TNPSC (Expected for Current Affairs Notes)
காவிரி இறுதித் தீர்ப்பு: தமிழகத்துக்கு
தண்ணீர் குறைப்பு
- காவிரியிலிருந்து
தமிழகத்துக்கு ஆண்டுக்கு 177.25 டிஎம்சி நீரை அடுத்த 15 ஆண்டுகளுக்கு கர்நாடகம்
திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பின் விவரம்
- உச்ச நீதிமன்றத்
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்வா
ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர்
அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தது. 465 பக்கங்கள் கொண்ட இத்தீர்ப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
- காவிரியில் இருந்து
தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்து உச்ச நீதிமன்றம் இன்று
தீர்ப்பளித்துள்ளது.
- காவிரியில் தமிழகத்துக்கு
192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கியிருந்த
நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும்
தீர்ப்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.
- இந்த தீர்ப்பின்
மூலம், தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி
தண்ணீர் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- காவிரியில் இருந்து
264 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்று தமிழகம் கோரியிருந்தது. ஆனால், 2007ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில்
தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க
வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
- இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், தமிழகத்தில் 20 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர்
உள்ளது. எனவே, காவிரியில் இருந்து
தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.
- காவிரியில் இருந்து
284.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகாவுக்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு
கூடுதலாக 4.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- காவிரி தொடர்பாக
1892, 1924 ஆகிய ஆண்டுகளில் கையெழுத்தான
ஒப்பந்தங்கள் அரசியல் ஏற்பாட்டையோ, இந்திய இறையாண்மையையோ தொடர்புபடுத்தவில்லை. இந்த விவகாரத்தில் அரசியலமைப்புச்
சட்டம் 363-ஆவது பிரிவு பொருந்தாது.
வழக்கு கடந்து வந்த பாதை.
- 1974 - மதராஸ் பிரெசிடென்சிக்கும்
மைசூர் அரசாட்சிக்கும் இடையே 1924-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தம் காலாவதியானது.
- 1990 மே - காவிரி
நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- ஜூன் 2 - காவிரி
நடுவர் மன்றம் அமைக்க அரசாணை பிறப்பிப்பு
- 2018 பிப். 16
- இறுதி தீர்ப்பு அறிவிப்பு - தமிழகத்துக்கு மொத்தம் 404.25 டிஎம்சி ஆண்டுதோறும்
வழங்க உத்தரவு. முன்பு 419 டிஎம்சியாக இருந்தது.
Courtesy: Dinamani