ரூ.5,700 கோடியில் மேக்கேதாட்டு
அணை திட்டம் தயார் - முதல்வர் சித்தராமையா
·
காவிரிப்
பிரச்னை முடிவதற்குள் தமிழகத்துக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில்
மேக்கேதாட்டு அணை கட்ட ரூ.5,700 கோடியில் திட்ட மதிப்பு தயார் செய்துள்ளது
கர்நாடகம். மேக்கேதாட்டு அணையை ரூ.5,700 கோடியில் கட்டுவதற்கான திட்ட விவர
அறிக்கையைத் தயாரித்துள்ளோம். அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டதும், பணிகள் தொடங்கப்படும்.
மேக்கேதாட்டு அணையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை விட்டுவிட்டு எஞ்சியுள்ள
நீரைச் சேமித்து, பெங்களூரு மக்களின் குடிநீர் விநியோகத்துக்கு மட்டுமின்றி, மின்சாரம் உற்பத்தி
செய்யவும் பயன்படுத்தப்படும்.
பாகிஸ்தானுக்கான சிறப்பு
வர்த்தக அந்தஸ்து குறித்து மறுபரிசீலனை: இந்தியா தகவல்
·
பாகிஸ்தானுக்கு
அளிக்கப்பட்ட "மிகவும் விரும்பத்தக்க நாடு' என்ற சிறப்பு வர்த்தக அந்தஸ்தை பாதுகாப்பு
மற்றும் வர்த்தக நலன்களின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப் போவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
கட்டட வரைபட அனுமதியை
எளிமையாக்க ஒடிஸாவில் புதிய ஆன்லைன் முறை அறிமுகம்
·
ஒடிஸாவில்
நகர்ப்புறப் பகுதிகளில் கட்டட வரைபடத்துக்கு அனுமதி அளிக்கும் நடைமுறையை மிகவும்
எளிமைப்படுத்த ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கு அக்.31 வரை
ஒரு பைசாவில் காப்பீடு
·
இந்திய
ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசியில் வெள்ளிக்கிழமை (அக்.7) முதல்
பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் ரயில் பயணிகள், 92 பைசாவுக்குப் பதிலாக ஒரு பைசாவிலேயே பயணக்
காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். இந்தத் திட்டம் இம்மாதம் 31-ஆம் தேதி வரை மட்டுமே
அமலில் இருக்கும். அதன் பிறகு பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது பயணக் காப்பீடு
எடுத்துக் கொள்ளும் பயணிகளிடம் இருந்து ஏற்கெனவே உள்ள முறைப்படி 92 பைசா
வசூலிக்கப்படும்.
தொலைத் தொடர்பு செயற்கைக்கோள்
ஜிசாட்-18 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்
·
இந்தியாவின்
ஜிசாட்-18 செயற்கைக்கோளானது தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் இருந்து
வியாழக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. தொலைத் தொடர்பு சேவைகளை
மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளானது சி-பேண்ட், கூ-பேண்ட் உள்ளிட்ட
உயர் அலைவரிசை சேவைகளை வழங்கப் பயன்படுகிறது. சுமார் 3,404 கிலோ எடை கொண்ட
ஜிசாட்-18 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகளாகும். ஐரோப்பிய விண்வெளி
அமைப்பின் "ஏரியேன்-5' ராக்கெட்டின் வாயிலாக ஜிசாட்-18 செயற்கைக்கோளையும், ஆஸ்திரேலியாவின்
"ஸ்கை மஸ்டர்-2' என்ற செயற்கைக்கோள் வியாழக்கிழமை (06.10.2016) அன்று மதியம் 2
மணிக்கு ஏவுதளத்தில் இருந்து "ஏரியான்-5' ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. சரியாக 32
நிமிடங்கள் 28 விநாடிகளுக்குப் பிறகு ராக்கெட்டிலிருந்து ஜிசாட்-18 செயற்கைக்கோள்
தனியாகப் பிரிந்து சென்றது. இதையடுத்து குறிப்பிட்ட புவி வட்டப் பாதையில் அது
வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ராக்கெட் வாயிலாக
ஏவப்படும் 20-ஆவது இந்திய செயற்கைக்கோள் ஜிசாட்-18 ஆகும்
மதச்சார்பற்ற இந்தியாவில்
"தலாக்' முறைக்கு இடமில்லை
மதச்சார்பற்ற இந்தியாவில் "தலாக்' விவாகரத்து முறைக்கு
இடமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுடனான எல்லை சீல்
வைக்கப்படும் : ராஜ்நாத் சிங் அறிவிப்பு!
·
பாகிஸ்தானுடனான
எல்லைப்பகுதிகள்முழுவதுமாக சீல் வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்தார். மேலும் அவர்
கூறியாதவது: பாகிஸ்தானுடனான எல்லைப்பகுதிகள் 2018-ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக சீல்
வைக்கப்படும். தேசிய பாதுகாப்பு என்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
காஷ்மீரில் நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படைகள் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.
என்றார்.
ஐ.நா. பொதுச் செயலர் பதவி:
அன்டோனியோ குட்டெரெஸ் தேர்வுக்கு இந்தியா வரவேற்பு
·
நியூயார்க்:
ஐ.நா. சபையின் புதிய பொதுச் செயலராக போர்ச்சுகல் நாட்டு முன்னாள் பிரதமர்
அன்டோனியோ குட்டெரெஸ் தேர்வு செய்யப்படுவதை இந்தியா வரவேற்றுள்ளது.
லோதா குழுவின் பரிந்துரைகள்:
பிசிசிஐ-க்கு உச்ச நீதிமன்றம் கெடு
·
லோதா
குழு பரிந்துரைத்த சீர்திருத்தங்களை அமல்படுத்துவோம் என்று வெள்ளிக்கிழமைக்குள்
(அக். 7) பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) உறுதியளிக்க வேண்டும்; இல்லையென்றால் அதற்கான
உத்தரவுகளை நாங்கள் பிறப்பிப்போம் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கண்டிப்புடன்
தெரிவித்தது.
பேளூரில் 1000 ஆண்டுகள்
பழைமையான கல்வெட்டு கண்டெடுப்பு
·
சேலம்
மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூரில் 1000 ஆண்டுகள் பழைமையான, அதாவது கி.பி. 948-ஆம்
ஆண்டு சோழர்கால கல்வெட்டு ஒன்றை சேலம் மாவட்ட வரலாற்றுத் தேடல் குழுவினர்
கண்டெடுத்துள்ளனர்
முதல்முறையாக 4 டன் செயற்கைக்
கோளை சுமந்து செல்லும் ராக்கெட் 2017-இல் ஏவப்படும்: இஸ்ரோ உந்தும வளாக இயக்குநர்
எஸ்.ராகேஷ்
·
முதல்முறையாக
4 டன் எடை கொண்ட செயற்கைக் கோளை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி எம்கே 2 ராக்கெட்
வரும் 2017-ஆம் ஆண்டு ஏவப்படவுள்ளது என, இஸ்ரோ உந்தும வளாக இயக்குநர் எஸ்.ராகேஷ்
கூறினார். இந்தியா சார்பில் இதுவரை 34 செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன.
அதில் 12 செயற்கைக் கோள்கள் தொலைத் தொடர்புக்கானவையாகும். இதுவரை அதிகபட்சம் 2 டன்
எடையுள்ள செயற்கைக் கோள்களை மட்டுமே செலுத்திவந்த நிலையில், வரும் 2017-ஆம் ஆண்டு
முதல்முறையாக 4 டன் எடையுள்ள செயற்கைக் கோளை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி எம்கே
எனும் ராக்கெட்டை செலுத்தவுள்ளோம். வியாழன் கிரகத்தை ஆராய சந்திராயன் 2 விண்கலத்தை
செலுத்த உள்ள நிலையில், சூரியனை ஆராய ஆதித்யா விண்கலத்தை தயார்படுத்தி வருகிறோம். என்றும் தெரிவித்துள்ளார்
பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக
அறிவிக்க முடியாது: அமெரிக்கா
·
பாகிஸ்தானை பயங்கரவாத நாடு என்று அறிவிக்க முடியாது என்று
அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை பயங்கரவாத நாடு என்று அறிவிக்க வகை
செய்யும் மசோதா அல்லது இணையதள கோரிக்கை மனு என எதுவாகயிருந்தாலும் கண்டிப்பாக அதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம். அதே சமயம் அந்த பிராந்தியத்தில் உள்ள
அரசாங்கங்களுடன் தொடர்பு கொண்டு, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக விளங்கும்
தீவிரவாத முகாம்களை அகற்றுவதற்கு உதவுவோம்.
தென் கொரியாவில் "சாபா' புயலுக்கு 6 பேர் பலி
·
தென்
கொரியாவில் "சாபா' புயல் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேரைக்
காணவில்லை. கொரிய தீபகற்பத்தின் தென்கடல் பகுதியில் உருவாகிய சாபா புயல் காரணமாக
கனமழை, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தென் கொரியாவின் பூசான் துறைமுகம், உல்ஸான் நகரம் ஆகியவை
கடும் பாதிப்புக்குள்ளாகின.
அமெரிக்காவில் தீபாவளி சிறப்பு
அஞ்சல் தலை வெளியீடு
·
உலகம்
முழுவதும் உள்ள ஹிந்துக்களால் கொண்டாடப்பட்டுவரும் தீபாவளி பண்டிகையை
நினைவுபடுத்தும் விதமாக அமெரிக்க அஞ்சல் துறை புதன்கிழமை (05.10.2016) அன்று
சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
Post a Comment