-->

TNPSC Current Affairs Today: Short Notes 26.03.2018

TNPSC Current Affairs Today: Short Notes 26.03.2018

உடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் புதியதாக 4 விமான நிலையங்கள்
  • உடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் புதியதாக 4 விமான நிலையங்கள் 2018 - ல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் தற்போது துவங்கப்பட்ட சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரம் விமான சேவை உடான் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
  • உடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 4 விமான நிலையங்கள் அமைய உள்ள இடங்கள்.
1. ஓசூர் 
2. நெய்வேலி 
3. வேலூர் 
4. தஞ்சை 

ஆதாரில் ஜூலை 1 முதல் முக அடையாள முறை 
  • ஆதாரில் ஜூலை 1 முதல் முக அடையாள முறைஅமுல்படுத்த உள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது வரை 119 கோடி மக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு
  • சீனாவில் ஜூன் 9-10, 2018 ல் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த ஓத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.
ராணுவ தளவாடக் கண்காட்சி 
  • ராணுவ தளவாடக் கண்காட்சிசென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் 11.04.2018 முதல் 14.04.2018 வரையுள்ள நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராம ஸ்வராஜ் ராஜ் திட்டம் 
  • அம்பெத்காரின் பிறந்த தினமான ஏப்ரல் 14 முதல் மே 15 வரை கிராம ஸ்வராஜ் ராஜ் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. 
கிராம ஸ்வராஜ் ராஜ் திட்டதின் நோக்கம்
  • இத்திட்டதின் மூலம் கிராமப் பகுதிகளில் மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சமூக நீதியை நிலைநாட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting