
டிசம்பரில் உலக சைவ சித்தாந்த மாநாடு
- சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரும் டிசம்பர் மாதம் , 'சைவ சித்தாந்த வரலாறு மற்றும் வளர்ச்சி, வாழ்வியல்' தலைப்பில் உலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெறவுள்ளதையடுத்து அதற்கான சின்னம் திங்கள்கிழமை (12.03.2018) வெளியிடப்பட்டது.
சோழர் காலத்து கொற்றவை சிலை கண்டெடுப்பு
- பெரணமல்லூரை அடுத்த எறும்பூர் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் வடக்கு மதில் அருகே வெட்டவெளியில் கொற்றவை சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனை தொல்லியல் ஆர்வலரும், வரலாற்று ஆய்வாளருமான கை.செல்வகுமார் கண்டெடுத்துள்ளார். இந்தக் கொற்றவை சிலையை காளி அல்லது துர்கை என்று அழைக்கின்றனர். இந்தச் சிலை கி.பி 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட கால கட்டத்தில் சோழர் காலத்தில் செதுக்கப்பட்டிருக்கலாம்.
காமராஜர் பல்கலை.யில் அறிவியல் கண்காட்சி
- மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மார்ச் 13, 2018 அன்று தொடக்கி வைக்கிறார்.
- அறிவியல் கண்காட்சியை தமிழக ஆளுநரும், பல்கலைக் கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால்புரோஹித் தொடக்கி வைக்கிறார். இக்கண்காட்சி வியாழக்கிழமை மார்ச் 15, 2018 வரை நடைபெறவுள்ளது என்றார்.
இந்தியா மோரீஷஸுக்கு ரூ.650 கோடி கடன் உதவி அளிக்கவுள்ளது.
- மொரீசியஸ் அரசு, ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு உதவும் வகையில் 10 கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.650 கோடி) கடனை அந்நாட்டுக்கு வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மோரீஷஸில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு அந்நாட்டு அதிபர் அமீனா குரீப் ஃபக்கீம் விருந்து அளித்து கௌரவித்தார்.
இந்தியாவுக்கும், மோரீஷஸுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்கள்
- மோரீஷஸுக்கு கடல்பகுதி ரோந்துக் கப்பலை இந்தியா கடன் திட்டத்தின்கீழ் வழங்கும்'
- பிகாரின் நாளந்தா பல்கலைக்கழகத்துக்கும் மோரீஷஸுக்கும் இடையிலான ஒப்பந்தம்இ
- இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் (யூபிஎஸ்சி) மோரீஷஸ் அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் இடையிலான ஒப்பந்தம், இருநாடுகளுக்கும் இடையே கலாசாரப் பரிவர்த்தனைகளை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம்
ஒரு ரஃபேல் விமானத்தின் விலை ரூ.670 கோடி
- 'பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை ரூ.58,000 கோடி மதிப்பில் வாங்குவதற்கு பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒப்புதல் அளித்தது. ஒரு ரஃபேல் விமானத்தில் விலை ரூ.670 கோடி' என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
- பிரதமர் நரேநந்திர மோடி கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது ரஃபேல் போர் விமானக் கொள்முதல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பான ஒப்பந்தத்தை இறுதிசெய்ய பிரதமர் மோடியும், அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தேயும் ஒப்புக் கொண்டனர்.
- அதற்கு சுமார் 16 மாதங்கள் கழித்து இந்த விமானக் கொள்முதல் தொடர்பான அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்துக்கு சிசிஎஸ் குழு 2016 ஆகஸ்ட் 24ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தம் அதே ஆண்டில் டிசம்பர் 23ஆம் தேதி கையெழுத்தானது.
- பிரான்ஸிடம் இருந்து வாங்கப்பட உள்ள 36 ரஃபேல் விமானங்களின் மொத்த விலை ரூ.58,000 கோடியாகும். ஒவ்வொரு விமானத்தின் விலையும் தோராயமாக ரூ.670 கோடியாகும் என்று அவர் தனது பதிலில் தெரிவித்தார்.
உ.பி.யில் சூரிய சக்தி மின்உற்பத்தி நிலையம்
- உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிர்ஸாபூரில் மிகப்பெரிய சூரிய சக்தி மின்உற்பத்தி நிலையத்தை பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானும் 12.03.2018 அன்று கூட்டாகத் திறந்து வைத்தனர்.
- இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம், 75 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்டதாகும். இதற்காக, சுமார் 380 ஏக்கர் பரப்பளவில், 1,18,600 சூரிய சக்தி மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு மாதத்துக்கு 1.30 கோடி யூனிட் வீதம், ஆண்டொன்றுக்குச் சராசரியாக 15.6 கோடி யூனிட் மின்சாரத்தை இந்த மின்நிலையத்தில் உற்பத்தி செய்ய முடியும்.
வீட்டுப் பணியாளர்கள் நலன் காக்க தேசியக் கொள்கை
- வீட்டு வேலைகள் செய்யும் பணியாளர்களுக்கு முறையான ஊதிய நிர்ணயம், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அளிக்க வகை செய்யும் தேசியக் கொள்கை வகுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகளில் இருந்து அவர்களைக் காப்பதற்கான அம்சங்ளையும் கருத்தில்கொண்டு அந்தக் கொள்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
- மாதத்துக்கு குறைந்தது ரூ.9,000 ஊதியம், ஆண்டுக்கு ஊதியத்துடன் கூடிய 15 நாள் விடுப்பு, மகப்பேறு உதவி உள்ளிட்டவற்றை வீட்டுப் பணியாளர்களுக்கு அளிக்கும் வகையில் அந்தக் கொள்கை தயாராகி வருகிறது.
மேகாலய சட்டப் பேரவை தலைவராக டோன்குபார் ராய் தேர்வு
- ஐக்கிய ஜனநாயக கட்சியின் (யூடிபி) தலைவர் டோன்குபார் ராய் மேகாலய மாநில சட்டப் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பேரவைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற டோன்குபார் ராயை முதல்வர் கான்ராட் கே.சங்மா, எதிர்க்கட்சித் தலைவர் முகுல் சங்மா ஆகியோர் அழைத்துச் சென்று பேரவைத் தலைவர் இருக்கையில் அமரவைத்தனர்.
பாகிஸ்தானின் முதல் ஹிந்து பெண் எம்.பி. பதவியேற்பு
- பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையின் முதல் ஹிந்து பெண் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிருஷ்ண குமாரி கோலி (39) திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
- பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பேநசீர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் அவர் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தலித் பெண்ணான கிருஷ்ண குமாரி கோலி, சிந்து மாகாணத்தின் சிறுபான்மையினர் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் 7.5%-ஆக அதிகரிப்பு
- நடப்பு ஆண்டு ஜனவரியில் இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் 7.5 சதவீதமாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் இது 3.5 சதவீதமாக காணப்பட்டது. தயாரிப்பு துறை, பொறியியல்-நுகர்வோர் சாதனங்கள் துறை உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்ததையடுத்து இந்த வளர்ச்சி எட்டப்பட்டது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்
- மெக்ஸிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுச் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது இது முதல் முறையாகும்.
தங்கம் பதக்கம்
|
வெள்ளி பதக்கம்
|
வெண்கலப் பதக்கம்
|
ஷாஸார் ரிஸ்வி | அஞ்சும் முட்கில் | ஜிது ராய் |
அகில் ஷியோரன் | ரவி குமார் | |
ஓம் பிரகாஷ் மிதர்வால் | அஞ்சும் முட்கில் | |
மானு பேக்கர் |
மேரி கோம் குத்துச்சண்டை அகாதெமி: பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
- மணிப்பூர் மாநிலம் இம்பாலில் மேரி கோம் குத்துச்சண்டை அகாதெமியை பிரதமர் நரேந்திர மோடி வரும் 16.03.2018 அன்று திறந்து வைக்கிறார். 'மேரி கோம் மண்டல குத்துச்சண்டை அறக்கட்டளை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அகாதெமியின் திறப்பு விழா நிகழ்ச்சியில் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் குமார், மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
மேரி கோம் அவர்களின் சாதனை
- 5 முறை உலக மற்றும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
- ஒலிம்பிக்கில் (2012 லண்டன்) பதக்கம் வென்ற ஒரே இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஆவார்.
- 2016-இல் மாநிலங்களவை கெளரவ உறுப்பினராக்கப்பட்ட மேரி கோம்,
- 2017-இல் தனது 5-ஆவது ஆசிய சாம்பியன்ஷிப் தங்கத்தை கைப்பற்றினார்.
Post a Comment