1. உச்ச நீதிமன்றத்தின் 43 - வது புதிய தலைமை நீதிபதியாக தீரத் சிங் தாக்குர் அவர்கள் 03.12.2015 அன்று பதவியேற்றார். குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி அவர்கள் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
2. பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் - அருந்ததி பட்டாச்சார்யா
3. நவம்பர் 26- ஆம் தேதி அரசமைப்பு சட்ட தினமாக அனுசரிக்கபடுகிறது.
4. ஆண்டுதோறும் டிசம்பர் -7 ஆம் நாள் கொடிநாளாக அனுசரிக்கபடுகிறது
5. இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களின் பேச்சுவார்த்தை தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் 06.12.2015 அன்று நடைபெற்றது.
6. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் (டிசம்பர் 6) மகா பரிநிர்வாண்தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
7. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை -ஆமதபாத் இடையே 505 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைய இருக்கிறது. ஜப்பான் நாட்டு ஒத்துழைப்புடன் இத்திட்டம் 2017 ல் தொடங்கி 2023 ல் நிறைவடையும்.
8. இந்தியாவில் 8 சுற்றுசூழல் கண்காணிப்பு மையங்களை அமைப்போம் என்று சுற்றுசூழல் துறை அமைச்சர் பிரகாஸ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். ( உலகின் மொத்த மக்கள் தொகையில் இந்தியா 17 சதவீதமும் , கால்நடைகளில் 17 சதவீதமும் உள்ளது. உலகின் மொத்த நில அளவில் 2.5 சதவீதமும், சுற்றுசூழல் வேறுபாடுகளில் 8 சதவீதமும் இந்தியாவில் நிலவுகிறது. மேலும் இந்தியாவில் 10 கடலோர மாநிலங்களும், இமயமலையே ஒட்டி 10 மாநிலங்களும், அடர்ந்த வனப்பகுதிகளைக்கொண்டதாக 10 மாநிலங்களும், 1300 தீவுகளும் அமைந்துள்ளன.)
9. கருப்பு பணத்தை வெளிநாடுகளில் அதிக அளவில் பதுக்குபவர்கள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் சீனாவும், ரஷ்யா இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ மூன்றாவது இடத்திலும் உள்ளது.
10.நாடுமுழுவதும் வெள்ள எச்சரிக்கை மையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், இதில் தமிழகத்தில் 14 வெள்ள எச்சரிக்கை மையங்களும், ராஜஸ்தானில் 12 வெள்ள எச்சரிக்கை மையங்களும், சிக்கிமில் 8 வெள்ள எச்சரிக்கை மையங்களும் அமைக்கப்படவுள்ளதாக நீர்வள துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
11. 'ஆசியாவின் இதயம் ' என்ற மாநாடு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபத்தில் 09.12.2015 அன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
12. 2015 ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை , அமெரிக்காவின் 'டைம்' ஆங்கில பத்திரிகை தேர்வு செய்துள்ளது.
0 Comments