ஆசிய அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்கள்: 43-வது இடத்தில் சென்னை ஐஐடி
- குவாகரெல்லி சைமண்ட்ஸ் (கியூ.எஸ்.) என்ற நிறுவனம் உலக அளவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களை பல்வேறு காரணிகளின் கீழ் ஆய்வு செய்து உலக அளவிலான ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியல், மண்டல வாரியான தரவரிசைப் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இப்போது 2016-ஆம் ஆண்டுக்கான மண்டல வாரியான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆசிய அளவிலான தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி 43-ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு 56-ஆவது இடத்திலிருந்த சென்னை ஐஐடி 2016-இல் 13 இடங்கள் முன்னேறி 43-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில்
- முதல் இடத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும்,
- இரண்டாம் இடத்தில் ஹாங்காங் பல்கலைக்கழகமும்,
- மூன்றாவது இடத்தில் சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும்
- இந்தியாவைச் சேர்ந்த 5 உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் முதல் 50 இடங்களில் இம்முறை இடம்பிடித்து சாதனை படைத்துள்ளன.
- பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) 33-ஆவது இடம் பிடித்துள்ளது.
- ஐஐடி மும்பை 35-ஆவது இடத்திலும்,
- ஐஐடி தில்லி 36-ஆவது இடத்திலும் உள்ளன.
நாட்டில் மொத்த விலை பணவீக்கம் 0.79% உயர்வு
- நாட்டில் மொத்த விலை பணவீக்கம் 0.79% உயர்ந்துள்ளது. காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதே, மொத்த விலை பணவீக்கம் உயர முக்கிய காரணம் என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 0.34% என்றிருந்தது. அதற்கு முன், 17 மாதங்களாக, குறைந்து காணப்பட்டு வந்த மொத்த விலை பணவீக்கம், தற்போது 2 மாதங்களாக உயர்வடைய தொடங்கியுள்ளது. இதுவே, 2015ம் ஆண்டின் மே மாதத்தில் மைனஸ் 2.20% ஆக வீழ்ச்சி கண்டிருந்தது. இதேபோன்று, மே மாதத்தில் நுகர்வோர் பணவீக்க விகிதமும் 5.76% ஆக உயர்வடைந்துள்ளது.
இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள்
- பல்வேறு நாடுகளில் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவைவிட பாகிஸ்தானிடம் அணு ஆயதங்கள் அதிகமாக உள்ளன என்று கூறியுள்ளது.பாகிஸ்தானிடம் 110 முதல் 130 அணு ஆயுதங்கள் வரை உள்ளன. அதே நேரத்தில் இந்தியாவிடம் 100 முதல் 120 அணு ஆயுதங்கள் வரை இருக்கலாம். இந்த ஆண்டு தொடக்கத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 நாடுகளிடம் மட்டும் 15,395 அணு ஆயுதங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த நாடுகளிடம் மொத்தம் 15,850 அணு ஆயுதங்கள் இருந்தன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அசைவப் பிரியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம்
- இந்தியாவிலேயே அசைவப் பிரியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் என்ற பட்டத்தை புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் 99% மக்கள் அசைவப் பிரியர்களாக இருக்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்திய பதிவாளர் துறை சமீபத்தில் நடத்திய ஆய்வில், அடிப்படையில், தெலங்கானாவில் 99 சதவீத மக்கள் அசைவப் பிரியர்களாக இருப்பதாகவும், 98.8 சதவீத ஆண்களும், 98.6 சதவீத பெண்களும் அசைவ உணவையே விரும்பி சாப்பிடுவதாகவும் தெரிய வந்துள்ளது.தெலங்கானாவைத் தொடர்ந்து மேற்கு வங்கம், ஆந்திர மாநிலம், ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.
- இந்தியாவில் சைவப் பிரியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலமாக குஜராத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களும் சைவப் பிரியர்கள் வசிக்கும் மாநிலங்களில் வரிசையில் இடம்பெற்றுள்ளன. குஜராத்தில் 5 பேரில் 2 பேர் அசைவப் பிரியர்களாக உள்ளனர். கிடைத்திருக்கும் புள்ளி விவரத்தின் அடிப்படையில் குஜராத்தில் 61.80 சதவீதம் பேர் சைவப் பிரியர்களாகவும், 39.05% பேர் அசைவப் பிரியர்களாகவும் உள்ளனர்.
லிங்கிட்இன் நிறுவனத்தை வாங்கியது மைக்ரோசாப்ட்
- உலக அளவில் வேலை தேடுவோருக்கான முன்னணி இணையதளமான லிங்கிட்இன் இணையதளத்தை, உலகின் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனம் மைக்ரோசாப்ட் வாங்கியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் லிங்கிட்இன் இணையதளத்தில் உலக முழுவதும் 43 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
- இந்த இணையதளத்தை உலகின் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனம் மைக்ரோசாப்ட் 26.2 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சத்யா நாதல்ல, இந்த வர்த்தகம் மூலம் இரு நிறுவனங்களும் மேலும் வளர்ச்சி அடையும் என்றார்.
ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களும் ஆதரவு
- நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) கொண்டு வருவதற்கான மாதிரி சட்டம் குறித்து விவாதிப்பதற்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் இன்று (14.06.2016) நடந்தது.இந்த மசோதாவை விரைவில் நிறைவேற்றி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி சட்டத்தை முறைப்படி அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த மசோதவை நிறைவேற்ற தமிழ்நாடு, தவிர கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களின் ஆதரவையும் பெறுவிட்டதாக அருண்ஜேட்லி கூறியுள்ளார். மேலும் இன்று நடந்த கூட்டத்தில் 22 மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்
துபை விமான நிலையப் பயன்பாடு: இந்தியர்கள் முதலிடம்
- துபையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தியதில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். உலகிலேயே அதிகமான பயணிகள் துபையில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 69 லட்சம் பேர் இந்தி விமான நிலையத்துக்கு வந்து சென்றுள்ளனர்.
நாட்டை காக்க திரண்டு வாரீர்; விந்தணு தாரீர்; சீனாவில் பரப்பாகும் விழிப்புணர்வு விளம்பரம்
- சீனாவில் தற்போது நாட்டை காக்க திரண்டு வாரீர்; விந்தணு தாரீர் என்ற விளம்பரங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.குழந்தைகள் பிறப்பு பற்றாக்குறையை நீக்க சீன இளைஞர்கள் திரண்டு வந்து விந்தணு தானம் செய்ய வேண்டும் என அந்நாட்டில் பல தரப்பட்ட விளம்பரங்கள் குவிந்து வருகின்றன. "நாட்டின் நலனுக்காக விந்தணு தானம் செய்வீர்" என்று அரசாங்கமே விளம்பரம் செய்து வருகிறது.
Post a Comment