TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
தமிழக கூடுதல் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவை தமிழகத்துக்கான ஆளுநராக நியமிக்க முடிவு
- தமிழக கூடுதல் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவை தமிழகத்துக்கான ஆளுநராக நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும், மகாரஷ்டிர மாநிலத்துக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியை ஆளுநராக நியமிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயத்தில் தெலங்கானா ஆளுநராக இருக்கும் நரசிம்மன் தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களையும் சேர்த்து கவனித்து வருகிறார். இந்த இரு மாநிலங்களுக்கும் தனித்தனி ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நரசிம்மன் தெலுங்கானா ஆளுநராகவும், கேரள ஆளுநராக இருக்கும் சதா சிவத்தை ஆந்திர ஆளுநராக நியமிக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது
தூத்துக்குடி துறைமுகத்துக்கு 2 போர்க் கப்பல்கள் வருகை
- தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு ஐஎன்எஸ் ரஞ்சித் மற்றும் ஐஎன்எஸ் கோரா என்ற இரண்டு போர்க் கப்பல்கள் சனிக்கிழமை (22.10.2016) வந்தன இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் ரஞ்சித் மற்றும் ஐஎன்எஸ் கோரா ஆகிய இரண்டு போர்க் கப்பல்கள் கொச்சி துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்தன. பெரிய வகை போர்க் கப்பல்களில் ஒன்றான ஐஎன்எஸ் ரஞ்சித் கப்பல் முதல்முறையாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்துள்ளது.
காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு - அக்டோபர் 21
- 1959-ஆம் ஆண்டு அக்டோபர் 21-இல் இந்திய எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில்,மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்ததை நினைவு கூறும் வகையிலும், காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இவர்களுக்கும், நாடு முழுவதும் 2015-ஆம் ஆண்டு செப். 1 முதல் கடந்த ஆகஸ்ட் 31 வரை பணியின்போது இறந்த 473 காவலர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த ஆண்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் என்எல்சி அனல் மின் நிலையப் பணி
- என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் நவீன அனல் மின் நிலையப் பணிகளை மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பியூஸ் கோயல் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார். என்எல்சி இந்தியா நிறுவனம் 2020ஆம் ஆண்டுக்குள் மின் உற்பத்தித் திறனை மணிக்கு சுமார் இரண்டு கோடி யூனிட்டாக (20 ஆயிரம் மெகாவாட்) அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழகம் மட்டுமின்றி ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையங்களை அமைத்து வருகிறது.
தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள்
- தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்படுவது இதுவே முதல் முறை.
"மேதகு ஆளுநர்' ஆளுநர் இனி 'மாண்புமிகு ஆளுநர்'
- ஆளுநரை இனி "மாண்புமிகு ஆளுநர்' எனக் குறிப்பிட வேண்டும் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார். விழாக்கள், அரசு தொடர்பான பணிகள், பிற தகவல் தொடர்புகளில் குறிப்பிடும்போதும் தமிழக ஆளுநரை "மேதகு ஆளுநர்' எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக இனி "மாண்புமிகு ஆளுநர்' என்றே குறிப்பிட வேண்டும். அதேநேரம் வெளிநாட்டு பிரமுகர்களுடனான நிகழ்வுகளில் மட்டும் "மேதகு ஆளுநர்' என்ற சொல்லை பயன்படுத்தலாம் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதய் மின் திட்டத்தில் இணைகிறது தமிழக அரசு: பியூஷ் கோயல் தகவல்
- உதய் மின் திட்டத்தில் இணைந்து கொள்ள தமிழக அரசு விருப்பம் தெரிவித்து உள்ளதாக மத்திய மின்சாரத்துறைஅமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அறிமுகப்படுத்திய உதய் திட்டம் என்பது, பல்வேறு மாநிலங்களில் உள்ள நலிவுற்ற மின் விநியோக நிறுவனங்களை மேம்படுத்த உதவுவதே ஆகும்.
தேசிய போலீஸ் நினைவு தினம்: ராஜ்நாத் சிங் மரியாதை
- ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி போலீஸ் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளையொட்டி, தில்லியில் உள்ள சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள தேசிய போலீஸ் நினைவிடத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை வந்தார். பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் நினைவாக அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால், ஐ.பி. உளவுத்துறை தலைவர் தினேஷ்வர் ஷர்மா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும், துணை ராணுவப் படை அதிகாரிகளும் உடன் இருந்தனர்
சர்வதேச மருத்துவ சங்கத் தலைவராக இந்தியர் நியமனம்
- இந்திய மருத்துவக் கவுன்சில், இந்திய மருத்துவ சங்கம் ஆகியவற்றின் தலைவராக பதவி வகித்தவரான கேதான் தேசாய், சர்வதேச மருத்துவ சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச மருத்துவ சங்கத்தின் சார்பில் தைவான் தலைநகர் தைபேயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில் கேதான் தேசாய் பங்கேற்று உரையாற்றினார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு: அச்சடிக்கும் பணிகள் தீவிரம்
- இந்தியாவில் இதுவரை அதிக மதிப்புள்ளதாக ரூ.1000 நோட்டு இருந்த வந்த நிலையில்,அதனை தோற்கடிக்க 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. மைசூரில் அமைக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் ஆலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி முதல் முறையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்றும் கூறப்படுகிறது.
பஹ்ரைனுக்கு ராஜ்நாத் இன்று (23.10.2016) பயணம்
- பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பது தொடர்பாக விவாதிக்க, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பஹ்ரைன் நாட்டுக்கு மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (23.10.2016) புறப்படுகிறார்.
குஜராத்தில் புதிய மருத்துவமனை: பிரணாப் திறந்து வைத்தார்
- குஜராத் மாநிலம், பருச் மாவட்டத்தில் புதிய மருத்துவமனையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று திறந்து வைத்தார்.
விடைபெற்றது ஐஎன்எஸ் விராட் - உலகின் பழைமையான விமானம்தாங்கி கப்பல்
- உலகின் பழைமையான விமானம்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட்டுக்கு இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை விடை கொடுத்தது. தெற்காசியாவில் மிகவும் பலம் வாய்ந்த விமானம்தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விராட்டில் இருந்து ஒரே நேரத்தில் 18 போர் விமானங்களை விண்ணில் செலுத்த முடியும். 55 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல், பிரிட்டனிடம் இருந்து 1987-ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. அதற்கு முன்பு பிரிட்டிஷ் கடற்படையில் 27 ஆண்டுகள் இக்கப்பல் பயன்படுத்தப்பட்டது. கப்பலின் கடைசி பயணத்தில் தென்பகுதி கடற்படை கமாண்டர் அட்மிரல் நட்கர்னி தலைமையில் கடற்படை அதிகாரிகள் பங்கேற்றுக்கு ஐஎன்எஸ் விராட்டுக்கு பிரியாவிடை அளித்தனர். கடற்படையில் இருந்து ஓய்வு கொடுத்த பிறகு கப்பலை ஆந்திர அரசிடம் ஒப்படைக்க கடற்படை ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளது. இக்கப்பலை வாங்க மிகவும் ஆர்வம்காட்டிய ஆந்திர அரசு, விசாகப்பட்டினத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் அதனைப் பயன்படுத்த இருக்கிறது.
Post a Comment