர் பிற்பகுதியில் வரும் மற்ற விடுமுறைகளை தவிர்க்க உலக பல்லுயிர் தினமானது மே 22 ஆக 1992 ல் நடந்த ரியோ புவி உச்சி மாநாட்டின் நினைவாக டிசம்பர் 2000 லிருந்து கடைபிடிக்கப்பட்டது.