3-ஆவது முறையாக முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம்: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை (டிச. 6) அதிகாலை 1 மணி அளவில் பொறுப்பேற்றார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், மறைந்த ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அதே 31 பேர் மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்துக்கும், பிற அமைச்சர்களுக்கும் பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் செய்து வைத்தார்.
சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக...:முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்ற பிறகு, 31 அமைச்சர்களும் ஒரே நேரத்தில் கூட்டாகப் பொறுப்பேற்றனர். முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கூடினர். கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Courtesy: Dinamani
Post a Comment