Ads 720 x 90

TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 21.04.2018

TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 21.04.2018. TNPSC  தேர்வினை மையமாக கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTERஇணைத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.  இங்கு வெளியிடும் நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு மட்டுமல்லாது அணைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (UPSC, TRB, RRB, SSC, IBPS) பயனுள்ளதாக இருக்கும். போட்டித்தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்...

இன்றைய நடப்பு நிகழ்வுகளின் முக்கிய தலைப்புகள் Date: 21.04.2018.
  • உச்ச நீதிமன்ற நீதிபதி மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு
  • உயர்நீதிமன்ற / உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி நீக்க தீர்மானம்
  • காமராசர் துறைமுகம் ரூ.656 கோடி ஆண்டு வருவாய் ஈட்டி சாதனை.
  • சென்னை தியாகராய நகரில் ஆகாய நடை பாதை
  • தமிழகத்தில் 45 புதிய துணை மின் நிலையங்கள்
  • தென் மாநிலங்களிலே தமிழகத்தில்தான் முதலில் அறிமுகம்: மின்னணு முத்திரைத்தாள் முறை.
  • காமன்வெல்த் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிதி: இந்தியாவின் பங்கு இரட்டடிப்பு
  • காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் இளவரசர் சார்லஸ் 
  • பொது விநியோக திட்டத்தின் கீழ் சிறு தானியம் வழங்க மத்திய அரசு முடிவு
  • தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜிந்தர்சிங் சச்சார் காலமானார் 
  • 16 வது தேசிய இளையோர் தடகளப்போட்டி - கோவை
  • கொரிய அதிபர்களுக்கிடையே நேரடி தொலைபேசித் தொடர்பு.
உச்ச நீதிமன்ற நீதிபதி மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு:
  • தற்போதைய தலைமை நீதிபதி (தீபக் மிஸ்ரா) மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் துணைத்தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் நோட்டிஸ் அளித்துள்ளன.
உயர்நீதிமன்ற / உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி நீக்க தீர்மானம்
  • உயர்நீதிமன்ற நீதிபதியோ, உச்சநீதிமன்ற நீதிபதியோ என்ன குற்றம் செய்து பிடிபட்டாலும், அவர்கள் மீது வழக்கு போட சட்டத்தில் இடமில்லை. அவர்களை பதவியிலிருந்து இறக்குவதற்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.
காமராசர் துறைமுகம் ரூ.656 கோடி ஆண்டு வருவாய் ஈட்டி சாதனை.
  • எண்ணூர் காமராசர் துறைமுகம் கடந்த (2017-2018) நிதி ஆண்டில் ரூ.656 கோடியே மொத்த வருவாயாக ஈட்டி சாதனை படைத்துள்ளது. நாட்டில் உள்ள 12 பெருந்துறைமுகங்களில் நிறுவனச்சட்டங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் துறைமுகம் காமராசர் துறைமுகம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை தியாகராய நகரில் ஆகாய நடை பாதை
  • சென்னை பொலிவுறு திட்டத்தின் (Smart City) கீழ் ரூ.30.35 கோடியில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 45 புதிய துணை மின் நிலையங்கள்
  • தமிழகத்தில் ரூ.1122 கோடியில் 45 புதிய துணை மின் நிலையங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
தென் மாநிலங்களிலே தமிழகத்தில்தான் முதலில் அறிமுகம்: மின்னணு முத்திரைத்தாள் முறை.
  • மின்னணு முத்திரைத்தாள் முறை அறிமுகப்படுத்துவதிலேயே தமிழ்நாடு மாநிலம்தான் தென் மாநிலங்களிலே முதில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய திட்டத்தை சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
காமன்வெல்த் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிதி: இந்தியாவின் பங்கு இரட்டடிப்பு
  • காமன்வெல்த் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு அளிக்கப்பட்டு வரும் நிதியே இந்தியா பங்கு இரட்டிப்பாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் இளவரசர் சார்லஸ் 
  • 53 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் உள்ளார். தற்போது நடைபெற்ற இரண்டு நாள் மாநாட்டில் தனக்கு பிறகு தலைவர் பொறுப்பை இளவரசர் சார்லஸ் பொறுப்பேற்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். இதை உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். 
  • 1951 ல் ஏற்படுத்தப்பட்ட காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டமைப்பின் ஏதேனும் ஒரு உறுப்பு நாடுகளில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது விநியோக திட்டத்தின் கீழ் சிறு தானியம் வழங்க மத்திய அரசு முடிவு
  • உடலுக்கு உறுதியை தரும் சிறு தானியங்களை பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துருக்கிறது. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 13, 2018 அன்று மத்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது.

தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜிந்தர்சிங் சச்சார் காலமானார் 

  • தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர்சிங் சச்சார் (94) தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (20.04.2018) அன்று  காலமானார்.
  • இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வித் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மூலம் அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக ராஜிந்தர் சிங் சச்சார் இருந்தார்
16 வது தேசிய இளையோர் தடகளப்போட்டி - கோவை 
  • 16 வது பெடெரசன் கோப்பைக்கான தேசிய இளையோர் தடகளப்போட்டி தமிழகத்தின் கோவையில் நடைபெற்று வருகிறது.
கொரிய அதிபர்களுக்கிடையே நேரடி தொலைபேசித் தொடர்பு 
  • வட மற்றும் தென் கொரிய நாடுகளின் அதிபர்களுக்கு இடையிலான நேரடித் தொலைபேசி இணைப்பு 20.04.2018 (வெள்ளிக்கிழமை) அன்று ஏற்படுத்தப்பட்டது. இரு நாட்டுத் தலைவர்களும் விரைவில் சந்தித்து பேசவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments