ISRO creates history; launches PSLV C37 with 104 satellites
Indian Space Research Organisation has created history by injecting a record 104 satellites into orbit in a single launch. ISRO successfully launched 104 satellites including Cartosat-2 onboard PSLV-C37 at 9:28 AM this morning from Satish Dhawan Space Centre in Sriharikota. In a text book launch, the heavy duty rocked blasted off majestically from the First Launch Pad of Satish Dhawan Space Centre. All the satellites were successfully put into a 505 km polar Sun Synchronous Orbit.
Exactly 17 minutes of the launch, Cartosat-2 was separated and a minute later the two ISRO nano satellites were put in the intended orbit. Little later the other 101 nano satellites were injected into intended orbit in pairs.
104 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த்து பிஎஸ்எல்வி - சி 37
104 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை விண்ணில் பாய்ந்து உலக சாதனை படைத்துள்ளது பி.எஸ்.எல்.வி சி37 ராக்கெட். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டா உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது. ஒவ்வொரு கட்டங்களையும் சரியான நேரத்தில் கடந்து செய்ற்கைக்கோள்கள் அதன் சுற்றுவட்டப்பாதையை அடைந்தன. கார்டோசாட்-2, ஐ.என்.எஸ் 1ஏ, ஐஎன்எஸ் 1பி ஆகிய இந்திய செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 505 கிலோ மீட்டர் உயரத்தில் பி.எஸ்.எல்.வி சி 37-லிருந்து பிரிந்து அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
அதில், இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் வகையில் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இதுதவிர இந்தியாவின் 2 நானோ வகை செயற்கைக்கோள்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த 101 நானோ வகை செயற்கைக்கோள்கள் ஆகியனவும் அனுப்பப்படுகின்றன. இவற்றின் மொத்த எடை 664 கிலோ. பூமி கண்காணிப்பு, தொலையுணர்வுக்காக 2005-ஆம் ஆண்டு கார்ட்டோ சாட் வகையான 5 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதன்படி, 2005-ஆம் ஆண்டு மே 5-இல் பி.எஸ்.எல்.வி. சி6 ராக்கெட்டில் முதல் கார்ட்டோ சாட் 1 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பி.எஸ்.எல்.வி. சி 7, பி.எஸ்.எல்.வி. சி 9, பி.எஸ்.எல்.வி. சி 15, பி.எஸ்.எல்.வி. சி34 உள்ளிட்ட ராக்கெட்டுகளில் கார்ட்டோ சாட் வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
Courtesy: Dinamani
0 Comments