Ads 720 x 90

Daily GK Update: Current Affairs in Tamil Medium. Date: 27.01.2017

TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.

நெய்வேலியில் மேலும் ஓர் அனல் மின் நிலையம்: என்எல்சி தலைவர் தகவல்
நெய்வேலியில் மேலும் ஒரு புதிய அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா கூறினார்.

தமிழ்ப் பல்கலை. - மலேசிய பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஆசிரியர் - மாணவர் பரிமாற்றம் தொடர்பாக, தமிழ்ப் பல்கலைக்கழகமும், மலேசியாவில் உள்ள எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகமும் வியாழக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன், மலேசிய எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.


கவிஞர் வைரமுத்துவின் மலையாளச் சிறுகதைகள்: எம்.டி.வாசுதேவன் நாயர் நாளை வெளியிடுகிறார்

கவிஞர் வைரமுத்துவின் "மலையாளச் சிறுகதைகள்' நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (ஜன.28) கேரளத்தில் நடைபெறுகிறது. கவிஞர் வைரமுத்து எழுதிய "வைரமுத்து சிறுகதைகள்' என்ற நூல் மூன்று மாதங்களில் 9 பதிப்புகள் கண்டதாகும். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சிறுகதைகள் "சிறிது நேரம் மனிதனாயிருந்தவன்' என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பத்ம விருதுகள்
தமிழகத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவுக்கு ஆன்மிகப் பணிகளுக்காக பத்ம விபூஷண் விருதும், பத்திரிகையாளர் சோ ராமசாமிக்கு பத்ம பூஷண் விருதும், மாரியப்பன் தங்கவேலுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவித்திருப்பது பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

வேளாண் - தோட்டக்கலை துறைக்கு முதல் பரிசு
குடியரசு தின விழாவில் அரசுத் துறைகளின் திட்டங்கள், செயல்பாடுகளை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காளை மாட்டை முகப்பில் தாங்கி வந்த வேளாண்மைத் துறைக்கு முதல் பரிசு அளிக்கப்பட்டது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற அம்சங்களை உள்ளடக்கி அணி வகுத்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை முகப்பில் தாங்கியும், அதற்குக் கீழே தலைமைச் செயலக பிரதான கட்டடத்தின் வடிவத்தையும் இடம்பெறச் செய்திருந்த செய்தி -மக்கள் தொடர்புத் துறைக்கு மூன்றாம் பரிசு அளிக்கப்பட்டது

மேகாலய ஆளுநர் சண்முகநாதன் ராஜிநாமா
பாலியல் குற்றச்சாட்டையடுத்து, மேகாலய மாநில ஆளுநர் வி.சண்முகநாதன் (67), தனது பதவியை வியாழக்கிழமை இரவு ராஜிநாமா செய்தார்.

ஆற்றல்மிகு நாடுகள் பட்டியல்: 6-ஆவது இடத்தில் இந்தியா
உலகின் ஆற்றல்மிகு நாடுகள் குறித்து அமெரிக்கப் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "தி அமெரிக்கன் இன்டரஸ்ட்' பத்திரிக்கை, உலகின் சக்தி வாய்ந்த முதல் 8 நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள, 2017-ஆம் ஆண்டுக்கான உலகின் முதல் 8 வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 6-ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஆங்கிலம் பேசக் கூடியவர்களின் எண்ணிக்கையில் உலகிலேயே இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இந்தப் பட்டியலில், 
  • முதல் இடத்தை அமெரிக்காவும், 
  • இரண்டாவது இடத்தை சீனா மற்றும் ஜப்பான் ஆகியவை பகிர்ந்து கொண்டுள்ளன. 
  • ரஷியா 4-ஆவது இடத்தையும், 
  • ஜெர்மனி 5-ஆவது இடத்தையும் வகிக்கின்றன. 
  • 7 மற்றும் 8-ஆவது இடங்களில் முறையே ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் கடாகின் காலமானார்
இந்தியாவுக்கான ரஷிய நாட்டுத் தூதர் அலெக்சாண்டர் கடாகின் உடல்நலக் குறைவு காரணமாக தில்லியில் உள்ள மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 67. இந்தியாவுக்கான ரஷிய நாட்டுத் தூதராக தில்லியில் கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து கடாகின் பணியாற்றி வந்தார். கடாகின், முந்தைய சோவியத் யூனியனில் கடந்த 1949-ஆம் ஆண்டு, ஜூலை 22-இல் பிறந்தார். சர்வதேச உறவுகளுக்கான மாஸ்கோ அரசு கல்வி நிலையத்தில் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவில் இஸ்லாமிய நாடுகளிலிருந்து குடியேறுபவர்கள் மீது குடியேற்ற தடை: 
அமெரிக்காவில், இஸ்லாமிய நாடுகளிலிருந்து குடியேறுபவர்கள் மீது குடியேற்ற தடை விதிக்க டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு உத்தேசித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்கர் விழாவில் பங்கேற்கப் போவதில்லை என ஈரானிய நடிகை தராநிக் அலிதோஸ்டி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போதே இஸ்லாமியர்களின் குடியேற்ற விதிகளை மாற்றியமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்தியா மீது சீனா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு
இந்தியா மீது சீனா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் திபெத்-மியான்மர் எல்லை வழியாக வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சினை தொடர்பாக கடந்த 1962-ஆம் ஆண்டு போர் மூண்டது. மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முன்னேறி பல பகுதிகளை சீனப்படையினர் கைப்பற்றிய போதிலும், இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததால் மேலும் முன்னேறாமல் திரும்பியது. பின்னர் போர் முடிவுக்கு வந்தது.

அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் பாதுகாப்புச் சுவர்
அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் மாபெரும் பாதுகாப்புச் சுவர் எழுப்பும் உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டார். முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார். அமெரிக்கா - மெக்சிகோ இடையே பாதுகாப்புச் சுவர் எழுப்புவது தொடர்பான உத்தரவிலும் தகுந்த சான்றுகள் இல்லாமல் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு வந்து, போலி ஆவணங்களுடன் வசித்து வரும் வெளிநாட்டவரை சொந்த நாட்டுக்கு விரைவில் திருப்பி அனுப்பும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டார்.

இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய அரசுப் பதவி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உத்தம் தில்லனுக்கு அதிபரின் சட்ட ஆலோசனைக் குழுவில் முக்கியப் பதவி அளித்து உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதிபர் அலுவலகத்தில் பிரத்தியேக சட்ட ஆலோசனைக் குழு செயல்பட்டு வருகிறது. மூத்த வழக்குரைஞரான டொனால்ட் மெக்கான் அந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கி வருகிறார். இந்நிலையில், அந்தக் குழுவில் சட்ட அமலாக்கம், சட்ட ஒழுங்குப் பிரிவுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உத்தம் தில்லன் நியமிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இந்திய குடியரசு தினம்: மூவர்ண நிறத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா கட்டடம்
இந்திய குடியரசு தின விழாவை கௌரவிக்கும் வகையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைப் பெற்ற புர்ஜ் கலிபா நேற்று மூவர்ண நிறத்தில் ஒளிர்ந்தது.

வரலாற்றில் இன்று ஜனவரி 27
1695 - ஓட்டோமான் பேரரசின் மன்னன் இரண்டாம் அஹமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா மன்னனானான்.
1880 - தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.
1888 - தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) வாஷிங்டன் டிசியில் அமைக்கப்பட்டது.
1915 - ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர்.
1918 - பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1924 - விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
1926 - ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.
1938 - நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.
1944 - இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகளின் இரண்டாண்டு லெனின்கிராட் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
1945 - இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.
1967 - அப்பொலோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.
1973 - வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது.
1996 - நைஜரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு இராணுவத் தளபதி இப்ராகிம் மயினாசரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
2002 - நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இராணுவக் களஞ்சியமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 1,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்
1756 - வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட், ஐரோப்பிய செவ்வியல் இசையமைப்பாளர் (இ. 1791)
1775 - பிரீடரிக் ஷெல்லிங், ஜெர்மனிய மெய்யியல் அறிஞர் (இ. 1854)
1832 - லூயிஸ் கரோல், ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் (இ. 1898)
1903 - ஜோன் எக்கில்ஸ், நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலியர் (இ. 1997)
1936 - சாமுவேல் டிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
1944 - மைரேயட் கொரிகன், நோபல் பரிசு பெற்றவர்
1974 - சமிந்த வாஸ், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்
1814 - ஜொகான் ஃபிக்டே, ஜேர்மனிய மெய்யியல் அறிஞர் (பி. 1762)
1893- மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1844)
1967 - அப்பொலோ 1 விண்வெளிவீரர்கள்:
எட்வர்ட் வைட், (பி. 1930)
வேர்ஜில் கிறிசம், (பி. 1926)

Post a Comment

0 Comments