TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
- இந்தியா-மியான்மர் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
- காஷ்மீரில் இந்தியா-சீனா கூட்டு ராணுவப் பயிற்சி
- இந்தியாவுக்கு மேலும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல்: ரஷியா ஒப்புதல்
- தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற யோசனையை செயல்படுத்துவது சாத்தியமில்லை
- மல்யுத்த வீராங்கனை கீதா போகத் காவல்துறை டிஎஸ்பி-ஆக நியமனம்
- தேர்தல் ஆணையர்களின் சர்வதேச மாநாடு தில்லியில் இன்று நடைபெறுகிறது
- புதிய கட்சி தொடங்கினார் இரோம் சர்மிளா
- இந்திய கடற்படையில் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல் இணைப்பு
- இந்திய டி.வி., சேனல்கள், வானொலிகளுக்கு தடை
- கொச்சியில் ஃபிஃபா யூ-17 உலகக் கோப்பை கால்பந்து: இந்தியாவில் முதன்முறையாக நடைபெறுகிறது
- உலக குத்துச்சண்டை அமைப்பில் இந்திய குத்துச்சண்டை கவுன்சில்
- சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக சாய்னா நேவால் தேர்வு
இந்தியா-மியான்மர் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா, மியான்மர் இடையே பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக, 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வதற்கும் இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூ கீயின் "நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி' கட்சி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக ஆங் சாங் சூ கீ பொறுப்பேற்ற பிறகு, இந்தியா வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
காஷ்மீரில் இந்தியா-சீனா கூட்டு ராணுவப் பயிற்சி
அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேர்வது, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபை அறிவிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரண்டு நாடுகளின் ராணுவப் படைகளும் புதன்கிழமை கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன.
ஜம்மு-காஷ்மீரில் இந்திய-சீன கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான முதலாவது கூட்டு ராணுவப் பயிற்சி, சீனப் பகுதியான கிழக்கு லடாக்கின் சுசல் கார்ரிசனில் உள்ள ஹட் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தியாவுக்கு மேலும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல்: ரஷியா ஒப்புதல்
இந்தியாவுக்கு இரண்டாவதாக ஓர் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை குத்தகைக்கு வழங்க ரஷியா ஒப்புக் கொண்டுள்ளது. ஒரு நீர்மூழ்கிக் கப்பலை குத்தகைக்கு வழங்க ரஷியா ஒப்புக் கொண்டது. இதற்காக சுமார் ரூ.13,325 கோடியை ரஷியாவுக்கு இந்தியா வழங்க இருக்கிறது. அதில், அகுலா 2 ரக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்க ரஷிய பாதுகாப்புத் துறை முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இது உலகின் அதிவேக நீர்மூழ்கிக் கப்பலில் ஒன்றாகும். 2020-21ஆம் ஆண்டில் இந்தக் கப்பல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த 2012-ஆம் ஆண்டு இதே ரக நீர்மூழ்கிக் கப்பலை 10 ஆண்டு கால குத்தகைக்கு இந்தியா வாங்கியுள்ளது.
தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற யோசனையை செயல்படுத்துவது சாத்தியமில்லை
தில்லியில் இன்று (19.10.2016) நடைபெற்ற வாக்களிப்பது தொடர்பான சர்வதேச விழிப்புணர்வு மாநாட்டில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற யோசனையை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.
மல்யுத்த வீராங்கனை கீதா போகத் காவல்துறை டிஎஸ்பி-ஆக நியமனம்
மல்யுத்த வீராங்கனை கீதா போகத், ஹரியாணா மாநில காவல்துறையில் துணை கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மனோகர் லால் கட்டர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, இந்த நியமனம் தொடர்பான மாநில உள்துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தில்லியில் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கீதா போகத் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையர்களின் சர்வதேச மாநாடு தில்லியில் இன்று நடைபெறுகிறது
27 சர்வதேச நாடுகளைச் சேர்ந்த தேர்தல் ஆணையர்கள் கலந்துகொள்ளும் இரண்டு நாள் நடைபெறும் தேர்தல் ஆணையர்களின் சர்வதேச மாநாடு தில்லியில் இன்று (19.10.2016) தொடங்குகிறது. இந்த மாநாட்டில் 27 சர்வதேச நாடுகளைச் சேர்ந்த தேர்தல் ஆணையர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
புதிய கட்சி தொடங்கினார் இரோம் சர்மிளா
மக்கள் எழுச்சி நீதிக் கூட்டணி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியினை சமூக சேவகி இரோம் சர்மிளா செவ்வாய்க்கிழமை (18.10.2016) தொடங்கினார். மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில், அந்த மாநில முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்துப் போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர் இரோம் சர்மிளா. இவர் முன்னெடுத்த இந்தப் போராட்டம் சர்வதேச அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் தனது நெடுங்கால உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக இரோம் சர்மிளா அறிவித்தார். தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, தற்போது புதிய கட்சியை அவர் தொடங்கியுள்ளார்
இந்திய கடற்படையில் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல் இணைப்பு
இந்திய கடற்படையில் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிஹந்த் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐஎன்எஸ் அரிஹந்த் போர்க்கப்பல் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டதாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் இக்கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் தரை, ஆகாயம், கடல் என மூன்று இடங்களில் இருந்தும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் வல்லமையை இந்தியா பெற்றுள்ளது.
இந்திய டி.வி., சேனல்கள், வானொலிகளுக்கு தடை
பாகிஸ்தானில் இந்திய டி.வி., சேனல்கள் மற்றும் வானொலிகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் மின்னணு ஒழுங்குமுறை ஆணையம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, அக்., 21 தேதி முதல் பாகிஸ்தானில் இந்திய டி.வி., சேனல்கள் மற்றும் வானொலி ஒலிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொச்சியில் ஃபிஃபா யூ-17 உலகக் கோப்பை கால்பந்து: இந்தியாவில் முதன்முறையாக நடைபெறுகிறது
17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடத்துவதற்கான இடங்களில் ஒன்றாக, இந்தியாவிலேயே முதன்முறையாக கேரள மாநிலத்தின் கொச்சி நகரம் தேர்வாகியுள்ளது. ஃபிஃபா அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் என 23 பேர் அடங்கிய உயர் மட்டக் குழு கொச்சியில் உள்ள ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தை ஆய்வு செய்த பிறகு, அங்கு போட்டியை நடத்துவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
உலக குத்துச்சண்டை அமைப்பில் இந்திய குத்துச்சண்டை கவுன்சில்
இந்திய தொழில்முறை குத்துச்சண்டை வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் இந்திய குத்துச்சண்டை கவுன்சில் (ஐபிசி), உலக குத்துச்சண்டை அமைப்பில் (டபிள்யூபிஓ) சேர்த்துக்கொள்ளப்பட்டது. பியூர்டோ ரிகோவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக சாய்னா நேவால் தேர்வு
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள ஆணைக்குழு உறுப்பினராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தேர்வாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது
Post a Comment