சர்வதேச யோகா தினம்: சண்டிகரில் நடக்கும் நிகழ்வில் கலந்து கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
- பிரதமர் நரேந்திர மோடி சண்டிகரில் நடக்கும் யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெறும் யோகாசன நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உள்பட 57 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். சண்டீகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் யோகாசன நிகழ்ச்சியில், 150 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியாவின் 2- வது புல்லட் ரயில்
- இந்தியாவின் 2-வது புல்லட் ரயில் சேவை தில்லி - வாராணசி இடையே தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் முக்கிய நகரங்களை புல்லட் ரயில் சேவை மூலம் இணைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டது. அதன்படி இந்தியாவின் வர்த்தக நகரான மும்பை-ஆமதாபாத் இடையே முதல் புல்லட் ரயில் இயக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிதியை டோக்கியோ நிதி நிறுவனம் வழங்குகிறது.
- 2வது புல்லட் ரயில் சேவை தில்லி - வாராணசி இடையே தொடங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் தற்போது 10 முதல் 14 மணி நேரமாக உள்ள தில்லி - வாராணசி இடையே பயண நேரம் 2 மணி நேரம் 40 நிமிடமாக குறையும் எனக் கூறப்படுகிறது. மும்பை - ஆமதாபாத் இடையே செயல்படுத்தப்பட உள்ள புல்லட் ரயில் சேவை 2023-ம் ஆண்டு துவங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பைந்தமிழ்ச் செம்மல் விருது
- புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் மு.பாலசுப்பிரமணியனுக்கு சிறந்த தமிழ்ச் சேவைக்காக பைந்தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம், மணலூர்ப்பேட்டை தமிழ்ச் சங்கம் நிலாமுற்றம் மாத இதழ் சார்பில் மணலூர்பேட்டையில் கடந்த 18-ம் தேதி வானவில் விழா நடந்தது.
ஜம்மு-காஷ்மீரில் ஓராண்டில் பயங்கரவாத தாக்குதலுக்கு 191 பேர் பலி
- ஜம்மு-காஷ்மீரில், கடந்த ஆண்டு (2015) ஜனவரி முதல் நடப்பாண்டின் ஜனவரி வரை பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல்கள், எல்லை தாண்டிய அத்துமீறல்கள் ஆகியவற்றால் 47 பாதுகாப்புப் படை வீரர்கள், 108 பயங்கரவாதிகள் உள்பட 191 பேர் உயிரிழந்தனர்.
மழைக்கால கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றப்படும்: மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி
- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றப்படும் என்றார் மத்திய திறன் மேம்பாடு தொழில் முனைவோர் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி. ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறிய பிறகு நாட்டின் வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை அடையும். நாட்டின் பணவீக்க விகிதம் 2012ஆம் ஆண்டு 8 சதவீதமாக இருந்தது. தற்போது 6 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அரசு கடந்த 2015-16 ஆம் ஆண்டில் மட்டும் 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்துள்ளது.
- கடந்த ஓராண்டில் 7 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சார வசதி செய்யப்பட்டு உள்ளது. 2019ஆம் ஆண்டில் மின்சார வசதி இல்லாத கிராமமே இந்தியாவில் இல்லாத நிலை உருவாக்கப்படும்.
எல்லைப் பாதுகாப்பில் நவீன தொழில்நுட்பம் அறிமுகம்: ராஜ்நாத் சிங்
- நாட்டின் சர்வதேச எல்லைகளைப் பாதுகாப்பதற்கு அதிநவீன தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதை சோதனை முறையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். நமது ராணுவ வீரர்களின் முயற்சியால், நம்முடையை எல்லைப் பகுதிகள் இந்நாள் வரை பாதுகாப்புடன் உள்ளன. தற்போது எல்லைப் பாதுகாப்பில், சிசிடிவி கேமராக்கள், லேசர், ராடார் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளோம். இந்தத் தொழில்நுட்பம், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பெரிதும் உதவிகரமாகப் பயன்படுகிறது.
- இந்தத் தொழில்நுட்பத்தை ஏற்கெனவே குஜராத், மேற்கு வங்கம், பஞ்சாப், திரிபுரா ஆகிய மாநிலங்களில் சோதனை முறையில் அறிமுகம் செய்திருக்கிறோம்.
2015ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 65.3 மில்லியன் மக்கள் அகதிகளாகினர்: ஐ.நா. தகவல்
- 2015-ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 65.3 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறிந்த்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:. 2015-ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 65.3 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இது 2014-ம் ஆண்டை விட 5.8 மில்லியன் அதிகமாகும். மக்களின் இடம்பெயர்வுக்கு வன்முறை, உள்நாட்டு போர் மற்றும் வறுமை முக்கிய காரணமாக உள்ளது.
- உலகின் மொத்த மக்கள் தொகை 7.349 பில்லியன் ஆகும்.
- இதன்படி ஒவ்வொரு 113 பேரில் ஒருவர் உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளுக்கோ அகதியாக இடம்பெயர்கிறார்.
- அதிகபட்சமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த 5 மில்லியன் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
- இதற்கு அடுத்த இடத்தில் சிரியா (4.9 மில்லியன்),
- ஆப்கானிஸ்தான்(2.7 மில்லியன்), சோமாலியா(1.1 மில்லியன்) ஆகிய நாடுகள் உள்ளன.
- 2015 ல் முதல் முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கையில் சிரியாவை சேர்ந்தோர்களும் அதிகமாக இடம்பெற்றுள்ளனர்.
0 Comments