TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
Latest Current Affairs Contains in following Titles:
Latest Current Affairs Contains in following Titles:
- வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிக்கு சர்வதேச விருது
- வணிகவரி வருவாய் அதிகரிப்பு: தமிழக அரசு தகவல்
- கூடங்குளம் 3, 4-ஆவது அணு உலை கட்டுமானப் பணி: காணொலி மூலம் இன்று தொடக்கம்
வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிக்கு சர்வதேச விருது
- வானிலையைக் கண்காணிப்பதற்கும், கணிப்பதற்கும் ஆபத்தான உலோகமான பாதரசத்தால் ஆன கருவிகளுக்குப் பதிலாக டிஜிட்டல் கருவிகளுக்கு மாறுவதற்கு வளரும் நாடுகளுக்குத் தடையை உண்டாக்கும் காரணிகள் எவை என்பது குறித்த ஆய்வு அறிக்கையை விஞ்ஞானி அமுதா சமர்ப்பித்துள்ளார். இதற்காக உலக வானிலை ஆய்வு மைய நிறுவனத்தின் பேராசிரியர் "டாக்டர் வில்ஹோ வைசலா விருது' என்பவரின் பெயரில் 1986-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் விருது செப்டம்பரில் ஸ்பெயினில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி அமுதா ஆவார்
வணிகவரி வருவாய் அதிகரிப்பு: தமிழக அரசு தகவல்
- "நிகழ் நிதியாண்டில் செப்டம்பர் வரை ரூ.31,367.18 கோடி மொத்த வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த வரி கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் வசூலான ரூ.29,172.95 கோடியுடன் ஒப்பிடும்போது ரூ.2,194.23 கோடி கூடுதலாகும்' என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கூடங்குளம் 3, 4-ஆவது அணு உலை கட்டுமானப் பணி: காணொலி மூலம் இன்று தொடக்கம்
- இந்திய-ரஷிய கூட்டு முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணு உலை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 உலைகள் உள்ளன. முதல் உலை செயல்பட தொடங்கி இயங்கி வருகிறது. 2-ஆவது உலையில் அணுப்பிளவு நிகழ்த்தப்பட்டு மின்உற்பத்தி தொடங்கியுள்ளது. இந்நிலையில் 3, 4-ஆவது உலைகளுக்கான அனுமதி பெறப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் கட்டுமானத்துக்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இதன் தொடர்ச்சியாக கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இந்தப் பணிகளை ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கி வைக்கவுள்ளனர்
Post a Comment