Narendra Modi, Vladimir Putin begin bilateral talks on BRICS Summit - 16 Sign Pact:
- Prime Minister Narendra Modi and visiting Russian President Vladimir Putin on Saturday (15.10.2016) began a closed-door bilateral meeting ahead of BRICS heads of states meet in Goa. The two leaders are meeting as part of the annual India-Russia summit following which the two countries are expected to 16 sign key defence, energy and agriculture-related business deals. External Affairs Ministry Spokesperson Vikas Swarup said Modi and Putin "will discuss on a range of issues including defence, counter-terrorism".
பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் முன்னிலையில் 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
- கோவா மாநிலம், பாணாவலி (பெனோலிம்) கடற்கரை நகரில் நடைபெறும் "பிரிக்ஸ்' அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வந்துள்ளார். பாணாவலியில் புதினும், பிரதமர் நரேந்திர மோடியும் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் முன்னிலையில் 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அந்த ஒப்பந்தங்களில், ரஷியாவிடம் இருந்து "எஸ்-400 டிரையம்ப்' எனப்படும் அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியா வாங்குவது, இரு நாடுகளும் இணைந்து ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் 4 போர்க் கப்பல்களை கட்டமைப்பது, "காமோவ்' ரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஏற்படுத்துவது ஆகியவையும் அடங்கும். இந்த 3 ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.43 ஆயிரம் கோடி ஆகும்.
- அதிவேக ரயில்கள் விடுவது குறித்து ஆய்வு: இந்தியா-ரஷியா இடையே கையெழுத்தான ஒப்பந்தங்களில், மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் இருந்து தெலங்கானா மாநிலம், செகந்திராபாதுக்கு மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயில்களை இயக்குவது தொடர்பான ஒப்பந்தமும் ஒன்றாகும்
Courtesy: Dinamani News Paper / Economic Times
Post a Comment