மனிதனை விண்ணுக்கு அனுப்பும் விண்மனிதன் (ககன்யான்) திட்டம்

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் விண்மனிதன் (ககன்யான்) திட்டம் 
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் விண்மனிதன் (ககன்யான்) திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ முனைப்புக் காட்டியுள்ளது. விண்வெளி வீரர்களை ராக்கெட் வழியே விண்ணுக்குக் கொண்டு சென்று, அங்கு விண்வெளி மையத்தில் 7 நாள்கள் தங்கவைத்து, மீண்டும் பூமிக்கு அழைத்துவருவதே இத் திட்டத்தின் நோக்கமாகும். 

மனித விண்ணூர்தி மையம்
இஸ்ரோ, முதல்முறையாக மனிதனை விண்ணுக்கு அனுப்பவிருக்கிறது. இதற்காக தனி மையத்தைத் தொடங்கவிருக்கிறோம். பொறியியல் அறிவுடன் மனிதனை விண்ணுக்கு அழைத்துச் சென்று பூமிக்கு அழைத்து வரவேண்டிய மிகப் பொறுப்பு உள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக பெங்களூரில் மனித விண்ணூர்தி மையம் தொடங்கப்படும். இதன் மைய இயக்குநராக டாக்டர் உண்ணிகிருஷ்ணன் செயல்படுவார். விண் மனிதன் திட்ட இயக்குநராக ஹட்டியன் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter