Ads 720 x 90

Daily GK Update: Current Affairs in Tamil Medium. Date: 13.01.2017

TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.

தமிழறிஞர் ச.வே.சு. காலமானார்
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநரும் தமிழறிஞருமான ச.வே.சுப்பிரமணியன் (87) ஜன. 12ஆம் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை காலமானார். உடல்நலக் குறைவால் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மரணமடைந்தார். 1984ஆம் ஆண்டு கம்பன் இலக்கிய உத்திகள் என்ற நூலுக்கு தமிழக அரசின் முதல் பரிசையும், விருதையும் பெற்றார். 1999இல் சாகித்ய அகாதெமி வழங்கிய பாஷாம்மாள் என்ற விருது, 2004இல் தொல்காப்பியச் செம்மல் விருது, 2009இல் கலைஞர் பொற்கிழி விருது, 2013இல் ம.தி.தா. கல்லூரி வழங்கிய தமிழ்க் காவலர் விருது, அதே ஆண்டு தினத்தந்தியின் மூத்த தமிழறிஞர் விருது, 2016இல் குற்றாலம் முத்தமிழ் அறிவியல் மன்றம் வழங்கிய தமிழாய்வுச் சிகரம் விருது, கம்பன் விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, ராசா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு உள்பட 29 விருதுகளை பெற்றுள்ளார்.

ஜனவரி இறுதியில் மாநில சிறார் கொள்கை வரைவு
தேசிய சிறார் கொள்கையின் தொடர்ச்சியாக தயாரிக்கப்பட்டு வரும் மாநில அரசின் சிறார் கொள்கைக்கான வரைவு அறிக்கையை, ஜனவரி இறுதியில் விவாதத்துக்குக் கொண்டு வர, தமிழ்நாடு மாநில சிறார் உரிமைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேசிய சிறார் உரிமைகள் ஆணையம் சார்பில், கடந்த 2012-ல் தயாரிக்கப்பட்ட தேசிய சிறார் கொள்கையை, மத்திய அரசு 2013ஆம் ஆண்டு ஏற்றது. இதன் தொடர்ச்சியாக மாநிலங்களில் சிறார் கொள்கையை வரையறுத்து அறிவிக்க அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, தமிழ்நாடு மாநில சிறார் உரிமைகள் ஆணையம் கடந்த 2015 மார்ச் மாதம் சிறார் கொள்கை தயாரிக்கும் பணியைத் தொடங்கியது. வரைவு அறிக்கை தயாரிப்புப் பணிகள் குறித்து ஆணையத்தின் உறுப்பினரும், வரைவுக் கொள்கை தயாரிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் டி. ரேவதி கூறியது: வரைவுக் கொள்கை தயாரிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றன. ஜனவரி இறுதியில் நடைபெற உள்ள கொள்கை வரைவு தயாரிப்புக் குழு மற்றும் ஆணைய உறுப்பினர்கள் கூட்டங்களில் வரைவு அறிக்கை முன்வைக்கப்படும். இவற்றில் இறுதி செய்யப்படும் அறிக்கை மாநில அரசிடம் வழங்கப்படும் என்றார் அவர்.

கேரளத்தில் ஏப். 1 முதல் உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல் 
கேரள மாநிலத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. இதுகுறித்து திருவனந்தபுரத்தில் உணவு மற்றும் குடிமைப் பொருள் விநியோகத் துறை அமைச்சர் பி.திலோத்தமன் வியாழக்கிழமை கூறியதாவது: வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கேரளத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்படும்.

ஸ்கார்ப்பீன் ரக 2-ஆவது நீர்மூழ்கிக் கப்பல்: நாட்டுக்கு அர்பணிப்பு
ஸ்கார்ப்பீன் ரக 2-ஆவது நீர்முழ்கிக் கப்பலான "கந்தேரி' நாட்டுக்கு வியாழக்கிழமை அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பல், நிகழாண்டு இறுதியில் கடற்படையில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் உள்ள மஸகான் கப்பல் கட்டும் தளத்தில் "கந்தேரி' நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ப்ரே, அவரது மனைவி பீனா பாம்ப்ரே, கடற்படைத் தளபதி சுனில் லான்பா ஆகியோர் கலந்து கொண்டனர். நீர்மூழ்கிக் கப்பலை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியை சுபாஷ் பாம்ப்ரே தொடங்கி வைத்தார். இதையடுத்து, பீனா பாம்ப்ரேயும், சுனில் லான்பாவும் அந்தக் கப்பலைத் தொடங்கி வைத்தனர்.

சுஷ்மா ஸ்வராஜ் எச்சரிக்கை எதிரொலி: இந்திய தேசியக் கொடியுடனான மிதியடி விற்பனையை நிறுத்தியது அமேஸான்
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்திய தேசிய கொடியின் படம் பதித்த மிதியடியை விற்பனை பட்டியலில் இருந்து அமேஸான் நிறுவனம் உடனடியாக நீக்கிவிட்டது. இந்திய தேசிய கொடியின் படம் பதித்த மிதியடியை விற்பனை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்; தனது முந்தைய செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பை அமேஸான் நிறுவனம் கேட்க வேண்டும், இல்லையெனில், அமேஸான் நிறுவனத்தைச் சேர்ந்த யாருக்கும் இந்தியாவுக்கு வர நுழைவு இசைவு சீட்டு வழங்கப்பட மாட்டாது. ஏற்கெனவே வழங்கப்பட்ட நுழைவு இசைவு ரத்து செய்யப்படும்' என்று சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தார்.இதுகுறித்து "அமேஸான் இந்தியா' பிரிவு துணைத் தலைவர் அமித் அகர்வால் கூறுகையில், "இந்தியச் சட்டத்துக்கு "அமேஸான் இந்தியா' மதிப்பு அளிக்கிறது. அமேஸான் கனடா பிரிவு இணைய அங்காடியில் இந்திய தேசியக் கொடி பதிக்கப்பட்ட மிதியடிகளை விற்பனை செய்ததற்கு வருந்துகிறோம்' என்றார்.

பிரதமரின் பயணச் செலவு விவரங்களை வெளியிட முடியாது: மத்திய தகவல் ஆணையம்
பிரதமரின் வெளிநாட்டுப் பயணச் செலவு உள்ளிட்ட விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயண விவரங்களைக் கோரி முன்னாள் கடற்படை அதிகாரி லோகேஷ் பத்ரா என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை பரிசீலித்த மத்திய தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர், வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு விவரம்: பிரதமரின் விமானப் பயண நடைமுறைகள் உளவுத் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இதுதொடர்பான தகவல்களை வெளியிட தேவையில்லை என்று தகவலறியும் உரிமைச் சட்டம் 24-வது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, மனுதாரர் கோரியுள்ள தகவல்களை வெளியிட இயலாது என தனது உத்தரவில் மத்திய தகவல் ஆணையம் தெரிவித்தது.

தில்லியில் ஜன. 17 முதல் 3 நாள் மாநாடு: சர்வதேசத் தலைவர்கள் உரை
உலக நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக தில்லியில் அடுத்த வாரம் நடைபெற உள்ள மூன்று நாள் கருத்தரங்கில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும், ராணுவ அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். உலக நாடுகளிடையே தொடர்பு, ஆசிய-பசிபிக் அரசியல், பயங்கரவாதிகளையும், நாடு கடந்த குற்றவாளிகளையும் எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக தில்லியில் வரும் 17-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்தக் கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். 

ஒடிஸா: அதிநவீன "பினாகா-2' ஏவுகணை சோதனை வெற்றி
ஒடிஸா மாநிலம், பாலாசோர் மாவட்டத்தில் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து அதிநவீன மேம்படுத்தப்பட்ட "பினாகா' மார்க்-2 ஏவுகணை வெற்றிகரமாக வியாழக்கிழமை சோதிக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள போர்க்கருவிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஏஆர்டிஈ), தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டிஆர்டிஎல்) ஆகியவை இணைந்து "பினாகா' மார்க்-2 ஏவுகணையை உருவாக்கின.

டாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரன் நியமனம்
டாடா சன்ஸ் இயக்குநர்கள் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், தற்போது, டி.சி.எஸ். தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான என். சந்திரசேகரனை டாடா சன்ஸ் தலைவராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. தேர்வுக் குழு ஒருமனதாக பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவரது சீரிய தலைமையின் கீழ் டாடா குழும நிறுவனங்கள் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி ரீஜனல் இன்ஜியனியரிங் கல்லூரியில் (ஆர்.இ.சி.) கம்யூட்டர் அப்ளிகேஷன் பட்டமேற்படிப்பை முடித்த என். சந்திரசேகரன் கடந்த 1987-ஆம் ஆண்டு டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர், படிப்படியாக பதவி உயர்வு பெற்று நிர்வாக இயக்குநரானார். இவர், மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

100-ஆவது டெஸ்டில் சதமடித்தார் ஆம்லா
இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா சதமடித்தார். இதன்மூலம் 100-ஆவது டெஸ்டில் சதமடித்த 8-ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 7-ஆவது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் ஆம்லா பெற்றுள்ளார்.

கால்பந்து தரவரிசை: 129-ஆவது இடத்தில் இந்தியா
சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 129-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணியின் அதிகபட்ச தரவரிசை இதுதான். கடந்த ஆண்டு 11 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி, அதில் 9-இல் வெற்றி கண்டது. இதன்மூலம் சர்வதேச தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளது . இந்திய அணி இதற்கு முன்னர் 2005-ஆம் ஆண்டில் 127-ஆவது இடத்தைப் பிடித்தது. அதன்பிறகு இப்போதுதான் பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது.

Post a Comment

0 Comments