Type Here to Get Search Results !

Current Affairs in Tamil Medium - December 01.12.2015 to 03.12.2015.

1. டிசம்பர் - 1 எய்ட்ஸ் தினம் அனுசரிக்கபடுகிறது

2. பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா .வின் 21-வது  உச்சி மாநாடு 30.11.2015 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் இந்தியா 2030 ம்  ஆண்டுக்குள் கரியமில வாயுவின் வெளியேற்றத்தை 33 சதவீதம் குறைக்கும் என்றார்.

3. பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் மோடி அவர்கள் பிரான்ஸ் அதிபருடன் சேர்ந்து சர்வ தேச சூரிய சக்தி கூட்டணியே தொடங்கிவைத்தார்.

4. நவம்பர் 5, 2015 ல் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட தங்க சேமிப்பு பத்திர திட்டத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

5. தேசிய நினைவு சின்னம் ( ஆதர்ஸ் ஸ்மாரக் ) திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய அரசு 30.11.2015 அன்று மக்களவையில் அறிவித்தது.

6. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

7. ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர்  - டொனால்டு  டஸ்க்.

8. இந்தியா ( DRDO) - இஸ்ரேல் இணைந்து உருவாக்கிய அதிநவீன ஏவுகணையின் பெயர் : பராக் - 8.

9. தமிழகத்தின் 26-வது தலைமைத் தேர்தல் அதிகாரியாக திரு.ராஜேஷ் லக்கானி அவர்கள் 01.12.2015 அன்று பொறுப்பேற்றார்.

10. அடல் நகர்ப்புற புத்தாக்கம் மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் (அம்ருத் ) தமிழகம் உட்பட 13 மாநிலங்களுக்கு 1000 கோடி நிதியே மத்திய அரசு வழங்கியுள்ளது. அம்ருத் திட்டம் என்பது நகரங்களில் உள்ள வீடுகள் தோறும் குடிநீர்  மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்குவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்டது.

11. 99 சதவீத Facebook பங்குகளை தானம் செய்கிறார்  Facebook - ஐ உருவாக்கிய . அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பர்க்.

Post a Comment

0 Comments

Labels