Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.
விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 33 -ஆக உயர்கிறது.
ஐராவதம் மகாதேவன் நூல்களை நாட்டுடமையாக்கப் பரிசீலனை: முதல்வர் கே.பழனிசாமி
தினமணி' முன்னாள் ஆசிரியரும், தொல்லியல் துறை முதுபெரும் அறிஞருமான மறைந்த ஐராவதம் மகாதேவனின் நூல்களை நாட்டுடமையாக்க அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சென்னையில் அகில பாரத கவி சம்மேளனம்-2019
இந்திய குடியரசு தினத்தையொட்டி தமிழ் உள்ளிட்ட 22 மொழி கவிஞர்கள் பங்கேற்கும் அகில பாரத கவி சம்மேளனம்-2019 சென்னை கலைவாணர் அரங்கில் 10.01.2019 அன்று நடைபெறவுள்ளது. மக்களிடையே தேசிய ஒருமைப்பாடு மற்றும் மொழி நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் அகில பாரத கவி சம்மேளனம் நடத்தப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சியால் தனது அந்தஸ்தை இழந்தது விழுப்புரம் மாவட்டம்
தமிழகத்தில் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானதால், பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டமாக இருந்து வந்த விழுப்புரம் அந்த அந்தஸ்தை இழந்துள்ளது.
அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநர்
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை, கட்டாய விடுப்பில் அனுப்பி, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை செவ்வாய்க்கிழமை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவரை மீண்டும் அப்பொறுப்பில் நியமித்தது
பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நோக்கில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா மக்களவையில் 08.1.2019 அன்று நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
அண்டை நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் 08.1.2019 அன்று நிறைவேற்றப்பட்டது.
டிஎன்ஏ மசோதா நிறைவேற்றம்
விபத்து உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்டோர், குற்றவாளிகள், காணாமல் போன நபர்கள் உள்ளிட்டோரை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு, டெக்ஸிபோனாகிளிக் அமிலம் (டிஎன்ஏ) மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மசோதா மக்களவையில் 08.1.2019 அன்று அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்கப்படும்: நார்வே பிரதமர் உறுதி
இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்கப்படும் என்று 3 நாள்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் உறுதி அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, இந்தியா-நார்வே நாடுகளுக்கிடையே கடல்சார் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளின் கூட்டு முயற்சியில், தாய்-சேய் நலன் சார்ந்த திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
போக்ஸோ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம்
குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடும் நபர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத் (போக்ஸோ சட்டம்) திருத்த மசோதா, மக்களவையில் 08.1.2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இயற்கைப் பேரிடர்களால் ரூ.11 லட்சம் கோடி இழப்பு
ஜெர்மனியைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான மியூனிக் ரே வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகம் முழுவதும் கடந்த 2018-ஆம் ஆண்டு நேரிட்ட இயற்கைப் பேரிடர்கள் காரணமாக, 16,000 கோடி டாலர் (சுமார் ரூ.11.21 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறப்பட்டுள்ளது:
பதவி விலகுகிறார் உலக வங்கித் தலைவர்
உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ஹைபர்சோனிக் என்ஜின்: சீனா வெற்றிகர சோதனை
ஒலியைப் போல 6 மடங்கு வேகத்தில் விமானங்களைப் பறக்கச் செய்வதற்காக சீனா உருவாக்கிய என்ஜின் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டர்போ அடிப்படையிலான இந்த என்ஜின், சீனா உருவாக்கி வரும் ஆளில்லா அதிவேக விமானங்களில் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை மேம்படுத்த நந்தன் நிலகேனி தலைமையில் குழு
நாடு முழுவதும் டிஜிட்டல் வாயிலான பணப்பரிமாற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், அதற்கான பாதுகாப்பை வலுப்படுத்தி மேம்படுத்துவதற்கான வழி முறைகளைக்காண நந்தன் நிலகேனி தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய உயர்மட்ட குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
இந்தியாவின் ஜிடிபி 7.3 % ஆக உயரும் : உலக வங்கி கணிப்பு
2018-19 ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.3 சதவீதமாக உயரும் எனவும், அடுத்த 2 ஆண்டுகளில் இது 7.5 சதவீதமாகும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது. 2017 ல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாகவும் இருந்தது.
கூகுள் குரோமுக்கு போட்டியாக ஜியோ பிரவுசர்
கூகுள் குரோம் பிரவுசருக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 'ஜியோ பிரவுசர்' என்ற ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முதல் பிரவுசர் என்ற பெருமை 'ஜியோ' பிரவுசருக்கு கிடைத்தது. இப்போதைக்கு ஆண்ட்ராய்டு போன்களுக்கு இந்த ஆப் வெளியிடப்பட்டுள்ளது.
ஐஎம்எப் பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்பு
மைசூருவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் கீதா கோபிநாத் (47) என்பவர், ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார அலுவலராக நியமிக்கப்பட்டார்.
TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 09.01.2019 Download PDF
0 Comments