TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
- 2016 ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
- நாட்டில் வறுமை குறைந்து வருகிறது - குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி
- "பசுமை கேரளம்' திட்டத்தின் பிரசாரத் தூதராகிறார் யேசுதாஸ்
- சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளராக நீதிபதி என்.சதீஷ்குமார் நியமனம்
- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு - புதிய நீதிபதிகள் 15 பேரும் நாளை பதவி ஏற்பு
- டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடம்: கோலி சாதனை!
- ரஃபேல் போர் விமானங்கள்: ரிலையன்ஸ்- டஸால்ட் ஏவியேஷன் கூட்டாகத் தயாரிப்பு
- இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (04.10.2016) இந்தியா வருகை
- பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு ரஷியா வரவேற்பு
2016 ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
2016 ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த உயிரணுவியல் விஞ்ஞானி யோஷினோரி ஓசிமி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பழுதடைந்த உயிரணுக்கள்தம்மைத்தாமே அழித்து சுத்தம் செய்துகொள்ளும் , ஆட்டோபஜி. என்றழைக்கப்படும் ' சுய துப்பரவு' செயல்நுட்பம் குறித்த ஆய்வுகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு 1901 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் வறுமை குறைந்து வருகிறது - குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி
நமது நாட்டில் 1974-ஆம் ஆண்டில் வறுமை நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 54.9 சதவீதமாக இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இது 27.5 சதவீதமாக குறைந்தது. இப்போது வறுமை மேலும் குறைந்துள்ளது. எதிர்காலத்தில் வறுமை நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை மேலும் குறையும். இருந்தாலும் நமது நாட்டில் வறுமை என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்தார்.
"பசுமை கேரளம்' திட்டத்தின் பிரசாரத் தூதராகிறார் யேசுதாஸ்
கேரளத்தில் உள்ள நீர் நிலைகள், ஆறுகள் மற்றும் குளங்களைத் தூர்வாரவும், குப்பைகளை ஒழிக்கவும் பினராயி விஜயன் தலைமையிலான அந்த மாநில அரசு திட்டமிட்டது. இதற்கு "பசுமை கேரளம்' எனப் பெயரிடப்பட்டது. இந்தத் திட்டத்துக்கான பிரசாரத் தூதராக செயல்படுமாறு பாடகர் யேசுதாஸிடம் வலியுறுத்தியிருந்ததாகவும், அதற்கு அவர் இசைவு தெரிவித்ததாகவும் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது
சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளராக நீதிபதி என்.சதீஷ்குமார் நியமனம்
தமிழ்நாடு ஜூடிசியல் அகாதெமியின் இயக்குநராக உள்ள மூத்த மாவட்ட நீதிபதி என்.சதீஷ்குமார், சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமிக்கப்படுகிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு - புதிய நீதிபதிகள் 15 பேரும் நாளை பதவி ஏற்பு
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 கூடுதல் நீதிபதிகளும் புதன்கிழமை (அக்.5) பதவியேற்க உள்ளனர். இதையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உயரும்.
டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடம்: கோலி சாதனை
நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என தொடரையும் வென்றுள்ளது. இதனையடுத்து டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ரஃபேல் போர் விமானங்கள்: ரிலையன்ஸ்- டஸால்ட் ஏவியேஷன் கூட்டாகத் தயாரிப்பு
ரஃபேல் போர் விமானங்களைத் தயாரிப்பதற்காக, ரிலையன்ஸ் நிறுவனமும், பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமும் இணைந்து "டஸால்ட் ரிலையன்ஸ் ஏவியேஷன்' என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. பிரான்ஸ் அரசிடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு ரூ.59,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கடந்த 23-ஆம் தேதி கையெழுத்தானது.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (04.10.2016) இந்தியா வருகை
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வருகிறார். தில்லியில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்தியப் பொருளாதார உச்சி மாநாட்டில் வியாழக்கிழமை பங்கேற்கும் அவர் (05.10.2016) அன்று இலங்கை திரும்புகிறார்.
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு ரஷியா வரவேற்பு
பாகிஸ்தான் எல்லைக்குள் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைக்கு ரஷியா வரவேற்பு தெரிவித்துள்ளது. உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் சிறப்புப் படையினர் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தினர்.
Post a Comment