TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்: ரஷிய உதவியுடன் இயக்கத் திட்டம்
ரஷிய நாட்டு உதவியுடன் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இது தொடர்பாக முதல் கட்ட ஆய்வு அறிக்கை கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் திட்டமாக நாகபுரியில் இருந்து செகந்தராபாத் வரையிலான 575 கி.மீ. தொலைவுக்கு இந்த 200 கி.மீ. வேக ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இப்போதைய அதிவேக ரயில் கதிமான் எக்ஸ்பிரஸாகும். இந்த ரயில் ஒரு மணி நேரத்தில் 160 கி.மீ. தொலைவைக் கடக்கும்
மலேசிய மாஸ்டர்ஸ்: சாய்னா சாம்பியன்
மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றார். மலேசியாவின் சாராவாக் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சாய்னா 22-20, 22-20 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் போர்ன்பாவீ சோச்சுவாங்கை தோற்கடித்தார். இதன்மூலம் தனது பாட்மிண்டன் வாழ்க்கையில் 23-ஆவது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் சாய்னா.
தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகம்
நாட்டிலேயே முதன்முறையாக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவா சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 4-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சையத் நசீம் ஜைதி மாநிலத் தலைநகர் பனாஜிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவாவில் ராணுவம், துணை ராணுவப் படைப் பிரிவுகளைச் சேர்ந்த 822 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கான தபால் வாக்குகளை தேர்தல் அலுவலர்கள் மின்னணு முறையில் அனுப்பி வைப்பர். அவற்றை சம்பந்தப்பட்ட வீரர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அவற்றை நிரப்பிய பின் மின்னஞ்சல் வாயிலாக தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் தேர்வு
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் ஆளும் சோசலிசக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் சுற்று வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்த நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் ஆட்சி முறை நடைமுறையிலுள்ள அந்நாட்டில் தற்போது சோசலிசக் கட்சியைச் சேர்ந்த பிரான்ஸýவா ஹொலாந்த் அதிபராக உள்ளார்.
Courtesy: Dinamani Newspaper
Post a Comment