TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc
வறட்சியை சமாளிக்க ‘குடிமராமத்து’ திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் வறட்சியைச் சமாளிக்கவும், நீர்நிலைகளை புனரமைக்கவும் பண்டைய “குடிமராமத்து” திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் 30 மாவட்டங்களில் ஆயிரத்து 159 பணிகள் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் அறிமுகமாகிறது பாலியல் குற்றவாளிகள் பதிவேடு
நாட்டிலேயே முதன்முறையாக பாலியல் குற்றவாளிகள் அடங்கிய பதிவேட்டை அறிமுகம் செய்யப் போவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று ஆளுநர் பி.சதாசிவம் நேற்று கூறியதாவது: பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டிலேயே முதன்முறையாக பாலியல் குற்றவாளிகள் அடங்கிய பதிவேடு அறிமுகம் செய்யப்படும். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தரும் குற்றவாளிகள் பெயர் மற்றும் அவர்களின் அனைத்து அடையாள விவரமும் இடம் பெற்றிருக்கும். இந்த பதிவேடு பொதுமக்கள் பார்வைக்கு வைக் கப்படும்.
பூமியைப் போன்றே 7 கிரகங்கள் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
பூமியைப் போன்ற 7 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன என்று நாசா தலைமையகத்தில் விண்வெளி ஆய்வாளர்கள் அறிவித்தனர். பூமியைப் போன்ற கிரகங்கள் உள்ளனவா என்பதை கண்டறியும் ஆராய்ச்சியில் பல நாடுகள் ஈடு பட்டுள்ளன. அத்துடன் வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார் களா என்ற கேள்விக்கு விடை காண விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சித்து வருகின் றனர். இந்நிலையில், பூமியைப் போலவே 7 கிரகங்கள் விண்ணில் சுற்றிவருவதை விண்வெளி ஆய் வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசாவின் தலைமை அலுவலகத்தில் ஆய்வாளர்கள் நேற்று செய்தியாளர்களிடம் அறிவித்தனர்.
இந்திய தொழில்நுட்பத் திறமைகளைப் புறக்கணித்து சீனா தவறிழைத்து விட்டது: சீன இதழ் குளோபல் டைம்ஸ்
தகவல்-அறிவியல்-தொழில் நுட்பத் துறைகளில் இந்தியாவின் இளம் திறமைகளைப் புறக்கணித்து சீனா தவறு செய்து விட்டது என்கிறது அந்நாட்டு அரசிதழ். சீனாவில் தகவல் மற்றும் தொழில்நுட்ப திறமைகளுக்கு நாளுக்குநாள் தேவை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இது தொடர்பாக இருந்து வரும் திறமைகளை சீனா பயன்படுத்திக் கொள்ளாமல் அலட்சியம் காட்டி தவறிழைத்து விட்டது என்று சீன அரசிதழன குளோபல் டைம்ஸ் தலையங்கம் தீட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து திறமைகளைக் கொண்டு வருவதில் சீனா அதீத முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறது, இந்திய திறமைகளை மதித்திருக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.
சிங்கப்பூர் சுற்றுலா துறை வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகம்
சிங்கப்பூர் சுற்றுலா துறை வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகம் என்று சிங்கப்பூர் சுற்றுலா அமைப்பின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். மேலும் சிங்கப்பூர் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டில் 7.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள் வேலை: தமிழக அரசு அறிவிப்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 நாள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், பணிநாள்களின் எண்ணிக்கை 150-ஆக உயர்ந்துள்ளது. இந்தத் திட்டமானது தமிழகத்தின் 31 கிராமப்புற மாவட்டங்களில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்படுகிறது. நிகழ் நிதியாண்டில் இதுவரை 33.43 கோடி மனித சக்தி நாள்கள் உருவாக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு ஊதியமாக ரூ.4,655 கோடி வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, வறட்சியின் காரணமாக, மூன்று கோடி மனித சக்தி நாள்கள் அதிகரித்துள்ளன.
சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம்: உலக சுகாதார நிறுவனம்
சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்தியா போல குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 2005ம முதல் 2015-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 5,66,75,969 பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 கோடி பேர் மனநலக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இந்திய மக்கள் தொகையில் 4.5 சதவீதம் ஆகும்.
ருவாண்டா, உகாண்டா பயணத்தை முடித்து நாடு திரும்பினார் ஹமீது அன்சாரி: 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, ருவாண்டா, உகாண்டா ஆகிய 2 நாடுகளில் மேற்கொண்ட பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை நாடு திரும்பினார். ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள ருவாண்டா, உகாண்டா ஆகிய இரு நாடுகளுக்கு குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி 5 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த 19-ஆம் தேதி தில்லியிலிருந்து புறப்பட்டார். இந்தியாவின் சார்பில் ருவாண்டாவில் தொழில்முனைவோர் மையத்தை தொடங்குவது, ருவாண்டாவிலிருந்து மும்பைக்கு நேரடி விமான சேவையைத் தொடங்குவது தொடர்பான 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கடந்த 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய அரசின் சார்பில் ருவாண்டாவுக்கு சென்ற முதல் உயர்நிலைக் குழு இதுவே ஆகும்
குஜராத்தில் ஹோண்டாவின் புதிய கார் ஆலை
குஜராத்தில் புதிய கார் அசெம்பிளி ஆலையை அமைக்க ஹோண்டா இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி யோசிரோ ஊனோ தெரிவித்தார். ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு நாட்டில் ஏற்கெனவே புது தில்லி அருகே நொய்டாவிலும், ராஜஸ்தானில் தபுகுராவிலும் கார் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. அவற்றின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 2.4 லட்சம் கார்களாகும் என்றார் அவர்.
சோழமண்டலம் காப்பீட்டு நிறுவனம் - ஓரியன்டல் வங்கி உடன்படிக்கை
சோழமண்டலம் எம்.எஸ். பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் காப்பீட்டுத் திட்டங்களை நிறுவன முகவராக விற்பனை செய்வது தொடர்பாக பொதுத் துறையைச் சேர்ந்த ஓரியன்டல் வர்த்தக வங்கியுடன் உடன்படிக்கை கையெழுத்தானது.
துபை உணவுத் திருவிழாவில் 64 இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு
துபையில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 26) தொடங்கவுள்ள உணவுத் திருவிழாவில் இந்தியாவைச் சேர்ந்த 64 உணவுப் பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. துபையில் "வளைகுடா உணவுத் திருவிழா 2017' ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. மார்ச் மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உணவுப் பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்திய அரசின் மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் இந்தியாவைச் சேர்ந்த 64 ஏற்றுமதி நிறுவனங்கள் உணவுத் திருவிழாவில் பங்கேற்கின்றன.
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: வெண்கலம் வென்றார் பூஜா கட்கர்
சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் மகளிர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் பூஜா கட்கர் வெண்கலம் வென்றார். தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முன்னாள் ஆசிய சாம்பியனான பூஜா கட்கர், இறுதிச்சுற்றில் 228.8 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன்மூலம் உலகக் கோப்பையில் முதல் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார் பூஜா கட்கர். இதே பிரிவில் சீனாவின் மெங்யாவ் ஷி 252.1 புள்ளிகளுடன் தங்கம் வென்றதோடு, புதிய உலக சாதனையும் படைத்தார். மற்றொரு சீன வீராங்கனையான டாங் லிஜீ 248.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
Courtesy: Dinamani
0 Comments