Type Here to Get Search Results !

Current Affairs in Tamil Medium ( Date 24.10.2017)

நாடு முழுவதும், 'டெங்கு'; இதுவரை 172 உயிரிழந்து உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • நாடு முழுவதும், 'டெங்கு' காய்ச்சலில், 172 பேர் உயிரிழந்து உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில், யூனியன் பிரதேசங்களுடன் சேர்ந்து, டெங்கு பாதிப்புள்ள, 35 மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், 19 மாநிலங்களில், உயிரிழப்புகள் இல்லை. உயிரிழப்புகள் அதிகமுள்ள மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்ததாக, கேரளா உள்ளது.
  • தற்போது வெளியிட்டு உள்ள அறிக்கை: கேரளாவில், 19 ஆயிரத்து, 53 பேர், டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 35 பேர் உயிரிழந்து உள்ளனர். கர்நாடகாவில், 13 ஆயிரத்து, 673 பேர் பாதிக்கப்பட்டு, ஐந்து பேர் உயிரிழந்து உள்ளனர்.
தனிநாடாக கேட்டலோன் பிரகடனம்
  • ஸ்பெயினில் இருந்து கேட்டலோன் தனி நாடாக பிரகடனப்படுத்தியது. ஸ்பெயின் நாட்டின் தொழில் வளம் மிக்க மாகாணமாக கேட்டலோனியா விளங்குகிறது. இங்கு தனிநாடு கோரிக்கை சில ஆண்டுகளாக வலுத்து வருகிறது. கடந்த 2-ம் தேதியன்று தனி நாடு கோரி நடந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்க முடியாது என ஸ்பெயின் அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.இதற்கு கண்டனம் தெரிவித்து கேட்டலோன் மாகாணத்தின் தலைவர் கார்லஸ் பியூக்டிமென்ட்,54 தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் போரட்டம் நடத்தினர். 
இந்தியாவில் அதிக நன்கொடை பெறும் மாநில கட்சி தி.மு.க.,: ஆய்வில் தகவல்
  • இந்தியாவில் உள்ள மாநில கட்சிகளில் அதிக நன்கொடை பெறும் கட்சி தி.மு.க. என ஆய்வில் தெரியவந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளில் 47 மாநில கட்சிகள் உள்ளன. இக்கட்சிகள் வசூலித்த நன்கொடை, வரவு, செலவு உள்ளிட்ட கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்து வருகின்றன. இந்நிலையில் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு (ஏ.டி.ஆர்.) 2015-16-ம் ஆண்டுகளில் கிடைத்த நன்கொடையாக கிடைத்த மொத்த வருமானம்,செலவினங்கள், வங்கிகளில் டெபாசிட் செய்த தொகைகளிலிருந்து வரும் வட்டி உள்ளிட்ட நிதி ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்ததை பெற்று அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
  • மொத்தமுள்ள 47 மாநில கட்சிகளில் 32 கட்சிகள் தங்களது வருமானம்,செலவு கணக்கை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளன. கடந்த2015-16-ம் நிதிஆண்டில் ரூ.221.48 கோடி வருமான கணக்கை இந்த 32 மாநில கட்சிகள் தாக்கல் செய்துள்ளன.
திருட்டு வீடியோ பைரசி பிரிவின் பெயர் மாற்றம்
  • திருட்டு வீடியோ பைரசி பிரிவின் பெயர் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.. காப்புரிமை, வடிவமைப்பு , வணிகமுத்திரை உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைவது உறுதி
  • புகழ்பெற்ற, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவது உறுதி செய்யப்பட்டது. இருக்கைக்கு தேவையான ரூ.33 கோடியில் தமிழக அரசு ரூ.10 கோடி செலுத்த முடிவு செய்துள்ளது. ‛ழ' என்ற அமைப்பு, ரூ.19 கோடி வரை பணம் திரட்டியுள்ளது. எஞ்சிய தொகையை தமிழ் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் திரட்டவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனுக்காகவும் ஜெயலலிதாவின் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில், அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் ஜானகிராமன், திருஞானசம்பந்தம் ஆகியோர் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 
பிரபல மலையாள எழுத்தாளர் குஞ்ஞப்துல்லா காலமானார்
  • பிரபல மலையாள எழுத்தாளர் குஞ்ஞப்துல்லா காலமானார். அவருக்கு வயது 75. அவரது நாவலான ‛ஸ்மார்க சிலகள்' க்கு கடந்த 1980ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அவர் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

Post a Comment

0 Comments

Labels