TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
கூடங்குளத்தில் 6 உலைகள் மட்டுமே சாத்தியம்: ஆர்.எஸ். சுந்தர் உறுதி
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் இந்திய-ரஷிய கூட்டு ஒப்பந்தப்படி 6 உலைகள் மட்டுமே அமைக்க அனுமதி உள்ளது; கூடுதல் உலைகள் அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பிப்ரவரி 21-ஆம் தேதியை தமிழ் மொழி தினமாக அரசு சார்பில் கொண்டாட வேண்டும்'
ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் தேதியை தமிழ்மொழி தினமாக அரசு சார்பில் கொண்டாட வேண்டும் என்று தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் மகள் டாக்டர் மணிமேகலை கண்ணன் கூறினார்.
17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: திட்டத்தைத் தொடங்கி வைத்தார் குடியரசுத் தலைவர்
இந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட 17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான திட்டத்தை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். போலியோவை முற்றிலுமாக ஒழித்துள்ள இந்தியா, அந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கும் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான இந்தத் திட்டத்தை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தில்லியில் சனிக்கிழமை (28.01.2017) தொடங்கி வைத்தார். தேசிய நோய் எதிர்ப்பு தினத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளித்து அவர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
"உஜாலா' திட்டம்: பிகாரில் 1 கோடி மலிவு விலை எல்இடி பல்புகள் வினியோகம்
பிகாரில், மின்சாரத்தை சேமிக்கும் 1 கோடிக்கும் மேற்பட்ட எல்இடி மின்விளக்குகள் மலிவு விலையில் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின்சார சிக்கனத்தை வழங்கக்கூடிய "எல்இடி' விளக்குகளை பொதுமக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம், எரிசக்தியை மிச்சப்படுத்த "மலிவு விலை எல்இடி பல்புகள் மூலம் உன்னத வாழ்வு' (உஜாலா) என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு (2016) ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி, மத்திய அரசுக்குச் சொந்தமான "எனர்ஜி எஃபிஷியன்ஸி சர்வீஸஸ்' (இஇஎஸ்எல்) நிறுவனம் "எல்இடி' விளக்குகளைத் தயாரித்து மாநில அரசு அமைப்புகள் மூலம் மலிவு விலையில் வினியோகித்து வருகிறது.
பிரதமரின் வானொலி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
பிரதமர் நரேந்திர மோடியின் "மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை (ஜன.29) ஒலிபரப்புவதற்கு தேர்தல் ஆணையம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு அடுத்த மாதம் 4-ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 8-ஆம் தேதி வரை பல கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
"அந்தியோதயா' ரயில் சேவை அடுத்த மாதம் தொடக்கம் (பிப்ரவரி 2017)
பல்வேறு வசதிகளுடன், முற்றிலும் முன்பதிவில்லாத இருக்கைகளுடன் கூடிய "அந்தியோதயா' அதிவேக ரயில் சேவை அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளது.
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தமிழக அலங்கார வாகனத்துக்கு 3-ஆவது பரிசு
தில்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் "கிராமப்புற அம்மன் கோயில் கரகாட்டத்தை' கருத்தாக்கமாகக் கொண்ட தமிழக அலங்கார வாகனத்துக்கு 3-ஆவது பரிசு கிடைத்துள்ளது. சுதந்திர போராட்டத் தியாகி பாலகங்காதர் திலகரின் 160-ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வை கருத்தாக்கமாகக் கொண்டு அணிவகுப்பில் சென்ற மகாராஷ்டிர அலங்கார வாகனத்துடன் இந்த பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டது.
- 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், ஆறு மத்திய அரசுத் துறைகள் ஆகியவற்றில் புத்த மதத்தைத் தழுவிய பழங்குடியின மக்களின் பாரம்பரிய "யாக்' நடனத்தை கருத்தாக்கமாகக் கொண்டு அணிவகுப்பில் சென்ற அருணாசல பிரதேசத்துக்கு முதலாவது பரிசு கிடைத்தது.
- "ரியாங்' பழங்குடியினரின் ஹோஜகிரி நடனத்தை கருத்தாக்கமாகக் கொண்ட திரிபுரா மாநிலத்துக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது.
- பாரம்பரிய கலையை போற்றும் வகையில் அலங்கார அணிவகுப்பில் சென்ற தமிழகம், மகாராஷ்டிரம் ஆகியவை மூன்றாவது பரிசை சமமாக பகிர்ந்து கொள்ளும் என்று தேர்வுக் குழு கூறியது.
- தேசிய மூவர்ண கொடிக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த சுதந்திர போராட்ட தியாகிகளின் கதைகளை விளக்கும் வகையில், தில்லி பீதாம்புராவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் குழுவுக்கு பள்ளிக் குழந்தைகள் பிரிவுக்கான பரிசு கிடைத்தது.
- மத்திய அரசுத் துறைகளில் திறன்சார் மேம்பாட்டுத் துறைக்கு முதல் பரிசும், "பசுமை இந்தியா, தூய்மை இந்தியா' என்ற கருத்தாக்கத்தைக் கொண்ட மத்திய பொதுப் பணித் துறைக்கு சிறப்புப் பரிசும் கிடைத்தது
- மத்திய பிரதேச மாநிலத்தின் "கோந்த்' பழங்குடியினரின் "சைலா கர்மா' நடனமாடி அணிவகுப்பில் சென்ற நாகபுரியில் உள்ள தென் மத்திய மண்டல கலாசார மையத்துக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது.
புதிய அரசியல் சாசனத்துக்கு மகிந்த ராஜபட்ச எதிர்ப்பு
இலங்கையில் புதிதாக இயற்றப்படவுள்ள அரசியல் சாசனத்தை தாம் எதிர்ப்பதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 1978-இல் இயற்றப்பட்டு, தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் சாசனத்துக்கு மாற்றாக புதிய சாசனத்தை இயற்ற மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
சீனப் புத்தாண்டு
சீனப் புத்தாண்டுப் பிறப்பு சனிக்கிழமை நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. சீனர்களின் நம்பிக்கையின்படி இது "சேவல் ஆண்டாக' கொண்டாடப்படுகிறது.
அமெரிக்க பாதுகாப்புப் படைகளை மேம்படுத்த திட்டம்
அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் மேம்பாடு தொடர்பான திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும் உத்தரவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார். முன்னதாக, பாதுகாப்புத் துறை அமைச்சராக ஜேம்ஸ் மேட்டிஸ் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. துணை அதிபர் மைக் பென்ஸ் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைய கடும் நிபந்தனைகள்: அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளிலிருந்து அமெரிக்கா வருவோரை கடுமையான பரிசோதனைக்குப் பிறகே குடியேற அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
பணப்பட்டுவாடா வங்கி தொடங்க உரிமம் பெற்றது இந்திய அஞ்சலகத் துறை
இந்தியா போஸ்ட் பணப்பட்டுவாடா வங்கி தொடங்குவதற்கான உரிமத்தை இந்திய அஞ்சலகத் துறை, ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் - ஆடவர் இரட்டையர்: பியர்ஸ்-ஹென்றி ஜோடி சாம்பியன்
ஆடவர் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-ஃபின்லாந்தின் ஹென்றி கான்டினென் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டி: செரீனா வில்லியம்ஸ் சாம்பியன்
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். செரினா வெல்லும் 23-ஆவது க்ராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். இன்னும் ஒரு பட்டம் வென்றால் உலக சாதனையை அவர் சமன் செய்வார். ஆஸ்திரேலிய ஓப்பனில் அவர் வெல்லும் 7-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் இன்று (29th January)
வரலாற்றில் இன்று (29th January)
- கிப்ரல்டார் அரசியலமைப்பு தினம்
- ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது(1595)
- இந்திய சுதந்திர போராட்ட வீரர் பி.எஸ்.பி.பொன்னுசாமி இறந்த தினம்(1998)
- கான்சஸ், அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது (1861)
- அமெரிக்காவில் சிஐஜி எனப்படும் மத்திய உளவுத்துறை குழு அமைக்கப்பட்டது (1946)
- ஸ்டாம்ஃபோர்ட் ராபில்ஸ், சிங்கப்பூரில் தரையிறங்கினார் (1819)
0 Comments