TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
Following Current Affairs Covering news of States National, International, Business and Sports.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சோ.ராமசாமி (82) மாரடைப்பு காரணமாக இன்று காலை 5 மணி அளவில் காலமானார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். சோ ராமசாமி 1934 அக்டோபர் 5-ல் சென்னையில் ஸ்ரீநிவாசன், ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். இவர் 1999 முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். பத்திரிக்கை ஆசிரியர், வழக்கறிஞர், நகைச்சுவை நடிகர், திரைப்பட இயக்குநர் என பன்முக தன்மை கொண்டவர். பத்திரிக்கை துறையின் சிறந்த சேவைக்காக 1985 இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றுள்ளார்.
- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதைகளுடன் செவ்வாய்க்கிழமை (டிச.6) மாலை 6.05 மணிக்கு சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதாவின் (வயது 68) உடல், சென்னை போயஸ் தோட்ட இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மதரீதியான சில சடங்குகள் செய்யப்பட்ட நிலையில், காலை 5.45 மணியளவில் அவரது உடல் மீது அதிமுக கட்சிக் கொடி போர்த்தப்பட்டது; அவசர ஊர்தி வாகனத்தில் ராஜாஜி அரங்கத்துக்கு காலை 6.10 மணிக்கு கொண்டு வரப்பட்டு, அவரது உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டது.
- திரவ நிலை இயற்கை எரிவாயுவுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய இறக்குமதி நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. சர்வதேச எரிசக்தி அமைப்பின் 5வது மாநாடு தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்தியாவின் எரிசக்தி பயன்பாட்டில் இயற்கை எரிவாயு பயன்பாட்டை தற்போதைய 6 சதவீதம் என்ற அளவிலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிக அளவில் சார்ந்து இருப்பதை கட்டுப்படுத்த முடியும்.
- திரவ நிலை இயற்கை எரிவாயு இறக்குமதியில் ஜப்பானுடன் இந்தியா கைகோத்துள்ளது. அந்த வகையில், தென்கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனும் கைகோக்க இந்தியா ஆர்வமாக உள்ளது. இதனால் நியாயமான விலையில் எரிபொருள்களை பெறமுடியும் என்றார் அவர்.
- உள்நாட்டில் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் இயற்கை எரிவாயு-புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களுக்கான சந்தையை விரிவுபடுத்துவதன் மூலம் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் இறக்குமதியை 10 சதவீதம் குறைக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சட்டமேதை டாக்டர் அம்பேத்கருக்கு இந்த தேசம் என்றென்றைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். அம்பேத்கரின் நினைவு தினம் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (டிச.6) அனுசரிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்துக்குள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 2017-ஆம் ஆண்டுக்குள் காணொலி முறை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த மாநில அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் விடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புதிய ரூ.100 நோட்டுகளை விரைவில் புழக்கத்தில் விடுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய ரூபாய் நோட்டுகளில் இருப்பதைப் போலவே புதிய ரூ.100 நோட்டுகளிலும் மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருக்கும்.
- உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, நீதிபதி ஜே.எஸ்.கேஹர் அடுத்த மாதம் பதவியேற்க உள்ளார். இப்பொறுப்புக்கு மூத்த நீதிபதியான அவரது பெயரைப் பரிந்துரைத்து தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பினார். அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அடுத்த ஆண்டு (2017) ஜனவரி 4-ஆம் தேதி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். உச்ச நீதிமன்றத்தின் 44-ஆவது தலைமை நீதிபதியாகப் அவர் பொறுப்பேற்பார். சீக்கிய சமூகத்தில் இருந்து வரும் முதல் தலைமை நீதிபதியாக கேஹர் இருப்பார். அவர் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை (ஏழு மாதங்களுக்கு) அப்பதவியில் நீடிப்பார். அதன் பிறகு ஓய்வுபெறுவார்.
- இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமத்ரா தீவுகளின் ஆசே மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி இருந்தது.
- நவம்பர் 8-ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து பொதுமக்களால் வங்கிகளில் செலுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என்ற விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மாதத்திற்கு இருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை பரிசீலனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில் வங்கிகளுக்கான வட்டிவிகிதம் 6.5 சதவீதமாக அப்படியே நீடிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதே போல் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு முன்னோட்டமானது 7.6 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதன் பிறகான செய்தியாளர் சந்திப்பில் பேசும் பொழுது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆர்.காந்தி, ' பண மதிப்பு நீக்க நடவடிக்கைகயை அடுத்து இதுவரை 11.85 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளன' என்ற தகவலை தெரிவித்தார்.
- 2016-ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் "டைம்' பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த பத்திரிகையின் இணையதள வாசகர்கள் மத்தியில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்ட வாசகர்களில், 18 சதவீதம் பேரின் வாக்குகளைப் பெற்று பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டிரம்ப், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே ஆகியோருக்கு 7 சதவீத வாக்குகளே கிடைத்தன. முகநூல் நிறுவனர் சக்கர்பெக், அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியாருக்கு 2 சதவீத வாக்குகளே கிடைத்தன.
- பிரான்ஸ் பிரதமர் மானுவல் வால்ஸ் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சோஷலிசக் கட்சி சார்பில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அவர் அறிவித்தார். அவர் ராஜிநாமா அறிவிப்பைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த பெர்னார்டு காஸனூவ் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார். பிரான்ஸில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் கடந்த இரண்டு ஆண்டு காலமாக நிகழ்த்தி வந்த பல்வேறு தாக்குதல்களையடுத்து, நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களை மிகவும் நுட்பமாகக் கையாண்டு வந்து பாராட்டைப் பெற்றவர் பெர்னார்டு காஸனூவ்.
- கோபா சுடமெரிக்கானா' கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்றபோது விமான விபத்தில் உயிரிழந்த பிரேசில் நாட்டு கிளப் கால்பந்து அணிக்கு அந்தப் போட்டியின் சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
__________
Courtesy: Dinamani
Post a Comment