TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
ஜல்லிக்கட்டு: புதிய மசோதா நிறைவேறியது
- தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தடையின்றி நடத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா, சட்டப் பேரவையில் ஒருமனதாக குரல் வாக்கெடுப்பு மூலம் திங்கள்கிழமை நிறைவேறியது. சட்டத் திருத்த மசோதா: தமிழ்நாடு மாநிலத்தின் பண்பாடு, பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், சொந்த மண்ணின் காளைகள் உயிர் வாழ்வதையும், அவை தொடர்ந்து நன்றாக இருப்பதை உறுதி செய்வதை நிச்சயிக்கும் வகையிலும் 1960-ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என திருத்த மசோதாவின் தலைப்பாக இடம்பெற்றுள்ளது.
- திருத்தங்கள் என்னென்ன? விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் 2-ஆவது பிரிவில் ஒரு உட்கூறு புகுத்தப்படுகிறது. அதாவது ஜல்லிக்கட்டு என்பது மாநில அரசால் அறிவிக்கப்படும் இடங்களில் ஜனவரி முதல் மே மாதங்கள் வரை நடத்தப்படும். இத்தகைய நாள்களில் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பின்பற்றும் நோக்கத்துடன் காளைகளை ஈடுபடுத்தி நடத்தப்படும் ஒரு நிகழ்வு என பொருள்படும். இதில், மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் விழா ஆகியனவும் உள்ளடங்குவதாக இருக்கும்.
- முதன்மைச் சட்டத்தின் 3-ஆவது பிரிவிலும் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, மாநில அரசால் இயற்றப்படுகின்ற விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்படுதல் வேண்டும் என்ற கருத்து சேர்க்கப்பட்டிருக்கிறது.
- ஜல்லிக்கட்டு ஏன்? இந்த இரண்டு திருத்தங்களுடன், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் 11-ஆம் பிரிவின் 3-ஆவது உட்பிரிவில் உள்ள அம்சமானது திருத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- இதேபோன்று, 22-ஆவது பிரிவிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதன்மைப் பிரிவான 22-ஆவது பிரிவானது, விலங்கினங்களை பயிற்சி மற்றும் காட்சிப்படுத்துதல் தொடர்பாக விவரிக்கிறது. தமிழக அரசின் திருத்தத்தின்படி, 22-ஆவது பிரிவில் கூறப்பட்டிருக்கும் அம்சமானது ஜல்லிக்கட்டு நடத்துவதற்குப் பொருந்தாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வதை தடுப்புச் சட்டப் பிரிவிலும்...விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் 27-ஆவது பிரிவிலும் மேலும் ஒரு சிறப்புக் கூறை தமிழக அரசு சேர்த்துள்ளது. அதாவது, மத்திய அரசின் சட்டப்படி 27-ஆவது பிரிவின் பி பிரிவானது, மிருகங்களை கல்வி தொடர்பாகவோ அல்லது அறிவியல் தொடர்பாகவோ காட்சிப்படுத்தக் கூடாது எனக் கூறுகிறது.
- இந்தப் பிரிவுக்குப் பிறகு தமிழக அரசு கூடுதலாக ஒரு பிரிவைச் சேர்த்துள்ளது. அதாவது, சொந்த மண்ணின் காளைகள் உயிர் வாழவும், தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதை உறுதி செய்யும் பொருட்டும், பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பின்பற்றி-முன்னேற்றும் நோக்கத்துடனும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுதல் வேண்டும் என்ற பிரிவை கூடுதலாக இணைத்துள்ளது.
- மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் 28-ஆவது பிரிவானது, மதத்தின் பெயரால் விலங்குகளுக்கு ஏற்படும் வதை குறித்து விவரிக்கிறது. இந்தப் பிரிவில் ஜல்லிக்கட்டைப் காப்பதற்காக கூடுதலாக ஒரு காப்புப் பிரிவு சேர்க்கப்படுகிறது.
- அதாவது, இந்த 28-ஆவது சட்டப் பிரிவில் அடங்கிருப்பது எதுவும் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பின்பற்றி மற்றும் அதனை முன்னேற்றுவதற்காக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்குப் பொருந்தாது. அவ்வாறு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு இந்தச் சட்டத்தின்படி ஒரு குற்றமாகக் கருதப்பட மாட்டாது என்ற காப்புப் பிரிவை தமிழக அரசு கூடுதலாகச் சேர்த்துள்ளது.
- குரல் வாக்கெடுப்பு: தமிழக அரசு ஏற்கெனவே கொண்டு வந்த அவசரச் சட்டம் கடந்த 21- ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், இந்த அவசரச் சட்டத்தை நிரந்தரச் சட்டமாக்கும் வகையில் திருத்தச் சட்ட மசோதா பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
மெட்ரோ ரயில் 2 -ஆம் கட்ட திட்ட அறிக்கை பரிசீலனை
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது என்று ஆளுநர் கூறியுள்ளார். வண்ணாரப்பேட்டைக்கும், திருவொற்றியூர், விம்கோ நகருக்கும் இடையேயான மெட்ரோ ரயில் முதல் கட்ட நீட்டிப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம்
மத்திய அரசின் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளில் தமிழக அரசு திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியுள்ளது
5-ஆவது மாநில நிதிக் குழு பரிந்துரை: அடுத்த கூட்டத் தொடரில் செயல் அறிக்கை வைக்கப்படும்
ஐந்தாவது மாநில நிதிக்குழுவின் பரிந்துரைகள் மீதான செயல் அறிக்கை சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டத் தொடரில் வைக்கப்படும் என்று ஆளுநர் கூறியுள்ளார். ஆளுநர் உரையில் கூறியிருப்பது: ஐந்தாவது மாநில நிதிக் குழு தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது. அந்த அறிக்கை மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த செயல் அறிக்கை சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் வைக்கப்படும். ஏழைகளுக்கு வீட்டுவசதி வழங்கும் மாபெரும் இயக்கத்தை 2016-17-ஆம் ஆண்டில் தமிழக அரசு துவக்கியுள்ளது. கிராமப்புறங்களில் 1,97,619 வீடுகளையும், நகர்ப்புறங்களில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக 1,35,343 வீடுகளையும் 2016-17-ஆம் ஆண்டில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா பிறந்த தினத்தில் மரம் நடும் பெருந்திட்டம்: ஆளுநர் உரையில் அறிவிப்பு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி, மரம் நடும் பெருந்திட்டம் தொடங்கப்படும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார். மரங்கள் நடுவது, பசுமைப் பரப்பை அதிகரிப்பது போன்றவை தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உள்ளம் கவர்ந்த பணியாகும். எனவே, இந்த மரம் நடும் பெருந்திட்டம் அவரது 69-வது பிறந்த தினமான வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கப்படும்.
'கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது'
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்விச் சட்டம் தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் பெருமித்துடன் கூறியுள்ளார்.
ரூ.803 கோடியில் மானாவாரி வேளாண்மை இயக்கம்
ரூ.803 கோடி செலவில் நிலைக்கத்தக்க மானாவாரி வேளாண்மை இயக்கத்தை தமிழக அரசு விரைவில் தொடங்கும் என்று ஆளுநர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் உரையில் கூறியிருப்பது:-மானாவாரி விவசாயப் பகுதிகளின் மேம்பாட்டுக்காகவும், அந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றின் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும் நோக்குடனும் 2016-17-ஆம் ஆண்டில் தொடங்கி, அடுத்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தும் வகையில் ரூ.803 கோடியில் நிலைக்கத்தக்க மானாவாரி வேளாண்மை இயக்கத்தை தமிழக அரசு விரைவில் தொடங்க உள்ளது.
குடிமராமத்து திட்டம் விரைவில் தொடங்கப்படும்
நீர் ஆதார மேலாண்மையை மேற்கொள்ள குடிமராமத்து திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்க உள்ளதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் கூறியிருப்பது:- நீர் ஆதாரங்களை முறையாகவும், சிறப்பாகவும் பராமரித்து பயன்படுத்திட தமிழக அரசு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பொது மக்களின் பங்களிப்புடன் நீர் ஆதார மேலாண்மையை மேற்கொள்ள குடிமராமத்து திட்டத்தை அரசு விரைவில் தொடங்க உள்ளது.
தோனி, பி.வி.சிந்துவுக்கு பத்ம விருதுகள்
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வெளியுறவுச் செயலரின் பதவிக்காலம் நீட்டிப்பு
மத்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ். ஜெய்சங்கரின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கரின் பதவிக்காலம் வரும் 28-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையொட்டி, அவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு காலம் நீட்டிப்பதற்கான வரைவினை அமைச்சரவை நியமனக் குழுவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதற்கு அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து, அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நீட்டிப்பு
மத்திய பொருளாதாரத் துறைச் செயலர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பொருளாதாரத் துறைச் செயலர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, அவரது பதவியினை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான வரைவினை அரசு தயாரித்தது. இந்த வரைவுக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, பொருளாதாரத் துறைச் செயலர் பதவியில் மே 31-ஆம் தேதி வரை சக்திகாந்த தாஸ் நீடிப்பார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம்: 5 நூற்றாண்டுகளாக பணப் பரிவர்த்தனை இல்லாத குக்கிராமம்
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 5 நூற்றாண்டுகளாக முழுக்க முழுக்க பணப் பரிவர்த்தனையே இல்லாத குக்கிராமம் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எவ்வித தொழில்நுட்பமும் இன்றி அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியிலிருந்து 32 கி.மீ. தூரத்தில் உள்ள சிறிய குக்கிராமத்தில் கடந்த 500 ஆண்டுகளாக பணப் பரிவர்த்தனையே இல்லையெனில் அவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். அந்த கிராமத்தில் பாபிலோனியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பண்டமாற்று முறை இன்னும் பயன்பாட்டில் உள்ளது. மத்திய அஸ்ஸாம் மற்றும் மேகாலயத்தைச் சேர்ந்த திவாஸ் என்ற பழங்குடியின மக்கள் ஆண்டுதோறும் ஜனவரி 3-ஆவது வாரத்தில் வர்த்தகக் கண்காட்சியை நடத்தி வருகின்றனர். அதன்படி மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தில் பழங்குடியின மக்களின் மூன்று நாள் கண்காட்சி தொடங்கியது.
மின்னணு பணப் பரிமாற்றத்துக்கு தனி ஒழுங்குமுறை அமைப்பு: மத்திய அரசு பரிசீலனை
மின்னணு பணப் பரிமாற்றத்தை ஒழுங்குமுறைப்படுத்த தனி அமைப்பை ஏற்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. மின்னணுப் பணப் பரிமாற்றம் குறித்து பரிந்துரைகளை அளிக்க மத்திய அரசு நியமித்த ரத்தன் வாட்டாள் குழு, நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கடந்த மாதம் தனது அறிக்கை அளித்தது. அதில், மின்னணு பணப் பரிமாற்றத்தை ஒழுங்குமுறைப்படுத்த தனி அமைப்பை ஏற்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அதே நேரத்தில் மின்னணுப் பணப் பரிமாற்றத்துக்கான கட்டணத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது
மோரீஷஸ் பிரதமர் திடீர் ராஜிநாமா
மோரீஷஸ் பிரதமர் அனிருத் ஜகந்நாத் திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தை அதிபர் அமீனா குரீப் ஃபகீமிடம் அவர் அளித்தார். அதையடுத்து அவரது மகன் பிரவீந்த் ஆட்சிப் பொறுப்பேற்பதாக அறிவிக்கப்பட்டது. தந்தையின் அமைச்சரவையில் பிரவீந்த் ஜகந்நாத் நிதி அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.
தேசிய மகளிர் ஹாக்கி: ஜார்க்கண்ட் சாம்பியன்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டியில் ஜார்கண்ட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேலுமாணிக்கம் செயற்கைப்புல் ஹாக்கி மைதானத்தில் 7-ஆவது தேசிய அளவிலான சப்-ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டி கடந்த 3-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. சிறந்த வீராங்கனையாக ஜார்க்கண்டின் சஞ்சிதா குமாரியும், சிறந்த கோல் கீப்பராக ஜார்க்கண்டின் கல்யாணி கிந்தோவும், சிறந்த தடுப்பாட்டக்காரராக ஹரியாணாவின் பிரீத்தியும், சிறந்த நடுகள ஆட்டக்காரராக ஜார்க்கண்டை சேர்ந்த பியூட்டி டங்டங்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
வரலாற்றில் இன்று (24.01.2017)
- தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது - (1857)
- பேடன் பவல், சாரணியர் இயக்கத்தை ஆரம்பித்தார் - (1908)
- ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம், லெனின் கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது - (1924)
- முதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது - (1984)
- இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி பாபா இறந்த தினம் - (1966)
நன்றி: தினமணி நாளிதழ்
Courtesy: Dinamani
0 Comments