-->

Daily GK Update: Current Affairs in Tamil Medium. Date: 13.02.2017

TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc

104 நானோ செயற்கைக்கோள்களுடன் பிப். 15-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி- 37 ராக்கெட்
  • பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் மூலம், 104 நானோ செயற்கைக்கோள்கள் பிப்ரவரி 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த பிஎஸ்எல்வி சி}37 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 15ஆம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில், 39-ஆவது ராக்கெட் இதுவாகும். இந்த ராக்கெட் இந்தியாவின் 714 கிலோ எடைகொண்ட கார்டோசாட் வரிசையின் 2ஆவது செயற்கைக்கோளையும் சுமந்து செல்கிறது. கார்டோசாட்-2 செயற்கைக்கோள் பூமியை படமெடுக்கவும், கடல் வழி போக்குவரத்தை கண்காணிக்கவும், நீர்வள மேம்பாட்டுக்கும், காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கவும் உதவும். இந்தியாவின் இரண்டு நானோ செயற்கைக்கோள்களான ஐ.என்.எஸ் 1ஏ, ஐ.என்.எஸ்.1பி ஆகியவையும் இதில் அடங்கும். இத்துடன் இணைந்து, 664 கிலோ மொத்த எடை கொண்ட மற்ற நாடுகளின் 103 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளன.
  • இதில் இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளின் தலா ஒரு நானோ செயற்கைக்கோளுடனும், அமெரிக்காவில் இருந்து மொத்தம் 96 நானோ செயற்கைக்கோள்களுடன் பயணிக்கவுள்ளது பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட். இந்த நானோ செயற்கைகோள்கள் ஒவ்வொன்றும், 5 முதல் 10 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இந்த ராக்கெட்டுக்கான 48 மணி நேரத்துக்கான கவுண்ட் டவுன், பிப்ரவரி 13ஆம் தேதி காலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, 2014ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 37 செயற்கைக்கோள்களை ரஷியா செலுத்தியது தான், இப்போதைய சாதனையாக இருக்கிறது. இஸ்ரோ தரப்பில், இதற்கு முன்பு 20 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
கர்ப்பம் குறித்து முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உண்டு: உச்ச நீதிமன்ற நீதிபதி
ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதா அல்லது கருக்கலைப்பு செய்து கொள்வதா அல்லது கர்ப்பமடைவதைத் தடுப்பதா என்பதை முடிவு செய்யும் உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டு என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி தெரிவித்தார். ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதா அல்லது கருப்க்கலைப்பு செய்து கொள்வதா அல்லது கர்ப்பமடைவதைத் தடுப்பதா என்பதை முடிவு செய்யும் உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டு. அது அவரது உடல் சம்பந்தப்பட்ட விஷயமாகும். கர்ப்பம் என்ற நடைமுறைக்குள் ஒரு பெண்தான் படிப்படியாக வருகிறார். இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டிய உரிமை அவருக்குத்தான் இருக்க வேண்டும் என்றார் அவர்.

யானையின் சாணத்திலிருந்து காகிதம் உற்பத்தி
கேரள மாநிலம், மூணார் அருகே யானையின் சாணத்திலிருந்து காகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது. மூணார் அருகே சிருஷ்டி நல்வாழ்வு சங்கம் சார்பில் "அதுல்யா' எனப்படும் கைகளால் தயாரிக்கப்படும் காகித உற்பத்திப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு யானையின் சாணத்திலிருந்து காகிதத்தை உற்பத்தி செய்கின்றனர்.

பூனைக் குட்டிகளைக் கொல்ல ஆலோசனை வழங்கும் 4-ஆம் வகுப்புப் பாடத்தால் சர்ச்சை
பரிசோதனை ஒன்றுக்காக பூனைக் குட்டிகளைக் கொல்வதற்கு ஆலோசனை வழங்கும் 4-ஆம் வகுப்புப் பாடப் புத்தகத்தை அதன் வெளியீட்டு நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. ஆங்கில வழிக் கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு 4-ஆம் வகுப்பில் "நமது பசுமை உலகம்: சுற்றுச்சூழல் பாடம்' என்ற தலைப்பில் ஒரு பாடப் புத்தகம் உள்ளது. இந்தப் புத்தகத்தை பி.பி. பப்ளிகேஷன்ஸ் என்ற பதிப்பக நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடத்தில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களின் வேறுபாட்டை விளக்குவதற்காக ஒரு பூனைக் குட்டியை கொல்லும் முறை இடம்பெற்றுள்ளது.

ஹெச்-1பி விசா விவகாரம்: நிறுவனங்களிடமிருந்து புள்ளிவிவரங்களைக் கேட்கிறது மத்திய அரசு
ஹெச்-1பி விசாவுக்கு அமெரிக்க அரசு கட்டுப்பாடுகள் விதிப்பதால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு கேட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக அந்த விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வட கொரியா ஞாயிற்றுக்கிழமை காலை (12.02.2017) புதிய ஏவுகணை சோதனை நிகழ்த்தியதாக தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. ஏற்கெனவே வட கொரியா நிகழ்த்திய பல்வேறு வகை ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து, கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், அந்த நாடு மீண்டும் ஒரு ஏவுகணையை செலுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது.

பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை: இந்தியா சாம்பியன்
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை  (12.02.2017)  நடைபெற்ற பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இதன்மூலம் தொடர்ந்து 2-ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ள இந்திய அணி, இந்த உலகக் கோப்பையின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்துள்ளது.

தேசிய பங்குச் சந்தை தலைவருக்கு ரூ.8 கோடி ஊதியம்
தேசிய பங்குச் சந்தையின் புதிய தலைவரான விக்ரம் லிமாயேவுக்கு ஆண்டுக்கு ரூ.8 கோடி ஊதியம் வழங்கப்படவுள்ளது. உலகின் அதிக மதிப்பு கொண்ட பங்குச் சந்தைகளுள் ஒன்றான தேசிய பங்குச் சந்தையின் தலைமைப் பொறுப்பில் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த ஆண்டு டிசம்பரில் பதவி விலகினார். இதையடுத்து, ஐ.டி.எப்.சி.யில் தலைமைப் பொறுப்பில் இருந்த விக்ரம் லிமாயேவை தேசிய பங்குச் சந்தைக்கு புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தேசிய பங்குச் சந்தையின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விக்ரம் லிமாயேவுக்கு ஆண்டுக்கு ரூ.8 கோடி ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Courtesy: Dinamani

Free Download January 2017 Current Affairs: Click Here



Related Posts

Post a Comment

Subscribe Our Posting