Type Here to Get Search Results !

Indian GSLV-F8 lofts GSAT-6A: 8th Victory

ஜி.எஸ்.எல்.வி.-எஃப்8 - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம் 
  • வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.-எஃப்08 ராக்கெட்: தாற்காலிக சுற்றுவட்டப் பாதையில் ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்
  • 2 ஆயிரம் கிலோ எடைகொண்ட ஜிசாட்-6ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.-எஃப்-08 (GSLV-F8) ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மைய ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை (29.03.2018) அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஜி.எஸ்.எல்.வி.-எஃப்-08 சிறப்பம்சம் 
  • இது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 8-ஆவது வெற்றியை இஸ்ரோ பதிவு செய்துள்ளது. திட்டமிட்ட பூமியிலிருந்து 36 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இறுதிக்கட்ட புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும்.
  • முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட 6 ஆவது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இஸ்ரோ இதுவரை 12 ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது. 
  • 8 முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, திட்டமிட்ட பாதையில் செயற்கைகோளை இஸ்ரோ நிலைநிறுத்தியுள்ளது. 4 முறை மட்டும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தோல்வியில் முடிந்துள்ளது.
  • விண்ணில் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜிசாட்-6ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள் 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • இது பன்முனை எஸ்-பாண்ட், ஒருமுனை சி-பாண்ட் அலைவரிசைகள் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இந்த செயற்கைக்கோள் உதவ உள்ளது.
  • இந்த ராக்கெட்டில் எலக்ட்ரோ இயந்திவியல் இயக்கவிசை கூடுதலாகச் சேர்க்கப்பட்டது. இந்த இயக்கவிசையானது, முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட லித்தியான் பேட்டரிகள் மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது மிகப் பெரிய சாதனையாகும். இந்த பேட்டரி தொழில்நுட்பத்தை, எலெக்டிரிக் வாகன (இ-வாகனம்) துறையிலும் பயன்படுத்துவது குறித்து இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 
  • இந்த ராக்கெட்டைப் பொருத்தவரை அதன் இரண்டாம் நிலையில் உயர் உந்துதல் திரவ எரிபொருளும், எலெக்ட்ரோ-ஹைட்ராலிக் ஆக்‌ஷன் சிஸ்டத்திற்கு பதிலாக எலெக்ட்ரோ-மெக்கானிக்கல் ஆக்‌ஷன் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருப்பது இரண்டு பிரதான மாற்றங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • குறிப்பாக மேம்பட்ட தகவல் தொடர்பு, ஆன்ட்டனா மற்றும் சாட்டிலைட் தகவல் தொடர்புக்கு பெரிதும் பயனளிக்க உள்ளன. மேலும் தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள இந்த செயற்கைகோள் பேருதவியாக அமையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 
  • அடுத்த 9 மாதங்களில் 10 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. 
  • அடுத்த இரண்டு வாரங்களில் ஐ.ஆர்.எஸ்.எஸ்.-2 தகவல்தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 
  • தொடர்ந்து மிக முக்கியமாக சந்திராயன்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது
  • தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மேலாளராக பொறுப்பேற்ற பின் ஏவப்படும் முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.  
Indian GSLV lofts GSAT-6A
  • India launched an upgraded version of its Geosynchronous Satellite Launch Vehicle Thursday, carrying the GSAT-6A communications satellite into orbit. Liftoff, from the Satish Dhawan Space Centre.
  • In the first of three planned orbital launches worldwide on Thursday (29th April, 2018), India’s Geosynchronous Satellite Launch Vehicle (GSLV) debuted an enhanced second stage with a more powerful engine. The rocket deployed GSAT-6A, a communications satellite, for the Indian Space Research Organisation (ISRO).

Post a Comment

0 Comments

Labels