Ads 720 x 90

Daily GK Update: Current Affairs in Tamil Medium. Date: 05.02.2017

TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc

கெளரவ் கில்லுக்கு சிறந்த மோட்டார் பந்தய வீரர் விருது
ஐந்து முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கார் பந்தய வீரரான கெளரவ் கில்லுக்கு ஆண்டின் சிறந்த மோட்டார் பந்தய வீரர் விருது வழங்கப்பட்டது. கெளரவ் கில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய பசிபிக் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 சுற்றுகளிலும் வெற்றி கண்டு புதிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

ஏஐடிஏ தலைவராக பிரவீண் மகாஜன் தேர்வு
அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் (ஏஐடிஏ) தலைவராக பிரவீண் மகாஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலராகிறார் அப்துல் பாசித்
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருக்கும் அப்துல் பாசித் (58), பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலராக விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலராக தற்போது ஐசாஸ் அகமது சௌதுரி உள்ளார். அவர், அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலராக அப்துல் பாசித்தை நியமிப்பது என்று அந்நாட்டு அரசு கொள்கை அளவில் முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

7 நாட்டு முஸ்லிம்களுக்கு அனுமதி மறுப்பு: டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்
இராக், ஈரான், சிரியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள், அமெரிக்கா வருவதற்கு தடை விதித்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அமெரிக்காவுக்குள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கை என்று கூறி, இராக், ஈரான், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த அகதிகள், அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை விதிக்கும் உத்தரவை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் பிறப்பித்தார்.

அமெரிக்காவின் தடைகளை மீறி ஏவுகணை சோதனை நடத்தியது ஈரான்
தங்களது நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், அதையெல்லாம் மீறி ஏவுகணை சோதனை உள்பட பல்வேறு ராணுவ பயிற்சிகளை ஈரான் சனிக்கிழமை மேற்கொண்டது. இதுபற்றி அந்நாட்டு ராணுவ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், எவ்வித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில் ராணுவ பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், வடகிழக்கு மாகாணமான செம்னானில் இப்பயிற்சிகள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தகவல் உரிமை சட்டம் அமல்
இலங்கையில் தகவல் உரிமை சட்டம் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. தகவல் உரிமை சட்ட அமலாக்கத்துக்கு முன்னோடியாக, அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து தகவல் வழங்கும் அதிகாரிகள், தகவல் வரையறைகள் தொடர்பான விவரங்கள் இலங்கை அரசிதழில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த சட்டம் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தல்: பஞ்சாபில் 75%, கோவாவில் 83% வாக்குப் பதிவு
பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் முறையே 75, 83 சதவீத வாக்குகள் பதிவாயின.

வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7%-க்கும் அதிகமாக இருக்கும்
எதிர் வரும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் கூறினார். நிகழ் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தைத் தெரிந்துகொள்வற்கு மார்ச் மாத இறுதிவரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால், அடுத்த நிதியாண்டில் (2017-18), பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும்.

சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு கருத்தரங்கம்
தில்லியில் வரும் 8-ஆம் தேதி தொடங்கி 2 நாள்களுக்கு அணு சக்தி பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்தக் கரத்தரங்கை மத்திய அரசு நடத்துகிறது. இதில் சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அணுசக்தி பாதுகாப்பு, அணு ஆயுதப் பரவல் தடுப்பு, அணுசக்தி சார்ந்த பயங்கரவாதத்தை ஒடுக்குவது ஆகியவை குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments