TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
- 2016 ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
- துருக்கியில் நெருக்கடி நிலை நீட்டிப்பு
- மூளைக்காய்ச்சலுக்கு 30 குழந்தைகள் பலி: ஒடிஸாவுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்
- பாகிஸ்தானுடனான போர்ச் சூழல் சவால்களைச் சந்திக்கத் தயார்
- பயங்கரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா-சிங்கப்பூர் முடிவு
- 2017 முதல் மறுமதிப்பீடு ரத்து: சிபிஎஸ்இ முடிவு
- "வெளிச்சத்துக்கு வந்த கருப்புப் பணம் ரூ.71,000 கோடி'
- மாநிலங்களவை உறுப்பினராகநடிகை ரூபா கங்குலி நியமனம்
- லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன், சி.வி.சந்திரசேகர், உள்பட 42 பேருக்கு சங்கீத நாடக அகாதெமி விருது
- ராணுவத்தினருக்கு ரயிலில் இடஒதுக்கீடு: தொலை நகல் எண் அறிமுகம்
- திருப்பூர் குமரனின் 113-ஆவது பிறந்த நாள் விழா
- ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்திய மகளிர் அணிக்கு வந்தனா கேப்டன்
- ரிசர்வ் வங்கியின் குறுகியகால கடன்வட்டி 0.25 சதவீதம் குறைப்பு
2016 ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2016 ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் தெளலாஸ், டங்கன் ஹால்டேன், மைக்கேல் காஸ்டெர்லிட்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அசாதாரணப் பொருள்களின் பொருண்மை குறித்து மேற்கொண்ட ஆய்வுகளுக்காக அந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. முழு மின்கடத்திகள் (சூப்பர் கண்டக்டர்), பாகுத்தன்மை முற்றிலுமற்ற திரவங்கள் (சூப்பர் ஃப்ளூயிட்), மிக மெல்லிய காந்தத் தகடுகள் போன்ற பொருள்களின் அசாதாராணமான பொருண்மைப் பண்புகளை அந்த மூவரும் உலகுக்கு அறிமுகப்படுத்தினர். அதற்கான ஆய்வுகளுக்கு, மிகச் சிறந்த கணக்கீட்டு முறைகளை அவர்கள் பயன்படுத்தினர். இயற்பியலுக்கான நோபல் பரிசுடன் வழங்கப்படும் 9.36 லட்சம் டாலர் (சுமார் ரூ.6.2 கோடி) பரிசுத் தொகையில் ஒரு பாதி டேவிட் தெளலாஸுக்கும், மற்றொரு பாதி டங்கன் ஹால்டேன், மைக்கேல் காஸ்டெர்லிட்ஸ் ஆகியோருக்கு சமமாகப் பகிர்ந்தும் அளிக்கப்படும்.
துருக்கியில் நெருக்கடி நிலை நீட்டிப்பு
துருக்கியில் நெருக்கடி நிலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அரசு செவ்வாய்க்கிழமை (04.10.2016) அறிவித்தது. அந்த நாட்டில் ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் கடந்த ஜூலை மாதம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வி அடைந்தது. அதையடுத்து, நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அது தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் தற்போதைய அதிபர் எர்டோகன்.
மூளைக்காய்ச்சலுக்கு 30 குழந்தைகள் பலி: ஒடிஸாவுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்
ஒடிஸாவின் மல்கான்கிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 30 குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தது தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாநில சுகாதாரத் துறைச் செயலருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
பாகிஸ்தானுடனான போர்ச் சூழல் சவால்களைச் சந்திக்கத் தயார்
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ச் சூழல் மூண்டுள்ள நிலையில், எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள நாட்டின் முப்படைகளும் தயாராக இருப்பதாக விமானப்படைத் தலைமைத் தளபதி அரூப் ராஹா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா-சிங்கப்பூர் முடிவு
இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது இரு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
மேலும், இச்சந்திப்பின்போது இரு தரப்புக்கும் இடையே அறிவுசார் சொத்துரிமை உள்பட 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பயங்கரவாத எதிர்ப்பு, பொருளாதார உறவுகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது என்று இந்தியாவும், சிங்கப்பூரும் முடிவு செய்துள்ளன
2017 முதல் மறுமதிப்பீடு ரத்து: சிபிஎஸ்இ முடிவு
விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யும் முறையை அடுத்த ஆண்டு (2017) முதல் ரத்து செய்ய மத்திய இடைநிலைப் பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முடிவு செய்துள்ளது
"வெளிச்சத்துக்கு வந்த கருப்புப் பணம் ரூ.71,000 கோடி'
தாமாக முன்வந்து கருப்புப் பணத்தை அறிவிக்கும் திட்டத்தின்கீழ் ரூ.71,000 கோடிக்கும் அதிகமான பணம் வெளிவந்துள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளர் கல்வி நிலையம் (ஐசிஏஐ) தெரிவித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினராகநடிகை ரூபா கங்குலி நியமனம்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகை ரூபா கங்குலி (49) மாநிலங்களவை நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவரால் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அண்மையில் மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், அவருடைய இடத்துக்கு ரூபா கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். நவ்ஜோத் சிங் சித்து ஆவாஸ்-ஏ-பஞ்சாப் என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளார்.
லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன், சி.வி.சந்திரசேகர், உள்பட 42 பேருக்கு சங்கீத நாடக அகாதெமி விருது
இசை, நடனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த தமிழகக் கலைஞர்கள் லால்குடி ஜி.ஜே.ஆர். கிருஷ்ணன், சி.வி.சந்திரசேகர், சுகுணா வரதாச்சாரி, ரங்கநாயகி ஜெயராமன், மாம்பலம் எம்.கே.எஸ்.சிவா உள்பட 42 பேருக்கு 2015-ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமியின் விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார்.
ராணுவத்தினருக்கு ரயிலில் இடஒதுக்கீடு: தொலை நகல் எண் அறிமுகம்
ராணுவத்தினர் ரயிலில் அவசரக் காலத்தில் பயணம் மேற்கொள்வதற்கான இடஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்க வசதியாக, பிரத்யேக தொலைநகல் (ஃபேக்ஸ்) எண்ணை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, ரயிலில் அவசரக்கால இட ஒதுக்கீட்டில் பயணம் செய்ய விரும்பும் ராணுவத்தினர் 044-25353148 என்ற பிரத்யேக தொலைநகல் எண்ணுக்கு பயண விவரங்களை அனுப்பி, ரயிலில் அவசரக்கால இட ஒதுக்கீட்டில் செல்ல விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் குமரனின் 113-ஆவது பிறந்த நாள் விழா
திருப்பூர் குமரனின் 113-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள செ.மேலப்பாளையம் என்ற ஊரில் 1904-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி நாச்சிமுத்து, கருப்பாயி தம்பதிக்கு முதல் மகனாகப் பிறந்தவர் திருப்பூர் குமரன். திருப்பூரில் 1932-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தின்போது, காவலர்களால் தாக்கப்பட்ட குமரன் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்திய மகளிர் அணிக்கு வந்தனா கேப்டன்
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டி சிங்கப்பூரில் வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வந்தனா கட்டாரியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பின்கள வீராங்கனை சுனிதா லகரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் குறுகியகால கடன்வட்டி 0.25 சதவீதம் குறைப்பு
ரிசர்வ் வங்கியின் குறுகியகால கடன்வட்டி 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வட்டிவிகிதம் நிர்ணயிக்கும் குழுவில், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பாக, பிரதிநிதிகள் பங்கேற்று, நாட்டில் நிலவும் பொருளாதார சூழலை கருத்தில்கொண்டு, வட்டிவிகிதத்தை கால் சதவீதம் வரை குறைக்க, ஒப்புதல் அளித்தனர். இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Post a Comment