TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
வெறிநாய்க் கடி உயிரிழப்பு: ஆசியாவில் இந்தியா முதலிடம்
ரேபிஸ் உயிர்ப் பலி எண்ணிக்கையில் ஆசிய அளவில் இந்தியா முதலிடத்தையும், வங்கதேசம் இரண்டாம் இடத்தையும் வகிக்கின்றன. இந்தியாவில் வெறிநாய்க் கடியால் ஆண்டுதோறும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், வெறிநாய்களை அழிப்பது அல்லது கட்டுப்படுத்தும் நடவடிக்கை போதுமானதாக இல்லை. பெரும்பாலான நகராட்சிகளில் கருத்தடை வசதிகூட முழுமையாக இல்லை. இதனால், நாய்க் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் போதுமானதாக இல்லை: அருண் ஜேட்லி
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா உலக அரங்கில் மிளிர்ந்தாலும், அந்த வளர்ச்சி போதுமானதாக இல்லை என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் 7.6 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் இந்தியா உலகில் மிக வேகமாக வளரும் நாடாகும் என்று பன்னாட்டு நிதியமும், உலக வங்கியும் கணித்துள்ளன. அசாதாரணமான சூழல் ஏற்படாதவரை, இதுபோன்ற ஆரோக்கியமான பொருளாதாரப் போக்கு தொடரும். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்ற பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இந்த வளர்ச்சிக்கு கைகொடுக்கும் என்றார் அவர்.
அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 5 இந்திய வம்சாவளியினர்
அமெரிக்காவின் மிகப் பெரும் பணக்காரர்களுக்கான பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் இடம் பெற்றுள்ளனர். சிம்பொனி டெக்னாலஜி நிறுவனர் ரமேஷ் வாத்வானி, சின்டெல் பாரத் பணிசேவை நிறுவனர் நீரஜா தேசாய், விமான சேவைத் துறை ஜாம்பவான் ராஜேஷ் கங்வால், தொழிலதிபர் ஜான் கபூர், முதலீட்டு நிபுணர் கவிதார்க் ராம் ஸ்ரீராம் ஆகிய அமெரிக்க இந்தியர்கள், ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் "2016-ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் மிகப் பெரும் 400 பணக்காரர்கள்' பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் கவிதார்க் ராம் ஸ்ரீராம் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் ரமேஷ் வாத்வானி 222-ஆவது இடத்திலும், நீரஜா தேசாய் 274-ஆவது இடத்திலும் உள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடக்க வாய்ப்பில்லை: அமெரிக்காவுக்கான பாக். தூதர்
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி தெரிவித்தார். வாஷிங்டனில் உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தெற்காசியாவில் சிறந்த உள்கட்டமைப்புத் திட்டத்தை செயல்படுத்தும் அரசுக்கான விருது பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. அந்நாட்டு நிதியமைச்சர் இஷாக் தார் சார்பாக விருதை ஜலீல் பெற்றுக் கொண்டார்.
Post a Comment