TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
உலக மாற்றுத் திறனாளிகள் தினம்:
இன்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
புனித யாத்திரை தலமாகிறது அம்பேத்கர் நினைவிடம்
மும்பையில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான "சைத்ய பூமி'யை முதல் தரமான புனித யாத்திரைத் தலம் மற்றும் சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார். அம்பேத்கரும், அவரது ஆதரவாளர்களும் 1956-ஆம் ஆண்டு பெüத்த மதத்தைத் தழுவிய நாகபுரியில் உள்ள தீக்ஷா பூமியை முதல் தரமான புனித யாத்திரைத் தலம் மற்றும் சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு மகாராஷ்டிர அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது.
சீனக் கப்பல்களின் ஊடுருவல்: இந்தியா தீவிர கண்காணிப்பு
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கடற்படையின் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை சீனக் கடற்படை நிறுத்தி வைத்து, கடற்பகுதியில் அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படை நிறுத்தி வைத்துள்ளது. அந்த நீர்மூழ்கிக் கப்பல், பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து வந்துள்ளது.
இந்தியப் பொருளாதாரம் 2017-இல் 7.6% வளர்ச்சியை எட்டும்: ஐ.நா. சபையில் தகவல்
இந்தியாவில் முதலீடுகள் மீண்டும் அதிகரித்து வருவதாலும் அந்நாட்டில் மேற்கொள்ளப்படும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக உற்பத்தித் துறை வலுவடைந்து வருவதாலும் நிகழ் நிதியாண்டிலும், அடுத்த நிதியாண்டிலும் (2017-18) நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் ஐ.நா. சபை கணித்துள்ளது. ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா. சபையின் ஆணையத்தின் சார்பில், அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் முதலீடுகள் மீண்டும் அதிகரித்து வருவதாலும் அந்நாட்டில் மேற்கொள்ளப்படும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளால் உற்பத்தித் துறை வலுவடைந்து வருவதாலும் அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக உயரும்.
அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடவில்லை: பிரான்சுவா ஹொலாந்த் அறிவிப்பு
பிரான்ஸில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தற்போதைய அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் வெள்ளிக்கிழமை அறிவித்தார். தற்போது பிரதமராகப் பொறுப்பு வகித்து வருகிற மானுவல் வால்ஸ் சோஷலிச கட்சி சார்பில் ஹொலாந்துக்கு எதிராகத் தேர்தல் களத்தில் இறங்குவார் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், தான் மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்று பிரான்சுவா ஹொலாந்த் அறிவித்திருக்கிறார். இதையடுத்து, அதிபர் தேர்தலில் சோஷலிச கட்சி வேட்பாளராக மானுவல் வால்ஸ் அறிவிக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. சோஷலிச கட்சியின் வேட்பாளர் தேர்வு ஜனவரி 22, 29 தேதிகளில் நடைபெறும்
அமெரிக்காவைவிட்டு வெளியேறும் நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவை விட்டு வெளியேறி பிற நாடுகளில் தொழிற்சாலைகள் அமைக்க ஆலோசித்து வரும் நிறுவனங்களுக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தார். தொழிலதிபர்கள் அமெரிக்காவில் மாகாணம் விட்டு மாகாணம் செல்லலாம். ஒவ்வொரு மாகாணமும் பல்வேறு தொழில்களுக்கு அளிக்கும் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு புதிய ஆலைகள் அமைப்பது அல்லது ஆலைகளை இடம் மாற்றுவது ஆகியவற்றுக்குத் திட்டமிடலாம். ஆனால் சீனாவிலும் ஆசியாவின் பிற பகுதிகளிலும் ஊதியம் குறைவாகத் தரலாம் என்பதால் சில தொழிலதிபர்கள் அங்கு செல்ல நினைக்கிறார்கள். அவர்கள் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன். அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளுக்கு பாதகம் ஏற்படும் வகையில், வெளிநாடுகளில் பொருள்களைத் தயாரித்துவிட்டு இந்த நாட்டுக்குள் அவற்றை விற்பனைக்கு கொண்டு வந்தால் கடுமையான வரி விதிப்புகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
"டைட்டானிக்' மாதிரி கப்பல் வடிவமைப்பில் சீன நிறுவனம் தீவிரம்
டைட்டானிக் கப்பலின் முழு அளவு மாதிரி கப்பலை வடிவமைக்கும் பணியில் சீனாவைச் சேர்ந்த வூஷுவான் குழுமம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து அந்த குழுமத்தின் அதிகாரி தெரிவித்ததாவது: நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் 300-மீட்டர் நீளம் கொண்ட டைட்டானிக் போன்ற முழு அளவு மாதிரி கப்பலை கட்டமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் 2018-ஆம் ஆண்டு நிறைவடைய உள்ளது. புதிய டைட்டானிக் கப்பல் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் சிச்சுவான் மாகாணத்தில் நிரந்தரமாக காட்சிப்படுத்தப்பட உள்ளது.
"2017-இல் எஸ்.பி.ஐ. லைஃப் பொதுப் பங்கு வெளியீடு
ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு அடுத்த ஆண்டில் நடைபெற வாய்ப்புள்ளது. எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் 2017-ஆம் ஆண்டில் பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்க வாய்ப்புள்ளது. இதன் மூலம், எஸ்.பி.ஐ. லைஃப் நிறுவனத்தில் பாரத ஸ்டேட் வங்கி கொண்டுள்ள 5 சதவீத பங்குகள் வரை விற்கப்படலாம். தற்போதைய நிலையில், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 74 சதவீத பங்கு மூலதனத்தை பாரத ஸ்டேட் வங்கி கொண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் புதிய பிரீமியம் வருவாய் 50 சதவீதம் வளர்ச்சி கண்டது.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உலக சாதனை படைப்பேன்: மாரியப்பன்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020-இல் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் உலக சாதனை படைப்பேன் என்று மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு கூறினார். பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு "மரம் மதுரை' அமைப்பு சார்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
ஃபார்முலா 1 சாம்பியன்: நிகோ ரோஸ்பெர்க் ஓய்வு
இந்த சீசனின் ஃபார்முலா 1 கார் பந்தய சாம்பியனான ஜெர்மனியின் நிகோ ரோஸ்பெர்க் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மெர்ஸிடஸ் டிரைவரான 31 வயது ரோஸ்பெர்க், ஃபார்முலா 1 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற 5 நாள்களிலேயே ஓய்வு பெற்றிருப்பது உலக முழுவதும் உள்ள ஃபார்முலா 1 ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது. 1993-இல் ஆலன் பிராஸ்ட் நடப்பு சாம்பியனாக இருந்தபோது ஓய்வு பெற்றார். அவருக்குப் பிறகு ஓய்வு பெற்ற நடப்பு சாம்பியன் நிகோ ரோஸ்பெர்க் ஆவார்.
மத்திய அமைச்சர்களிடம் பெருமளவில் ரொக்கம்: பட்டியலில் ஜேட்லிக்கு முதலிடம்
மார்ச் 31, 2016 கணக்கின்படி மத்திய அமைச்சர்கள் கையில் வைத்துள்ள ரொக்கம் குறித்த விவரம் அடங்கிய பட்டியல் கிடைத்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். அவரிடம் ரூ.65 லட்சம் ரொக்கம் உள்ளது. ஒருபுறம் சாமானிய மக்கள் பணமின்றி தத்தளித்து வருகின்றனர், மறுபுறம் கிராமவாசிகளிடம் சென்று பிரதமரும், அருண் ஜேட்லியும் இ-வேலட், ஆன் லைன் வர்த்தகம், ரொக்கமற்ற சமுதாயத்தை நோக்கி முன்னேறுவோம் என்று அறைகூவல் விடும் நிலையில், அருண் ஜேட்லி உட்பட அமைச்சர்கள் கையில் பெரிய அளவில் ரொக்கமுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
Courtesy: Dinamani / The Hindu
Courtesy: Dinamani / The Hindu
Post a Comment