TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
Latest Current Affairs Contains in following titles:
பிகார்: மது விலக்குக்கு புதிய சட்டம் பிறப்பித்தது நிதீஷ் அரசு
மதுவிலக்கு தொடர்பான அறிவிக்கையை ரத்து செய்து பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருநாட்களே ஆகியுள்ள நிலையில், பிகார் அரசு புதிய சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது. பிகாரில் பூரண மது விலக்கை அமல்படுத்துவது தொடர்பான புதிய சட்டத்தை அந்த மாநிலத்தை ஆளும் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்துள்ளது.
ரஃபேல் போர் விமானங்களை முன்கூட்டியே வழங்க பிரான்ஸிடம் வலியுறுத்தல்
ரஃபேல் ரக போர் விமானங்களை திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாகவே வழங்கும்படி பிரான்ஸிடம் இந்தியா வலியுறுத்தியிருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். ஒப்பந்தப்படி 36 மாதத்தில் இருந்துதான் ரஃபேல் ரக போர் விமானங்களை இந்தியாவிடம் அளிக்கும் பணியை பிரான்ஸ் தொடங்கும். ஆனால், அதற்கு முன்னதாகவே இந்தியாவுக்கு அந்த விமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. முடிந்தளவுக்கு அந்த விமானங்களை விரைவில் அளிக்கும்படி பிரான்ஸிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவ், பேராசிரியர் ஆனந்த் குமார் உள்ளிட்டோர் "ஸ்வராஜ் இந்தியா' எனும் புதிய கட்சியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (02.10.2016) தொடங்கினார்கள்.
லால் பகதூர் சாஸ்திரியின் 112-ஆவது பிறந்த தினம்:
முன்னாள் பிரதமர் லால் பகதுர் சாஸ்திரியின் 112-ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (02.10.2016) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தில்லியில் விஜய் காட்டிலுள்ள அவரது நினைவகத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 147-ஆவது பிறந்த தினம்
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 147-ஆவது பிறந்ததினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்: இந்தியா ஒப்புதல்
பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இணைவதற்கு இந்தியா ஞாயிற்றுக்கிழமை (02.10.2016) ஒப்புதல் அளித்தது. இதனால், இந்த ஆண்டு இறுதியிலேயே இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்துக்கு உடன்படுவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்ட ஆவணத்தை, ஐ.நா.வின் ஒப்பந்த விவகாரங்கள் பிரிவின் தலைவர் சான்டியாகோ வில்லால்பாண்டோவிடம் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் அளித்தார்.
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறும் "பிரெக்ஸிட்' நடவடிக்கை
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறும் "பிரெக்ஸிட்' நடவடிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப் போவதாக அந்நாட்டின் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைவது தொடர்பாக 1972-ஆம் ஆண்டு இயற்றிய ஐரோப்பியன் கம்யூனிட்டீஸ் சட்டம் இயற்றப்பட்டது. பிரிட்டனின் இறையாண்மையை அந்தச் சட்டம் மறைக்கிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறி இறையாண்மையுடன் செயல்படும் தனி நாடாக பிரிட்டன் மாறுவதற்கான முதல் படி, அந்த சட்டத்தை ரத்து செய்வதுதான். அது தொடர்பான நடவடிக்கை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இந்தியாவில் இயற்கை இயற்கை ரப்பர் உற்பத்தி 21 சதவீதம் அதிகரித்துள்ளது
இயற்கை ரப்பர் உற்பத்தி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 58,000 டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத உற்பத்தியான 48,000 டன்னுடன் ஒப்பிடுகையில் இது 21 சதவீதம் அதிகமாகும். இதன் இறக்குமதி 37,413 டன்னிலிருந்து 27 சதவீதம் அதிகரித்து 47,540 டன்னாக காணப்பட்டது.
நிர்வாக சீர்திருத்தம் தொடர்பான லோதா கமிட்டி பரிந்துரைகள் பிசிசிஐ நிராகரிப்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) செய்யபபட வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைக்க, உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி லோதா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது.
- பிகார்: மது விலக்குக்கு புதிய சட்டம் பிறப்பித்தது நிதீஷ் அரசு
- ரஃபேல் போர் விமானங்களை முன்கூட்டியே வழங்க பிரான்ஸிடம் வலியுறுத்தல்
- உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி
- லால் பகதூர் சாஸ்திரியின் 112-ஆவது பிறந்த தினம்:
- மகாத்மா காந்தியின் 147-ஆவது பிறந்த தினம்:
- பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்: இந்தியா ஒப்புதல்
- ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறும் "பிரெக்ஸிட்' நடவடிக்கை
- இந்தியாவில் இயற்கை இயற்கை ரப்பர் உற்பத்தி 21 சதவீதம் அதிகரித்துள்ளது
- நிர்வாக சீர்திருத்தம் தொடர்பான லோதா கமிட்டி பரிந்துரைகள் பிசிசிஐ நிராகரிப்பு

Post a Comment