Type Here to Get Search Results !

TNPSC - Latest Current Affairs in Tamil Medium October 2016 - Date: 06.10.2016

TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc. 

Latest Current Affairs Contains in following Titles:
  • வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு மூன்று பேர் தேர்வு 3 மூலக்கூறு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு
  • நிகழாண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரான்ஸைச் சேர்ந்த ஜீன்-பியர் சவாஜ், பிரிட்டனின்ஜே. ஃபிரேஸர் ஸ்டட்டார்ட், நெதர்லாந்து நாட்டின் பெர்னார்டு ஃபெரிங்கா ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உலகின் மிகச் சிறிய மூலக்கூறு இயந்திரங்களைக் கண்டுபிடித்ததற்காக அவர்களுக்கு அந்தப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
  • ஐ.நா. பொதுச் செயலராகிறார் போர்ச்சுகல் முன்னாள் பிரதமர்
  • போர்ச்சுகல் நாட்டு முன்னாள் பிரதமர் அந்தோனியோ குட்டெரெஸ், ஐ.நா. சபையின் அடுத்த பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
பயங்கரவாத ஒழிப்புக்கு முன்னுரிமை: இந்திய, சிங்கப்பூர் அரசுகளுக்கு பிரணாப் வலியுறுத்தல்
  • இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு புதன்கிழமை சென்று, பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து உரையாடினார். இருநாட்டு நல்லுறவு, வர்த்தகத் தொடர்பு மற்றும் முக்கிய விவகாரங்களில் நீடிக்கும் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து அவர்கள் இருவரும் விவாதித்தனர். பயங்கரவாதத்தை வேரறுக்கும் நடவடிக்கைகளில் இந்தியாவும், சிங்கப்பூரும் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
மாத்யூ புயலுக்கு ஹைட்டி, கியூபாவில் 9 பேர் பலி:
  • அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள "மாத்யூ' புயல் காரணமாக ஹைட்டி மற்றும் கியூபாவில் 9 பேர் உயிரிழந்த நிலையில், அந்தப் புயல் பஹாமாஸையும், அமெரிக்காவையும் நோக்கி முன்னேறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணு ஆயுதப் போட்டி: இந்தியாவுக்கு எதிரான மனு சர்வதேச நீதிமன்றத்தில் தள்ளுபடி
  • அணு ஆயுதப் போட்டியை தடுத்து நிறுத்தத் தவறியதாக இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டனுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மார்ஷல் தீவுகள் தாக்கல் செய்த மனு, புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 16 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, இதுதொடர்பாக விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்ற வாதத்தை ஏற்பதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.
ஜிசாட்-18 செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ). தொலைதொடர்பு வசதியை வலுப்படுத்துவதற்காக ‘ஜிசாட்-18’ என்ற செயற்கைகோளை ஏரியன்-5 வி.ஏ-231 ராக்கெட் மூலம் இன்று (06.10.2016) அதிகாலை 2 மணி அளவில் விண்ணில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவையான சி மற்றும் கியூ பேண்ட் சேவைகளை 15 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.எல்.சி. இந்தியா தலைவருக்கு 2 விருதுகள்
  • ஜார்க்கண்ட் மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, இரண்டாவது தகவல் தொழில்நுட்ப மாநாடு அக்டோபர் 4-ஆம் தேதி ராஞ்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் என்.எல்.சி. இந்தியா தலைவர் சரத்குமார் ஆச்சார்யாவுக்கு சிறந்த பொதுத் துறை நிறுவன தலைமை அதிகாரிக்கான விருதை வழங்கியது. இந்த விருதை என்.எல்.சி. வர்த்தகத் துறை செயல் இயக்குநர் ஆர்.மோகன் பெற்றுக்கொண்டார். இதேபோன்று, மும்பையில் வர்த்தக இதழான பிஸ்னஸ் வேர்ல்ட் செவ்வாய்க்கிழமை நடத்திய மனிதவளத் துறை கருத்தரங்கில் சரத்குமார் ஆச்சார்யாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.
செங்கல்பட்டில் 330 ஏக்கரில் மருத்துவப் பூங்கா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • நாட்டிலேயே முதல் முறையாக செங்கல்பட்டில் மருத்துவப் பூங்கா (மெடி பார்க்) அமைக்க 330 ஏக்கர் அரசு நிலத்தை "துணை குத்தகை' அடிப்படையில் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு
  • சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 கூடுதல் நீதிபதிகள் புதன்கிழமை (ஆக.5) பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 75 நீதிபதிகள் பணியிடத்தில், தற்போது 21 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Post a Comment

0 Comments

Labels