-->

Daily GK Update: Current Affairs in Tamil Medium. Date: 28.01.2017

TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.

ரூபல்லா தடுப்பூசி: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்
தட்டம்மை -ரூபல்லா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். ஒன்பது மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது வரை உள்ள அனைவருக்கும் தட்டம்மை -ரூபல்லா என்ற தடுப்பூசி வழங்கும் திட்டத்தில், முதல் கட்டத்திலேயே தமிழகமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தட்டம்மை -ரூபல்லா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 6 -ஆம் தேதி முதல் 28 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வழக்கமாக பிறந்து 10 மாதம் முதல் 12 மாதங்கள் வரை ஆன குழந்தைகளுக்கு முதல் தவணையும், 16 மாதம் முதல் 24 மாத வரையான குழந்தைகளுக்கு 2- ஆம் தவணையும் தட்டம்மை தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் தடுப்பூசி, தட்டம்மை மற்றும் ரூபல்லாவை கட்டுப்படுத்த வழங்கப்படும். ஏற்கெனவே தட்டம்மை தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தாலும் இத்திட்டத்தின்கீழ் 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.

ஏனாமைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு வீர தீரச் செயலுக்கான சேனா விருது
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற துல்லிய தாக்குதலில் பங்கேற்ற ஏனாமைச் சேர்ந்த ராணுவ வீரர் ஓலேட்டி லட்சுமி வீர நரேஷுக்கு, வீர தீரச் செயலுக்கான சேனா விருது வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் ஜவஹர் சிறுவர் மன்ற மாணவிக்கு பாலஸ்ரீ விருது
குடியரசுத் தலைவரின் பாலஸ்ரீ விருதுக்கு, நாமக்கல் ஜவஹர் சிறுவர் மன்ற மாணவி எஸ்.பி.மதுரிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து இவ்விருது பெறும் முதல் மாணவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்எல்வி மார்க் 3-இல் பொருத்தும்: கிரையோஜெனிக் என்ஜினின் முதல்கட்ட சோதனை வெற்றி
ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டில் பொருத்தக்கூடிய கிரையோஜெனிக் மேல்நிலை என்ஜினின் முதல்கட்ட தகுதிநிலைச் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. இதன் இரண்டாம் கட்டச் சோதனையும் வெற்றி பெற்றால், கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் மூலம் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை எளிதாக விண்ணில் செலுத்த முடியும்.

ராணுவ வீரர்கள் குறைகளைக் தெரிவிக்க "வாட்ஸ் ஆப்' எண்: விபின் ராவத் வெளியிட்டார்
ராணுவ வீரர்கள் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்கு, பிரத்யேக கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) எண்ணை ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் அறிமுகப்படுத்தினார். ராணுவ வீரர்கள் தங்களது குறைகளை தெரிவித்து, நிவாரணம் காண்பதற்கு +91 9643300008 என்ற கட்செவி அஞ்சல் எண்ணை விபின் ராவத் அறிமுகப்படுத்தினார். இந்த எண்ணுக்கு குறைகளை அனுப்பி, நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

நிர்பயா நிதியில் 16% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு
நிர்பயா நிதித் தொகுப்பில் இருந்து பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 16 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிர்பயா நிதித் தொகுப்புக்கு கடந்த 2015-16ஆம் நிதியாண்டில் ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டது. 2016-17ஆம் நிதியாண்டில் மேலும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், பெண்களின் பாதுகாப்புக்காக ரூ.2,200 கோடி மதிப்பில் தீட்டப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. அதில் ரூ.1,530 கோடியை அமைச்சகம் ஒதுக்கீடும் செய்தது. எனினும், அந்த நிதியில், 16 சதவீத நிதியை மட்டுமே, அதாவது ரூ.400 கோடியை மட்டுமே சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் பயன்படுத்தியுள்ளன என்று அந்த அறிவிப்பில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சார்க் நிர்வாகக் குழுக் கூட்டம்: பிப்.1-இல் தொடக்கம்
சார்க் நாடுகளின் நிர்வாகக் குழுக் கூட்டம் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் பிப்ரவரி 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. நிதி-நிலை விவரங்கள், ஆண்டறிக்கை, நிர்வாக ரீதியான முடிவுகள் உள்ளிட்டவை தொடர்பான விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. இந்தியா சார்பில் "பிம்ஸ்டெக்' மற்றும் "சார்க்' அமைப்புகளுக்கான இணைச் செயலர் பிரசாந்த் அகர்வால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

3 இந்திய வம்சாவளியினருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது (புருஷோத்தம் சாரிக்கர், பெர்த் நகரில் வசித்துவரும் மாக்கன் சிங் கங்குரே, விஜய் குமார்)
  • மருத்துவம், சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட்டது ஆகிய பிரிவுகளில் இந்திய வம்சாவளியினர் 3 பேருக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயரிய விருது வழங்கப்பட உள்ளது. ஆஸ்திரேலிய தினத்தன்று (ஜன.26) 2017-ஆம் ஆண்டுக்கான உயரிய விருதுகள் பெறும் நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
  • ஆஸ்திரேலிய, இந்திய மருத்துவ பட்டதாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவராக புருஷோத்தம் சாரிக்கர் பதவி வகித்திருக்கிறார். அவர், "ஆகாசவாணி சிட்னி' என்ற பெயரில் சிட்னி நகரில் சமூக வானொலி தொடங்கியிருக்கிறார். நியூரோரேடியாலாஜி, கல்வி ஆகிய பிரிவில் முக்கியப் பங்காற்றியதற்காக மாக்கன் சிங் கங்குரே உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • மேலும், ஒவ்வோரு ஞாயிற்றுக்கிழமையும் ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கி இவர் சேவை செய்து வருகிறார். அணுவியல் மருத்துவ நிபுணர் மற்றும் ஆய்வாளரான விஜய் குமார், தனது துறையில் முக்கியப் பங்காற்றியதற்காக அந்நாட்டின் உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • சிட்னி தமிழ்ச் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான விஜய் குமார், 2007 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் விருதையும் பெற்றிருக்கிறார்
மெக்சிகோவில் தயாரித்த பொருள்களுக்கு 20% கூடுதல் வரி
அமெரிக்கா - மெக்சிகோ இடையிலான எல்லைப் பகுதி முழுவதும் பாதுகாப்புச் சுவர் எழுப்புவதற்குத் தேவையான நிதியை மெக்சிகோ தர மறுத்தால், அந்நாட்டில் உற்பத்தியாகி அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 20 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்த முதல் தலைவர் தெரஸா மே
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பிரிட்டன் பிரதமர் தெரஸா மே, வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு டிரம்பை சந்தித்த முதல் சர்வதேசத் தலைவர் தெரஸா மே என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்த பிறகு, அமெரிக்காவுடன் வர்த்த உறவை மேம்படுத்திக் கொள்ள பிரிட்டன் ஆர்வம் காட்டி வருகிறது.

ஐசிசி தரவரிசை: கோலி 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்
ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஓர் இடத்தை இழந்து 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆசிய செஸ்: அண்ணா பல்கலை.க்கு 2-ஆவது இடம்
மலேசியாவில் நடைபெற்ற ஆசிய செஸ் போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.

இன்று 28.1.2013
  • சர்வதேச தொழுநோய் தினம்
  • அர்மேனியா ராணுவ தினம்
  • சென்னையில் முதன் முதலாக தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது(1882)
  • இந்திய அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா பிறந்த தினம்(1925)
  • அலெக்சாண்டர் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1821) 
  • உலக தொழுநோய் நாள்
வரலாற்றில் இன்று ஜனவரி 28
நிகழ்வுகள்
  • 1547 - எட்டாம் ஹென்றியின் இறப்பு. அவனது 9 வயது மகன் ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.
  • 1624 - கரிபியனில் முதலாவது பிரித்தானியக் குடியேற்ற நாடான சென் கிட்ஸ் சர் தொமஸ் வார்னர் என்பவரால் அமைக்கப்பட்டது.
  • 1679 - சென்னை கோட்டைப் பகுதியில் சிறு நிலநடுக்கம் உணரப்பட்டது.
  • 1820 - ஃபாபியன் பெலிங்ஷோசென் தலைமையில் ரஷ்யா நாடுகாண் பயணக்குழு அண்டார்ட்டிக்காவை அடைந்தது.
  • 1846 - அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர்.
  • 1882 - சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1909 - ஐக்கிய அமெரிக்கப் படைகள் குவாண்டானாமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகினர்.
  • 1918 - பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
  • 1932 - ஜப்பானியப் படைகள் ஷங்காய் நகரைத் தாக்கினர்.
  • 1935 - ஐஸ்லாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது.
  • 1986 - சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.
  • 1987 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 2002 - கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அண்டெஸ் மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
  • 1853, ஹொசே மார்த்தி, கியூபாவின் புரட்சியாளர் (இ. 1895)
  • 1922 - ரொபேர்ட் ஹோலி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1993)
  • 1925 - ராஜா ராமண்ணா, இந்திய அணுவியல் நிபுணர்
இறப்புகள்
  • 1939 - வில்லியம் யீட்ஸ், நோபல் பரிசு பெற்ற ஐரிஸ் எழுத்தாளர் (பி. 1865)
  • 1996 - ஜோசப் புரொட்ஸ்கி, நோபல் பரிசு பெற்ற ரசியக் கவிஞர் (பி. 1940)
  • 2007 - ஓ. பி. நாயர், இந்தித் திரைப்பட இசையமைப்பாளர்

Related Posts

Post a Comment

Subscribe Our Posting