Ads 720 x 90

Daily GK Update: Current Affairs in Tamil Medium. Date: 14.02.2017

TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc

பெண்கள் சம உரிமை மசோதா: ஆராய்வதற்கு அமைச்சர்கள் குழு அமைப்பு
  • பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வரைவு மசோதாவை ஆய்வு செய்ய மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழுவினை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார். சமூகத்தில் பல்வேறு நிலைகளில் பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் "பெண்களுக்கு அதிகாரமளித்தல் வரைவு மசோதா-2001' உருவாக்கப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் இந்த வரைவு மசோதா சட்டமாக்கப்படவில்லை.
  • இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீண்டும் அமைந்ததும் இந்த வரைவு மசோதாவில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், "பெண்கள் சம உரிமை வரைவு மசோதா-2016' என்ற பெயரில் புதிய வரைவு தயாரிக்கப்பட்டது.
இந்தியாவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது: கிரண் ரிஜிஜு
  • இந்தியாவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; அதே நேரத்தில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி இந்தியாவில் ஹிந்துக்கள் 79.80 சதவீதமும், முஸ்லிம்கள் 14.23 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 2.30 சதவீதமும், சீக்கியர்கள் 1.72 சதவீதமும், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் 0.70 சதவீதமும், ஜைன சமூகத்தினர் 0.37 சதவீதத்தினரும் உள்ளனர்.
  • 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி ஹிந்துகள் 80.5 சதவீதமும், முஸ்லிம்கள் 13.4 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 2.3 சதவீதமும், சீக்கியர்கள் 1.9 சதவீதமும், பௌத்த மதத்தினர் 0.80 சதவீதமும், ஜைன சமூகத்தினர் 0.4 சதவீதமும் இருந்தனர்.
பீட்டா விருது விவகாரம்: முன்னாள் நீதிபதி ராதாகிருஷ்ணனுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்த கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு பிராணிகள் நல அமைப்பான "பீட்டா', விருது அளித்த விவகாரத்தில் அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்தது. 

தமிழக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டும்: அட்டார்னி ஜெனரல்
தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு மாநில சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசின் தலைமைச் சட்ட ஆலோசகர் (அட்டார்னி ஜெனரல்) முகுல் ரோத்தகி கருத்து தெரிவித்துள்ளார்.

நாளை  (15.02.2017) ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட்: 28 நிமிடங்களில் 104 செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தத் திட்டம்
  • பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் புதன்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது. இதில், 104 செயற்கைக்கோள்களை 28 நிமிடங்களில் விண்வெளியில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து புதன்கிழமை காலை 9.28 மணிக்கு விண்ணில் பிஎஸ்எல்வி சி-37 செலுத்தப்படுகிறது. 28 நிமிடங்கள் 42.80 விநாடியில் விண்வெளிப் பாதையில், 104 செயற்கைக்கோள்களும் 505 கி.மீ. தூரத்துக்குள்ளாக விண்வெளிப்பாதையில் நிலை நிறுத்தப்படும். 714 கிலோ எடைகொண்ட கார்டோசாட் வரிசையில் 2-ஆவது செயற்கைக்கோளையும் சுமந்துச் செல்கிறது. 
  • பூமியை படமெடுக்கவும், கடல் வழிப் போக்குவரத்தைக் கண்காணிக்கவும், நீர்வள மேம்பாட்டுக்கும், காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கவும் கார்டோசாட் 2 செயற்கைக்கோள் உதவும். இந்தியாவின் இரண்டு நானோ செயற்கைக்கோள்களான ஐ.என்.எஸ் 1ஏ, ஐ.என்.எஸ்.1பி ஆகியனவும் இதில் அடங்கும். இத்துடன் இணைந்து 664 மொத்த எடை கொண்ட மற்ற நாடுகளின் 101 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளன. இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்ஸர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளின் தலா ஒரு நானோ செயற்கைக்கோளும் மேலும் அமெரிக்காவில் இருந்து மொத்தம் 96 நானோ செயற்கைக்கோள்களும், இந்தியாவின் இரண்டு நானோ செயற்கைக்கோள்களுடன் பயணிக்க உள்ளது பிஎஸ்எல்வி சி 37 ராக்கெட். இதற்கு முன்பு 2014-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 37 செயற்கைக்கோள்களை ரஷ்யா செலுத்தியது தான் இப்போதைய சாதனையாக இருக்கிறது.. இஸ்ரோ முதன் முதலாக 1993-ஆம் ஆண்டு The Polar Satellite Launch Vehicle  பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் ஐ.ஆர்.எஸ்-1 இ என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. இது தோல்வியில் முடிந்தது. அதன்பின் அனுப்பிய பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. இஸ்ரோ புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பவுள்ளது 39-ஆவது பி.எஸ்.எல்.வி. வரிசை ராக்கெட்டாகும்.
உலக வானொலி தினம் - பிப்ரவரி மாதம் 13
ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி உலக வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பிரதமர் மோடி டுவிட்டர் வலைதளத்தில் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: வானொலி ரசிகர்களுக்கும், வானொலி துறையில் பணியாற்றுபவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துறையை செயல்பாடு நிறைந்ததாகவும், துடிப்பானதாகவும் நிலைநிறுத்த வேண்டும்.

ரிலையன்ஸ் டிஃபன்ஸ்-அமெரிக்க கடற்படை வர்த்தக உடன்பாடு
போர்க் கப்பல்களில் பழுது நீக்கித் தருவது தொடர்பாக ரிலையன்ஸ் டிஃபன்ஸ் & என்ஜினியரிங் மற்றும் அமெரிக்க கடற்படை இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க போர்க் கப்பல்களை பழுது பார்ப்பது தொடர்பாக அமெரிக்க கடற்படை மற்றும் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. குஜராத்தின் பிபவாவில் உள்ள ரிலையன்ஸ் கப்பல் கட்டும் தளத்தில் அமெரிக்க கப்பல்களை பழுது நீக்குவது மற்றும் மறுவடிவமைப்பு செய்யும் பயணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அமெரிக்காவின் ஏழாவது கடற்படைப் பிரிவில் துணைக் கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையைச் சேர்ந்த 100 கப்பல்கள் இடம்பெற்றுள்ளன. மேற்கு பசிஃபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் இந்த படைப்பிரிவு தற்போது பராமரிப்பு பணிகளுக்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு செல்கின்றன. இந்த ஒப்பந்தத்தையடுத்து அந்தப் படைப்பிரிவு கப்பல்களின் பராமரிப்பு பணிகளை ரிலையன்ஸ் டிஃபன்ஸ் மேற்கொள்ள தற்போது வழி ஏற்பட்டுள்ளது 

இந்தியா போஸ்ட் வங்கிக்கு மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கீடு
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிக்கு (ஐ.பி.பி.பி.) வரும் நிதியாண்டுக்கு மத்திய அரசு ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஐ.பி.பி.பி. நாடு தழுவிய அளவில் 650 கிளைகளை தொடங்க முடிவு செய்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஐ.பி.பி.பி.க்கு வரும் 2017-18 நிதி ஆண்டுக்கு ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிக்கு நிறுவன முறையில் ரூ.125 கோடி மூலதனமும், மானியம் மூலமாக ரூ.375 கோடியும் வழங்கப்பட உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏவுகணை தொழில்நுட்ப மேம்பாடு: எல் & டி - ஐரோப்பிய நிறுவனம் ஒப்பந்தம்
இந்தியாவில் ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் எல் & டி நிறுவனம், ஐரோப்பிய பாதுகாப்புத் துறை நிறுவனமான எம்.பி.டி.ஏ. வுடன் திங்கள்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்திய வம்சாவளி நடிகர் தேவ் படேலுக்கு பாஃப்டா விருது
இந்திய வம்சாவளி ஹாலிவுட் நடிகர் தேவ் படேலுக்கு பிரிட்டனின் மிக உயர்ந்த திரைப்பட விருதான பாஃப்டா விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. "லயன்' என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருது தேவ் படேலுக்கு வழங்கப்பட்டது. பிரிட்டன் மற்றும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு பாஃப்டா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2016-ஆம் ஆண்டுக்கான பாஃப்டா விருது வழங்கும் நிகழ்ச்சி லண்டனில் ஞாயிற்றுக்கிழமை (13.02.2017) நடைபெற்றது.

வட கொரிய ஏவுகணை சோதனை விவகாரம்: ஐ.நா. பாதுகாப்புக் குழு அவசரக் கூட்டம் நடத்த வலியுறுத்தல்
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்புக் குழு அவசரக் கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன. வட கொரியா புதிய ஏவுகணை சோதனையை ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தியது. முந்தைய பலஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்புக் குழு அந்நாட்டின் மீது கடுமையான தடைகளை விதித்திருந்தது. அந்தத் தடைகளையும் மீறி புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

தொழில்முறை குத்துச்சண்டையில் களமிறங்க விகாஸ் திட்டம்
இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன், இந்த ஆண்டின் இறுதிக்குள் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான விகாஸ், தற்போது அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வசித்து வருகிறார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜோ ரூட் நியமனம்
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் கேப்டனாக இருந்த அலாஸ்டர் குக், தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து துணை கேப்டனான ஜோ ரூட் இப்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தோனி, கவாஸ்கரின் சாதனைகளை முறியடித்த விராட் கோலி
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதன்மூலம் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார் விராட் கோலி. தோல்வியின்றி அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்கிற பெருமையும் கோலிக்குக் கிடைத்துள்ளது. இதில் கவாஸ்கரின் சாதனையைத் தாண்டியுள்ளார் கோலி. 19 விராட் கோலி*, 18 கவாஸ்கர், 17 கபில் தேவ், 14 அசாருதீன், 11 தோனி

இன்றைய தினம் - (பிப்ரவரி 14)
1924 - ஐ.பி.எம்., நிறுவனம் அமைக்கப்பட்டது
1946 - ஈ.என்.ஐ.ஏ.சி., என்ற முதல் தலைமுறை கணினி அறிமுகமானது
1966 - ஆஸ்திரேலிய பவுண்டிற்கு பதிலாக ஆஸ்திரேலிய டாலர் அறிமுகப்படுத்தப்பட்டது
இன்றைய சிறப்பு தினம்
கம்யூனிஸ்ட் தியாகிகள் நாள் (ஈராக்)
பயணச்சீட்டுகள் தினம் (அரிசோனா)
பயணச்சீட்டுகள் தினம் (ஒரிகன்)