தேசிய யானைகள் கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் குறைந்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகக் காடுகளில் 2,761 யானைகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கணக்கெடுப்பின் விவரங்கள் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.
தேசிய யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின் படி
1. கர்நாடகம் முதல் இடத்திலும்
2. தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது
யானைகள் எண்ணிக்கை குறைவதற்கு காரணம்:
1. தமிழகத்தில் யானைகளின் வழித்தடங்களை வரையறை செய்வதில் நீண்டகால தாமதம் ஏற்படுதல்
2. நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து இல்லாதது
3. யானைகள் வாழிடத்தில் மனிதர்களின் ஆக்கிரமிப்பு
கேள்வி: TNPSC Questions:
1. தேசிய யானைகள் கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் நிலை என்ன?
2. தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் சிலவற்றைக் கூறு?